(3774)

வழிபட் டோட அருள்பெற்று மாயன் கோல மலரடிக்கீழ்,

சுழிபட் டோடும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,

இழிபட் டோடும் உடலினிற் பிறந்து தன்சீர் யான்கற்று,

மொழிபட் டோடும் கவியமுத நுகர்ச்சி யுறுமோ முழுதுமே?

 

பதவுரை

வழிபட்டு ஓட அருள் பெற்று

-

நித்ய கைங்கரியம் பண்ணும்படியாக அவனது திருவருளைப் பெற்று

மாயன்

-

ஆச்சர்ய விபூதி யுக்தனான அந்த ஸர்வேச்வரனுடைய

கோலம் மலர் அடி கீழ்

-

அழகிய திருவடித் தாமரைகளின் கீழே

கழிபட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து

-

சுழித்து ஓடுகிற சுடர்ச்சோதி வெள்ள மென்னும்படியான பரம பத்த்திலே

இன்புற்று இருந்தாலும்

-

ஆனந்த வாழ்ச்சியாக இருக்கப்பெற்றாலும்

முழுதும்

-

கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யாதிகள் எல்லாம் கூடினாலும்

இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து

-

தாழ்ச்சியின் மிக எல்லையில் நிற்பதான சரீரத்திலே பிறந்து

கற்று

-

தன்னுடைய குணங்களை நான் அப்யளித்து

மொழிபட்டு ஓடும் களி அமுதம்

-

அவ்வநுபவத்தா லுண்டான ப்ரீதிசொல்லாய் ப்ரவஹிக்கிற கவியாகிற அம்ருத்த்தை

நுகர்ச்சி உறுமோ

-

பாகவதர்களோடு கூடியநுபவித்து ரஸிக்கைக்கு ஒக்குமோ? (ஒவ்வாது)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம் சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார். (வழிபட்டோட அருள் பெற்று இத்யாதி) க்ஷணகாலமும் விச்சேதமில்லாமல் நித்யகைங்கரியம் பண்ணும்படியான அவனருளைப் பெற்றுத் திருநாட்டிலே அவனது மலர்த்தாமரைப் பாதங்களின் கீழே அந்தமில் பேரின்பமெய்தியிருக்கப்பெற்றாலும் என்றபடி. இழிபட்டோடு முடலினிற் பிறந்து – தாழ்வுக்கு எல்லையாம்படி கைகழியப்போன சரீரத்திலேபிறந்து. திருநாட்டிலே கைங்கரியம் ஞானமும் பொல்லாவொழுக்கும் நிறைந்த அழுக்குடம்போடே கூடியிருக்கப்பெற்றாலும் என்றபடி.

தன் சீர்யான்கற்று மொழிபட்டோடுங் கவியமுத நுகர்ச்சி உறுமோ? பரம போக்யனான அவனுடைய திருக்குணங்களை நீசனேன் நிறையொன்றுமிலேனான நான் அப்ஸித்து அவ்வநுபவத்தாலுண்டான ப்ரீதி சொற்களாகப் புறவெள்ளமிட்டு அதுவே அம்ருதமாக, அதுதன்னை அன்பர்களோடே கூடி ரஷிக்கையுண்டே, இதற்கு எந்த இன்பமும் ஈடாகாது என்றாராயிற்று * தொண்டாக்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் * என்றபடி திருவாய்மொழி பாடுகையாகிற விதுவும் பாகவத் கைங்கர்பங்களிலே ஒன்றாகையாலே இவ்விஷயத்தை இத்திருவாயெமொழியிலருளிச் செய்தவிது மிகப் பொருந்தும்.

 

English Translation

Were I blest with service to his lotus feet, were I to enjoy his swirling flood of heavenly radiance, would that compare with this birth, -albeit in a lowly body, -where I sit and enjoy singing his names in a flood of sweet poetry?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain