(3781)

கொண்டபெண்டிர்மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும்

கண்டதோடுபட்டதல்லால் காதல்மற்றியதுமில்லை

எண்டிசையுங்கீழும்மேலும் முற்றவமுண்டபிரான்

தொண்டரோமாயுய்யலல்லால் இல்லைகண்டீர்துணையே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள்.  கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார்.  கோண்ட பெண்டிர்–கொள்ளப்பட்ட பெண்டிர் என்றபடி. உயர்ந்தவுறவாகக் கொள்ளப்பட்ட மனைவி (அல்லது) பொருள் முதலிய உபாதிகளாலே பரிக்ரஹிக்கப்பட்ட மனைவி (அல்லது) ஆசார்யனும் பரதேவதையும் செல்வமும் மற்றுமெல்லாம் இவளேயாகக் கொள்ளப்பட்ட மனைவி–என்று பலவகையாகப் பொருள் கூறுவர், கொண்ட என்பதைப் பெண்டிர்க்கு மாத்திரம் பிசேஷணமாகக் கொள்ளுகை அமையும். பந்துக்களாகத் தான் கொண்டிருக்கும் (நினைத்திருக்கும்) மனைவிமுதலான சென்றபடி, உற்றார், சுற்றத்தவர் என்ற வகுப்பு விபாகம்–ஸம்பந்திகளாக ஆக்கிக் கொள்ளப்படுகிறவர்களையும் தாயாதிகளையும் பற்ற ஜன்மஸித்தமான வுறவுடையார் தாயாதிகள் வந்தேறியான வுறவுடையார் ஸம்பந்திகள் என்று வாசிகாண்க. பிறரும் என்றதனால் நண்பர்கள் அடியார்கள் முதலானுரைக் கொள்வது.  ஆக இவர்களெல்லாரும் கையிலே காசுகண்ட போது அதற்காக அன்புகாட்டுகின்றவர்களேயன்றி நிருபாதிகமாக ப்ரீதிவைப் பல்களல்லார்.  "கண்டதோடுபட்டதல்லால்" என்றதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர்;  கையில் காசுகண்டபோது என்பது ஒன்று; நேரில் கண்டபோது என்பது மற்றொன்று, ப்ரத்யஷத்திற்போலவே பரோக்ஷத்திலும் அன்பு காட்டுவாரல்லர் என்றபடி, ஆகவே ஔபாதிகபந்துக்களான இவர்களை யெல்லாம் விட்டொழிந்து நிருபாதிகபந்துவான ஸர்வேத்வானையே சேஷியாகக் கொண்டு உஜ்ஜீவிக்கப்பார்ப்பதே உற்றதென்கிறார் பின்னடிகளில், வர்வேச்லானே நிருபாதிகபந்து வெண்பதற்கு நிரூபமாக ஓர் இதிஹாஸமரூளிச் செய்கிறார் மூன்றாமடியில், மஹாப்ரளயகாலத்தில் உலகங்களையெல்லாம் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்தருளி நோக்கிகானுக நூற்கொள்கை . ஒருவருடைய அபேக்ஷையினாலல்லாமல் நானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக ரக்ஷித்தருளுகையாலே அவனே நிருபாதிகபந்துவாவன்; அப்படிப்பட்டவனுக்கு நம்மதாயிருப்பதொன்று கொடுக்க வேண்டுவதில்லை;  'அவனுக்கு அடியோம்' என்று சொல்லிக் கொண்டு உஜ்ஜீவிக்குமத்தனை யென்றாராயிற்று.

 

English Translation

Wife and children, friends and relatives, have no love save for what they see you have.  The Lord who swallowed the eight Quarters, Heaven, Hell and all else, is our only road to freedom, his worship alone is proper

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain