(3780)

நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,

அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்,

சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,

நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.

 

பதவுரை

நல்ல கோட்பாடு

-

நல்ல கட்டளைப்பாடுடைய

உலகங்கள் மூன்றின் உள்ளும்

-

மூவுலகங்களினுள்ளும்

தான் நிறைந்த

-

வியாபீத்த

அல்லி கமலம் கண்ணனை

-

விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக

அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள்

-

ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள்

இவையும் பத்தும் வல்லார்கள்

-

இவை பத்தையும் ஓதவல்லவர்கள்

கொண்ட பெண்டிர் மக்களே

-

ஸ குடும்பமாக

நல்ல பத்த்தால்

-

பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே

மனை வாழ்வார்

-

க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப்பெற்று ஸகுடும்பமாக வாழப்பெறுவரென்று பயனுரைத்த தலைக்கட்டுகிறார். கீழ்ப்பாட்டில் எந்தக் கோட்பாடு தமக்கு வாய்க்கவேணுமென்று விரும்பினாரோ அந்தக் கோட்பாடு உலகங்களுக்கெல்லாமுள்ளதாகச் சொல்லுகிறாரிங்கு. (ஆசாம்ஸாயாம் பூதவச்ச) என்றார் பாணிநிமுனிவர், அதாவது, இப்படியாகவேணு அந்த ரீதியில், இந்தக் கோட்பாடு அது ஆய்விட்டதாகவே சொல்லுவது முண்டென்கை. அந்த ரீதியில் இந்தக் கோட்பாடு உலகங்கட்கெல்லா முண்டாகவேணுமென்று ஆழ்வார் ஆசம்ஸிக்கிறாரென்று கொள்க.

அல்லிக்கமலக் கண்ணனை –ஆழ்வார் நம்மைவிட்டு நம்மடியாரடியார்களைத் தேடி யோடுகிறாரோ“ என்று எம்பெருமான் வெறுப்படையாமல் “நம்மிடத்திலே இவர் வைத்த அன்பு நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகள் பக்கவிலும் பெருகப் பெற்றதே! என்று மிக வுகந்து அல்விக்கமலக்கண்ணனாயின்ன் என்று கொள்க. எம்பெருமான் இயற்கையாகவே அல்லிக்கமலக்கண்ணனாயிருந்தாலும் அது சொல்லுகிறதன்று இங்கு.

குருகூர்ச்சடகோபன் சொல்லப்பட்டவாயிரம் –வேதம் போலே தான் தோன்றியாயிருக்கை யன்றிக்கே திருவாய்மொழி ஆழ்வார் பக்கலிலே அவ்தரித்து ஆபிஜாத்யம் பெற்ற தாயிற்று.

ஈற்றடியில், இத்திருவாய்மொழிகற்கைக்குச் சொல்லப்படுகிற பலன் ஸம்ஸார வாழ்க்கையாக இருக்கின்றதே, இது கூடுமோ? அடுத்த பதிகத்தில் * கொண்ட பெண்டிர் மக்களுக்குச் சுற்றதவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல்மாற்றி யாதுமில்லை * என்று இகழப்படுகிற குடும்ப வாழ்ச்சியை இங்கு பலவகை அருளிச்செய்யலாமோவென்று சங்கிக்கவேண்டா, குடும்ப வாழ்ச்சி ஸர்வாத்மநாத்யாஜ்யமன்று, கூரத்தாழ்வான், அனந்தாழ்வான் போல்வார் க்ருஹஸ்தாச்ரமவாழ்க்கையிலேயே யிருந்து பகவத் பாகவத கைங்கரியத்திற்குத் துணைவரான களத்ர புத்ராதிகளோடு வாழப்பெற்றவர்களாதலால் இங்ஙனே பயனுரைக்கத் தட்டில்லையென்க. க்ரஹஸ்தாச்யம்ம் ஸர்வோபகாரக்ஷம்மென்று ப்ரஸித்தம், பகவத் பாகவத கைங்கர்யத்திற்கு இணங்காத களத்கயுத்ராதிகள் த்யாஜ்யர்களேயன்றி இதற்கு இங்குமவர்கள் உபாதேயர்களே, இது தோன்றவே “நல்லபத்த்தால் மனைவாழ்வீர்“ என்று விசேஷித்தருளிச் செய்தார்.

இவ்விடத்து ஈட்டில் ஒரு இதிஹாஸமருளிச் செய்கிறார், எம்பெருமானார் திருவனந்தபுரயாத்திரை பெருந்திரளாக எழுந்தருளச் செய்தே திருக்கோட்டியூரலே செல்வநம்பி திருமாளிகையிலே சென்று சேர, அப்போது புருஷர் வெளியூர் சென்றிருந்தாராம், க்ருஹத்திலே நூறுவித்துக் கோட்டை கிடந்த்தாம், வருதியழைத்தாலும் வரமாட்டாத மஹா பாகவதோத்தமர்கள் தாமாக வந்தருளினார்களேயென்று குதூஹலங்கோண்ட நங்கையார் அவ்வளவு நெல்லையும் குத்தித் த்தீயோராதனை நடத்திவிட, மறுநாள் புருஷர் வந்து சேர்ந்து தானியம் ஒன்று மில்லாமையைக் கண்டு செய்திகேட்க, “பரமபத்த்திலே விளைவதாக வித்தினேன்“ என்றாளாம். இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை ஆழ்வாருடைய மங்களாசாஸன பலத்தினால் அமைந்த்தென்று கொள்ளக்கடவது.

 

English Translation

This good decad of the thousand songs by kurugur Satakopan addressing Krishna, Lord-of-blue-lotus-hue, who fills the Universe, will secure a happy domestic life for those who can sing it

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain