(3779)

வாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம்

பூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான்,

நீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங்

கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே!

 

பதவுரை

மா காயா பூகொள் மேனி

-

அழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும்

நான்கு தோள்

-

நான்கு தோள்களையும்

பொன் ஆழி கை

-

அழகிய திருவாழியேந்திய கையையும் உடைய

எம் அம்மான்

-

எம்பெருமானுடைய

நீக்கம் இல்லா

-

பிரிவு இல்லாத

அடியார் தம்

-

அடியார்களுக்கு

அடியார் அடியார் அடியார்

-

சரமாவதிதாஸ பூதர்கள்

எம் கோக்ள்

-

எமக்கு ஸ்வாமிகள்

அவர்க்கே

-

அன்னவர்களுக்கே

குடிகள் ஆய் செல்லும்

-

சேஷவ்ருத்தி பண்ணுங்குலமாயச் செல்லும்படியான

நல்ல கோட்பாடு

-

திடமான அத்யவஸாயமானது

ஊழி ஊழி ஊழி தோறு

-

எஞ்ஞான்றும்

தமியேற்கு

-

அடியேனுக்கு உண்டாக வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார். “தமியேற்கு ஊழி தோறூழியூழி வாய்க்க“ என்கையாலே இப்பேறு தம்மளவிலே பர்யவஸிக்காமல் பரம்பரயா தம்மைச் சார்ந்தவர்கள் பக்கலிலும் பலிக்கவேணு னெமனும் விருப்பம் ஸித்திக்கின்ற தென்க.

மகாயாம்பூக்கொள்மேனி –பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலரென்றுங் காண்டோறும் –பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வ்வையெல்லாம் பிரானுருவேயென்று * (பெரிய திருவந்தாதி) என்றருளிச் செய்தவராதலால் காயாம் பூக்கொள் மேனியனான எம்பெருமானிடத்தில் அத்திருநிறத்துக்குத் தோற்று அடிமைப்பட்டவர்கள் தமக்கு உத்தேச்யரென்கிறார். அழகிய காயாம்பூப்போன்ற திருமேனியையுடையனாய், நான்கு திருத்தோள்களையும் திருவாழியாழ்வானையுமுடையனான எம்பெருமானை ஒருகாலும் விட்டுப்பிரியாதே இளையபெருமாளைப் போலே ஒழிவில்காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யுமவர்களில் கல்லைநிலமா யிருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள், அன்னவர்களுக்கே ஸகல சேஷவ்ருத்திகளையும் பண்ணவேணுமென்று மநோரதிக்கையாகிற புருஷார்த்தம் ஸித்திக்கவேணுமென்றாராயிற்று.

 

English Translation

Through life after life, in every age after age, I only wish to be born in the family of bonded serfs of my masters, the servants of the servants of the Lord, -who has a kaya hue, four arms, and wields a discu

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain