(3770)

நெடுமாற் கடிமை செய்வேன்போல் அவனை கருத வஞ்சித்து,

தடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும்  தவிர்ந்த சதிர்நி னைந்தால்,

கொடுமா வினையேன் அவனடியார் அடியே கூடும் இதுவல்லால்,

விடுமா றென்ப தென்னந்தோ! வியன்மூ வுலகு பெறினுமே?

 

பதவுரை

நெடு மாற்கு

-

ஸர்வேச்வரனுக்கு

அடிமை செயவேன்போல்

-

அடிமை செய்பவன் போலவிருந்து

அவனை கருத

-

அப்பெருமானை நினைத்தவளவிலே

தீ கதிகள் முற்றும்

-

(என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம்

வஞ்சித்து

-

வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே)

தடுமாற்று அற்ற

-

நிச்சயமாக

தவிர்ந்த சதிர் நினைத்தால்

-

என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால்

வியல் மூ உலகு பெறினும்

-

விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து

அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால்

-

பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர

கொடு மாவினையென்

-

பெரும் அந்த பாவியாகிய நான்

வீடும் ஆறு என்பது என்

-

(அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ?

அந்தோ

-

இதை நான் சொல்லவும் வேணுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ்செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரமபோக்யதையைப் பேசுகிறார். நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் அவனைக்கருத –அடியார் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்த எம்பெருமான்திறத்தில் உண்மையாக வடிமைசெய்ய ஊற்றமில்லையிகிலும் கபடபாவனை எம்பெருமான் திறத்தில் உண்மையாக வடிமைசெய்ய ஊற்றமில்லையாகிலும் கபடபாவனை மாத்ரமேகொண்டு அடிமை செய்வதாகக் கருதின மாத்திரத்திலே, தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் வஞ்சித்துத் தவிர்ந்த சதிர்நினைந்தால் –பாவங்களெல்லாம் நானறியாதபடி ஒரு நொடிப்பொழுதில் உருமாய்ந்துபோனபடியை ஆராய்ந்து பார்க்கில், அவனடியாரடியே கூடுமிது எம்பெருமானைவிட்டு எம்பெருமானடியார்தம் அடிகளையே கூடக்கடவது. இதன் கருத்து யாதெனில், பகவானுக்கு அடிமைப்படுவதன் பயனே இதுவானால் பாகவதர்களுக்கு அடிமைப்பவதன் பயன் இதனில் மிகச் சிறந்திருக்குமன்றோ வென்று கொண்டு பாகவத சேஷத்வத்தில் நிற்கையே உறுவதாம் என்றவாறு. தடுமாற்ற்ற்ற தீக்கதிகள் என்றே அந்வயித்து –நமக்கொருகாலம் சலனமில்லையென்று கொண்டு ஸ்தாவரப்ரதிஷ்டைபாவித்திருந்த அவித்யாதிதோஷங்கள் என்னவுமாம். வஞ்சித்து என்ற வினையெச்சத்தை முதலடியிலும் அந்விக்கலாம், இரண்டாமடியிலும் அந்வயிக்கலாம். “அவனை வஞ்சித்துக் கருத“ என்றவாறு, தீக்கதிகள் முற்று வஞ்சித்துத் தவிரந்த“ என்றாவது அந்வயிக்கலாம். தவிர்ந்த என்பதை “தவிர்ந்தன“ என்னும் பொருள்தான வினைமுற்றாகவும் கொள்ளலாம், “தவிர்ந்த சதிர்“ என்று சதிரிலே அந்வயிக்கவுமாம். தவிரப்பெற்ற பெருமை என்றபடி.

கொடுமாவினையேன் என்பது ஆனந்தம் தலைமண்டைகொண்டு சொல்லுகிற வார்த்தை. ஸங்கீதம் கேட்பவர்கள் ஸங்கீத ஸ்வாரஸ்யத்திலீடுபட்டவாறே “பாவியேன்“ என்று மெய்மறந்து சொல்லுவதுண்டே, அதுபோல. அன்றியே இப்படிப்பட்ட பாகவத சேஷத்வாநு ஸந்தானமிழந்திருந்த நாளைக்கு வெறுத்து, பாவியேன் என்கிறாராகவுமாம். “அவனடியாரடியே கூடுமிதுவல்லால்“ என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி –“தன் திருவடிகளைப் பற்றினார்திறத்திலே அவன் மிக்க வ்யாமோஹத்தைப் பண்ணுவானானால் அவன் விரும்பினாரையன்றோ நமக்கும் விரும்பவடுப்பது, அவன் ஆச்ரிதவ்யாமுக்தனானால் அவனுக்கு ப்ரிய விஷயத்தையன்றோ பற்றவடுப்பது.“

வியன்மூவுலகு பெறினும் விடுமாறென்பதென் அந்தோ –“பாகவத சேஷத்வம் வேணுமா? த்ரிலோகைச்வர்யம் வேணுமா? என்று கேட்டால், த்ரிலோகைச்வர்யம் சீரியதல்லவா என்று கொண்டு அதைப்பற்றி பாகவத சேஷத்வத்தை விடுவதென்பதுண்டோ? இதுவன்றோ சீரியது. இங்கு அந்தோ! என்பது எதற்காகவென்னில், அபதார்த்தமான த்ரிலோகைச்வர்யம் எடுத்துக்கழிக்கவும் தகாத்தாயிருக்க, அதையொரு பொருளாக வெடுத்துக் கழிக்கவேண்டியதாகிறதே என்கிற நிர்வேதம் காட்டுதற்காகவென்க.

 

English Translation

I only thought I would serve the Lord Lo, my evil karmas disappeared instantly without a hitch!  But come to think of it, other than serving his devotees, can there by a greater wealth in the three worlds?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain