(3784)

அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார்

இரணங்கொண்ட தெப்பராவர் இன்றியிட்டலுநஃதே

வருணித்தென்னே வடமதுரைப்பிறந்த வன்வண்புகழே

சரணென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்சதிரே.

 

பதவுரை

அற்ற காலைக்கு அரணம் ஆவயர் என்று என்று

கைம்முதலற்ற காலத்திற்குப் புலாகங்சுடடுமென்று பலகாலும் சிந்தித்து

அமைக்கப்பட்டார்

வசப்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள்

இரணம் கொண்ட தெப்பம்            ஆவர்

கடனை இலுத்துக் கொண்டவர்கள் போல் தக்கராயொழிவர்கள்

இன்றி இட்டாலும்

பச்சை யிடாவிட்டாலும்

அஃதே

அவர்களின் உதயாமை உன்னதே

வருணித்து எண்ணே

(இப்படி) இன்றி கெட்டவர்களைப் பற்றிச் சொல்லி என்ன பயன்?

வடமதுரை பிறந்தவன்

வடமதுரையிலே வந்து பிறந்த எண்ணபிராணுடைய

வண் புகழே

சீனம்முதலிய குணங்களையே

சரண் என்று

தஞ்சமென்று கொண்டு

உய்யப் போகில் அல்லால்

உஜ்ஜீவித்துப் போமதொழிய

சதிர் இல்லை

வேறு சதிர்பாடு இல்லை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– சிலரை ஆபத்துக்கு உதவுமவர்களாகக் கொண்டு நெடுநாள் ஆராவதித்தால் அவர்கள் அவ்வாராதனைகளையெல்லாம் பெற்றிருந்து ஆபத்துவந்தவாறே எண்ணற்று உபேக்ஷிப்பர்கள். அப்படியன்றிக்கே நிர்ஹேதுகமாகவந்து அவதரித்து ஆபத்ஸகனுனவனே ஆச்ரயிக்கத் தக்கவனென்கிறுரிப்பாட்டில்.

அற்றகாலைக்கு அரணமாவர் என்றென்று அமைக்கப்பட்டார் 'அற்றகாலைக்கு' என்றது கைம்முதலற்ற காலத்திற்கு என்றபடி. இப்போது நாம் செல்வம் மிக்கவர்களாக இருந்தாலும் வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பதில்லையாதலால் ஒருகால் நமக்கு வறுமை நேருமாயின் அப்போது உதவுவர்கள் என்றெண்ணிச் சிலரிடத்தே பொருளைச் சேமிக்க இட்டு வைப்பாருண்டே; அது சொல்லுகிறது இங்கு.  தைத்திரீயஸ்ஹிதையில் முதற் காண்டம் ஐந்தாவது ப்ரசகத்தின் தொடக்கத்தில்,  தேவாஜீராஜ் ஜம்யத்தா ஆஜந் தே தேவா விஜய முபயந்த;  அக்நௌ வாமம் வஸீ ஸம்ந்யததத இதமுநோ பவிஷ்யதி யதி நோ ஜேஷ்யந்தீதி என்ற ஒர் உபாக்கியான மேதப்பட்டுள்ளது;  தேவர்களும் அசுரர்களும் போர்புரிந்து கொண்டிருந்த காலத்துத் தேவர்களுக்கு வெற்றியுண்டாயிற்றாம்.  அப்போது அத்தேவர்கள் மெற்றொருகால் நமக்குத் தோல்வியுண்டானால் அப்போது உபஜீவிக்க இருக்கட்டும் என்று நினைத்துத் தங்களுடைய சிறந்த செல்வத்தை அக்நிதேவதையிடத்து இட்டுவைத்தார்கப் அந்த தேவதை அதனைக் கொள்ளைகொண்டு அகன்றதாம்.  அக்கதையை இங்கு நினைப்பது.

இப்படி, அற்றகாலைக்கு அரணமாவரென்று கருதி ஆராதிக்கப் பெற்றவர்கள் அக்கருத்தின்படி ஆபத்துக்கு உதவுகிறார்களோ வென்னில்; இரணங்கொண்ட தெட்புராவர் தங்களுக்கு எதோ கடன் செலுத்த வேண்டியிருந்து அதனைச் செலுத்தினதாக நினைத்துக் கிடப்பர்களே யல்லது சிறிதளவும் உதவிபுரியார்கள்.  சக்தியற்ற காளிலுங்கூட இவன் நம்மை இப்போது ஆராதிக்கவில்லையே என்று வெறுத்துமிருப்பர்கள்.  இரணம்–'ருணம்' என்னும் வட சொல்லின் விகாரம். தெப்பர்–தப்ரர் என்பது வடசொல் ; புல்வியர் என்றபடி.

இன்றியிட்டாலும் அஃதே=ஏற்கெனவே பச்சையிட்டு அராதியாமற் போனாலும் ஆபத்து வந்தால் கைவிடுவார்தாம் உளர் என்றபடி. இங்கே ஈடு:– "அன்றிக்கே, இப்படியே இப் பச்சையிட்டவன் நமக்கு ரக்ஷகனென்று ஆராதியா நிற்கச் செய்தே நடுவே இவன முடிவது, அப்போதும் கீழச்சொன்னதுனே பலிதமா மித்தனை."

வருணித்து எண்ணே ! நன்றிகெட்டார்களான உலத்தாரின்படியை வருணிப்பதற்கோ நாம் வாய் படைத்தது ! என்று அதைவிட்டு ஸர்வாக்ஷகன்படியைப் பேசவொருப்படுகிறார்.  இவ்விடத்தில் ந தேம்பா மத்யமா தாந!  கர்ஹிதவ்யா கதஞ்சா தாமேவ இசஷ்வாரு நாதஸ்ய பாநஸ்ய கதாம் குரு என்று இளைய பெருமாளை நோக்கிப் பெருமானருச்செய்த ச்லோகம் ஊட்டில் இன்சுவை மிக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது ஸேவிக்கத் தக்கது

[வடமதுரைப் பிறந்தவன் இத்யாதி] கிர்ஹேதுகமாக உபகாரம் செய்தருள் பவனுடைய ஸெளசீல்யம் முதலிய கல்யாண குணங்களே நமக்கு ரக்ஷகமென்று எண்ணி உஜ்ஜீவித்துப் போமதொழிய வேறொன்றும் நமக்குத் தஞ்சமன்று என்றாராயிற்று "இல்லை கண்டீர் கதிரே" என்றவிடத்து; ஊட்டில் – "நெற்றி பெருந்துப் பலமொன்றுமிற்றிக்கேயிருக்கமென்னுமது இளிம்பிநே; நெற்றி அல்பமாய் பலம் கணக்கப்பெறுமதிதே கதிராவது நமவென்னவிநே நெற்றி;  சமன்கொள்வீறேபலம்" என்கிற ஸ்ரீஸூக்திகளுள்ளன.  இங்கு நெற்றியாவது ப்ரயாஸம்.  நேர்த்தி என்கிற சொல்லே பூருவர்களால் எழுதப்பட்டிருந்ததென்றும், பின்புள்ளவர்களால் அச்சொல் நெற்றியென்று திரித்து எழுதப்பட்டதென்றும் சிலர் சொல்லுவர்; நெற்றி, நேர்த்தி, நேர்ச்சி என்று மூவகைச் சொற்களும் ப்ரயாஸமென்னும் பொருளில் வருவன வென்பர் பலர்.

 

English Translation

Those who are placed as trustees of your wealth, will behave like petty moneylenders in bad days, -what use, need we dilate on this?  The only wisdom there is lies in praising the Lord of Mathura,  He is our hope and refuge

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain