(3771)

வியன்மூ வுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும்,

புயல்மே கம்போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,

சயமே யடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே

பயனே யின்பம் யான்பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?

 

பதவுரை

வியல் மூ உலகு பெறினும்

-

விபுலத்ரிலோக ஸாம்ராஜ்யத்தைப்பெற்றாலும்,

போய்

-

அதற்கும் மேலான

தானே தானே ஆனாலும்

-

தன்னைத் தானே யநுபவிக்கையாகிற கைவல்ய மோக்ஷம் பெற்றாலும்

புயல் மேகம் போல் திருமேனி அம்மான்

-

மழைகாலத்து மேகம் போன்ற திருமேனி வாய்ந்த எம்பெருமானுடைய

புனை பூ கழல் அடிகீழ்

-

சாத்தின புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைத்தான திருவடி வாரத்திலே

சயமே

-

ஸ்வயம் பிரயோஜநமாக

அடிமை தலை நின்றார்

-

கைங்கர்யத்தின் மேலெல்லை யிலே நிலை நின்றவர்களுடைய

திரு தாள் வணங்கி

-

திருவடிகளைத் தொழுது

இம்மையே

-

இஹலோகத்திலேயே

யான் பெற்றது

-

நான் அடைந்த்து

பயனே இன்பம்

-

புருஷார்த்தமான சுகமே

பாவியேனுக்கு

-

பாவியான வெனக்கு

உறுமோ

-

(கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள்) இப்பேற்றுக்கு ஒக்குமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஐச்வர்யகைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார். “வியன் மூவுலகு பெறினும், போய்த்தானே தானே யானாலும் யான்பெற்ற வின்பம் உறுமோ? என்று அந்வயிப்பது. வியன் மூவுலகு பெறினும் –விசாலமான த்ரிலேகைச்வர்யத்தையும் எனக்கொருவனுக்கே யாக்கினாலும் என்றபடி. போய்த் தானேதானே யானாலும் –ஸம்ஸார பந்தமற்றுப் போய்க் கேவலாத்மாநுபவம் பண்ணப்பெற்றாலும் என்றபடி. “போய்த் தானே யானாலும்“ என்பதே போதுமாயிருக்கவும் “தானே தானே“ என்று இரட்டித்துச் சொல்வதன் கருத்ராவது –இங்கு ஸம்ஸாரத்தில் வாழும்நாளில் புத்ர பௌத்ராதிகளும் தானுமாய் ஜிவிகையாலே தானேயான வாழ்ச்சியில்லை, திருநாட்டிலே சென்று களிக்கும் நாளிலும் * அடியார்கள் குழாங்களையுடன் கூடியிருக்குமிப்பாகையாலே தானேயான வாழ்ச்சியில்லை, இனி கைவல்யாநுபவத்தில் தான் தானோதானேயான வாழ்ச்சியுள்ளது என்கை.

 

English Translation

The wealth of the three worlds and the enjoyment of one's self in heaven, put together, -will it equal the joy I have found here and now, through serving the selfless devotees of the cloud-hued Lord's lotus-feet?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain