(3776)

தனிமாப் புகழே யெஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான்தோன்றி,

முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த,

தனிமாத் தெய்வத் தளிரடிக்  கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார்,

நனிமாக் கலவி யின்பமே நாளும் வாய்க்க நங்கட்கே.

 

பதவுரை

தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய்

-

ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக

தான் தோன்றி

-

தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து

முனி

-

(ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற

மா பிரம்ம்

-

பரப்ரஹ்ம்மாகிற

முதல் வித்து ஆய்

-

பரமநாரணமாய்

உலகம் மூன்றும்

-

லோகங்களை யெல்லாம்

முளைப்பித்த

-

உண்டாக்கின

தனி மா தெய்வம்

-

ஒப்பற்ற பர தேவதையினுடைய

தளிர அடி கீழ்

-

தளிர்போன்ற திருவடியின் கீழே

புகுதல் அன்றி

-

புகுகையைத் தவிர்த்து

அவன் அடியார்

-

ஸ்ரீவைஷ்யவர்களுடைய

நனி மா கலவி இன்பமே

-

மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே

நங்கட்கு நாளும் வாய்ந்த

-

நமக்கு எப்போதும் வாய்க்க வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப் பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.

தனிமாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாய் –இங்கு தனிமாப்புகழாக நினைக்கிற புகழ் எதுவென்னில், மேலிரண்டாமடியிற் சொல்லுகிறபடிக்குச் சேர்ந்த புகழாக வேண்டுகையாலே ஜகத்து நாம்ரூபங்களழிந்து தாமோபூதமான ஸமயத்திலே இவற்றை யுண்டாக்க நினைத்த மஹாகுணமே இங்குத் தனிமாப்புகழாக விவக்ஷிதம். * அசிதவிசேஷிதாந் ப்ரளயஸீ மநி ஸம்ஸரத கரணகளே பரைர் கடயிதும் தயமாநமநா * (ஸ்ரீரங்கராஜஸ்தவ –உத்தரசதகம்) என்று பட்டர் அருளிச் செய்தபடியே, இறகொடிந்த பக்ஷிப்போலே யிருந்த சேதந ராசிகளைக் கரணகளே பரங்களோடே சேர்த்து விநியோகங் கொள்ளத் திருவுள்ளம்பற்றின மஹாகுணத்தைக்கண்டு “இப்படியும் ஒரு கருணையுண்டோ! என்று இதையே வாய்வெரும்படியாக அவாப்தஸமஸ்தகாமனாயிருக்கிற தானே தன்பேருக தோன்றி. தோன்றி யென்றது –ஸங்கல்பித்துக் கொண்டு என்றபடி. முனிமாப்பிரமுமுதல் வித்தாய் –பிரம்ம் என்றது ப்ரஹம்ம் என்றபடி. முனி என்று எம்பெருமானுக்குள்ளதொரு திருநாமம். மாப்பிரம்ம். முதல்வித்துஆய் –உபாதாநகாரணமாய் என்றபடி. (உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத்தெய்வம் இத்யாதி) பஹுபவநஸங்கல்பம்பண்ணிக் கார்யவர்க்கமெல்லாம் தன் பக்கலிலே அரும்பும்படி பண்ணின ஒப்பற்ற பரதேவதையிலுடைய தளிர்போன்ற திருவடிகளின்கீழே புகுதல் ப்ராப்தமாயிருந்தாலும், அன்றி, அதைத் தவிர்ந்து, அவனடியார்நனிமாக் கலவியின்பமே நங்கட்கு நாளும் வாக்க – பாகவதர்களோண்டுடான பரம விலக்ஷணமான ஸம்ச்லேஷஸுகமு நாடோறும் நமக்கு வாய்க்கவேணும்.

 

English Translation

Rather than attain the lotus feet of the great Lord, -the Lord of exceeding glories, eternal, self-made seed from which sprouted all the three worlds, -I only wish to enjoy the sweet union of his devotees forever

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain