(3773)

இங்கே திரிந்தேற் கிழக்குற்றென். இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,

செங்கோ லத்த பவளவாய்ச் செந்தா மரைக்க ணென்னம்மான்

பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்  புலன்கொள் வடிவென் மனத்தாய்

அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட் டோட அருளிலே?

 

பதவுரை

முன்

-

முன்பொரு காலத்திலே

இரு மாநிலம் உண்டு உமிழ்ந்த

-

மிகப்பெரிய பூமியை யெல்லாம் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கிப் பிறகு வெளிப்படுத்தின

கோலத்த

-

அழகு வாய்ந்த

செம் பவளம்வாய்

-

சிவந்த பவழம் போன்ற அதரத்தையுடைய

செம் தாமரை கண் என் அம்மான்

-

புண்டரீகாக்ஷனான எம்பெருமான்

பொங்கு ஏழ் புகழ்கள்

-

பொங்கிக் கிளர்கின்ற தனது திருக்குணங்களானவை

வாய ஆய்

-

என் வாக்குக்கு விஷயமாகவும்

புலன் கொள் வடிவு

-

மநோஹமான தனது வடிவு

என் மனத்த்து ஆய்

-

என் மனத்திலுள்ளதாகவும்

அங்கு ஏய் மலர்கள்

-

அத்தலைக்கு ஏற்ற புஷ்பங்கள்

கைய ஆய்

-

என் கையிலுள்ளனவாகவும் பெற்று

வழிபட்டு ஓட அருளில்

-

பாகவதர்கள் செய்யும் கைங்கரிய மார்கத்திலே நானும் உடன்பட்டு நடக்கும்படியாக அருளாமாகில்

இங்கே திரிந்தேற்கு

-

(திருநாடு செல்ல விரும்பாதே) இந்த விபூதியிலேயே இப்படி திரிவேனான எனக்கு

இழுக்குற்று என்

-

என்னதாழ்வு?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாகவத சேஷத்வத்திலே யிடுபட்டவர்கள் பகவச் சேஷவத்திலே நிற்கலாகாதென்று சிலர் நினைப்பதுண்டு, அதுதவறு பகவானுடைய முகோல்லாஸத்திற்காக பாகவதர்களையுகப்பதுபோல அந்த பாகவதர்களின் முகோல்லாஸத்திற்காகப் பகவானை யுகப்பதும் ப்ராப்தமே, எம்பெருமானை விட்டுப்போய் நம்மாழ்வார் பக்கலிலே யீடுபட்ட மதுரகவிகளும் கண்ணி நுண் சிறுத்தாம்பில் மூன்றாவது பாட்டில் “திரிதந்தாகிலும் தேவபிரானுடையக் கரியகோலத்திருக்காண்பன் நான்“ என்றார், தாம் பற்றின ஆழ்வாருடைய முகோல்லாஸத்திற்காக எம்பெருமானைப் பற்றுவதும் உற்றதே யென்றார், அங்ஙனே அவர் கூறினதற்கு இப்பாசுரமே மூலமென்க. ப்ரளயாபத்கைனாயும் செந்தாமரைக் கண்ணனாயுமிருக்கிற எம்பெருமான் தன் திருக்குணங்களை நம்வாயாலே புகழும்படியாகவும், தன் திவ்யமங்கள் விக்ரஹத்தையே நம் நெஞசாலே சிந்திக்கும்படியாகவும், புகழும்படியாகவும், தன் திவ்யமங்கள் விக்ரஹத்தையே நம் நெஞ்சாலே சிந்திக்கும்படியாகவும், புஷ்பங்களைக் கையிலே கொண்டு அவன்றன்னை அர்ச்சிக்கும்படியாகவும் அருள் செய்யப்பெற்றால் அப்படி பகவானளவிலே அவகாஹித்துக்கொண்டு இங்கே திரிந்தாலும் ஒரு குறையில்லை, இதனால் பாகவத பக்திக்குக் கொத்தையாகாது என்றாராயிற்று. ஆசார்ய ஹ்ருதயத்தில் * அழுந்தொழும் ஸநேஹபாஷ்பாஞ்ஜலியோடே * இத்யாதி சூர்ணையில் “புலன்கொள் நித்யசந்ருவிசிந்தனம்“ என்ற ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்தேயம். ஸ்ரீ சத்ருக்நாழ்வான் பாகவத சேஷத்வமே பரமபுருஷார்த்தமென்று கொண்டு ஸ்ரீபரதாழ்வானுக்கே சேஷபூதராய் ஸ்ரீராமனது ஸளந்தரியத்திலீடுபடாதிருக்கச் செய்தேயும் * நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி தமேவார்ய் விசிந்தயந் * என்று சொல்லி, பரதாழ்வானுக்கு உகப்பென்கிற காரணத்தாலே பெருமாள்வடிவழகிலும் நெஞ்சுசென்று அவ்வழகையும் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாப்போலே இவ்வாழ்வாரும் பாகவத சேஷத்வநிஷ்டையைக் கொண்டிருக்கச் செய்தேயும் தமக்கு உத்தேச்யரான அந்த பாகவர்களுக்கு ப்ரீதிகரமென்னுங்காரணத்தினால் “புலன் கொள்வடிவென் மனத்த்தாய்“ என்று, பாகவத சேஷத்வநிஷ்டாவிரோதியான பகவத் விக்ரஹத்தைத் தம்முடைய நெஞ்சுக்கு விஷயமாக்கிக் கொண்டிருந்தார் – என்பது மேலெடுத்துக் காட்டிய ஆசார்யஹ்ருதய ஸூக்தி கண்டத்தின் தாற்பரியம்.

இங்கு, “புலன் கொள்வடிவு என் மனத்தாய்“ என்றதில் எம்பெருமானுடைய வடிவுக்குப் புலன்கொள் என்று இட்டிருக்கும் விசேஷணம் குறிக்கொள்ளத்தக்கது. எப்படிப்பட்ட அத்யவஸாயமுடையவர்களினுடையவும் இந்திரியங்களைக் கொள்ளை மனத்திற்கு மாத்திரமேயன்று, த்ரிகரணங்களுக்குமாகச் சொல்லுகிறது பொங்கேழ்புகழ்கள் வாயவாய் இத்யாதியால். பாகவதர்களை புகழைப் பேசவேண்டி வாய்கொண்டு  பகவானுடைய புகழைப் பேசவும், பாகவதர்களை அர்ச்சிக்க வேண்டிய புஷ்பங்களைக் கொண்டு பகவானை அர்ச்சிக்கவும் நேர்ந்தால் இதில் என்ன சேதம்? நானுகந்த பாகவதர்களுக்கு உகப்பு என்னுங் காரணத்தினாலன்றோ இவை நேருவன –என்றாராயிற்று.

 

English Translation

My Lord of coral lips and red lotus eyes swallowed and remade the Earth; I sing his glories, I worship his grace with fit flowers in my hands, I have his form in my heart, so what do I lack now?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain