(3778)

தமர்கள் கூட்ட வல்வி னையை நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,

அமர்கொள் ஆழி சங்குவாள் வில்தண் டாதி பல்படையன்,

குமரன் கோல ஐங்கணைவேள் தாதை கோதில் அடியார்தம்!

தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!

 

பதவுரை

தமர்கள் கூட்டம்

-

பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற

வல் வினையை

-

வலிய விரோதிகளை

நாசம் செய்யும் சதிர்

-

போக்கும்படியான திறமையுடைய

மூர்த்தி

-

ஸ்வாமியாய்

அமர் கொள்

-

போர் செய்யக் கிளர்கின்ற

ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி

-

பஞ்சாயுதங்கள் முதலிய

பல் படையன்

-

திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய்

குமரன்

-

நித்ய்யுவாவாய்

கொலம் ஐங்கணை வேள் தாதை

-

அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய

கோது இல் அடியார் தம்

-

கோதற்ற அடியார்க்கு

தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே

தமியேற்கு வாய்க்க

-

துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப்பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும். “கோதிலடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாஞ் சதிரேவாய்க்க தமியேற்கை“ என்று தமர்கள் தமர்கள் தமர்களென்று மூன்று வர்க்கமே சொல்லியிருந்தாலும் யாப்பின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சொன்னவளவேயன்றி, பர்யாப்தி பிறந்து சொன்னதன்று சரமாவதி தாஸ்யமே விரும்ப்ப்படுகின்றதாகச் கொள்க.

தமரர்கள் கூட்ட வல்வினையை நாசஞ்செய்யும் என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் கூறுவர், (1) தமர்களுடைய கூட்டத்தின் வல்வினையை நாசஞ்செய்யும். (2) தமர்களின் கூட்டமான (அபரிமிதமான) வல்வினையை நாசஞ்செய்யும் (3) தமர்கள் வல்வினை வுட்ட அதை நாசஞ்செய்யும் (அதாவது) வல்வினைகளை மேன்மேலும் ஆர்ஜித்துக்கொண்டிருக்க, அவற்றை நிச்சேஷமாக நாசஞ்செய்யுமென்றபடி. “சதிர்மூர்த்தி “சதுமூர்த்தி“ என்பன பாடபேதங்கள். சதிராவது ஸாமர்த்தியம், அதையுடைய ஸ்வாமி. சதுமூர்த்தி –அநொகவிக்ரஹ பரிக்ரஹம் செய்பவன். (அமர்கொளாழியித்யாதி) விரோதிநிரஸனத்திற்காகச் செருக்கிளர்ச்சியையுடைய பஞ்சாயுதங்களையும் மற்றும் பலவாயுதங்களையுமு (ஷோடசாயுதங்களையும்) உடையவன். குமரன் –நித்யயுவாவாயிருக்குமவனென்கை. கோலவைங்கணை வேள்தாதை அழகுக்கு எனக்கு மேலில்லை யென்றிருக்கும் பஞ்பாணனுடைய அழகுக்கும் உத்பத்திஸ்தானமானவன். இப்படிப்பட்ட எம்பெருமானுடைய, கோதிலடியார் –ப்ரபோஜநாந்தர அபேக்ஷையாகிற கோது இல்லாத அடியார்.

இப்பதிகத்தில், கீழே * சயமே அடிமை தலைநின்றார் என்றும், இப்பாட்டில் கோதிலடியார் என்றும், மேற்பாட்டில் * நீக்கமில்லாத வடியார் என்றும் மூவகைச் சொற்களால் சொல்லுகிறார். இதற்கு நம்பிள்ளையருளிச்செய்யும்படி, சயமேயடிமை தலைநின்றார் –பரதாழ்வான் போல்வார், கோதிலடியார் –சத்ருக்நாழ்வான் போல்வார், நீக்கமில்லாவடியார் இளையபெருமாள் போல்வார் என்று.

 

English Translation

The Lord has the power to destroy the karmas of his devotees, with his conch, discus, bow, mace, dagger and other weapons.  He is youthful, and love-god kama's father, I only wish to serve the servants of his devotees

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain