(3769)

நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை,

நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்,சொல்

நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்

நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே.

 

பதவுரை

நின்ற மூ உலகுக்கும் நேர்பட்ட நாயகன் தன்

-

உலகங்களெல்லாவற்றுக்கும் வாய்த்த ஸ்வாமியானவனுடைய

அடிமை

-

கைங்கரியத்திற்கு

நேர்பட்ட

-

தகுதியையுடைய

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

-

தாஸ தாஸ தாஸாநு தாஸரான ஆழ்வாருடைய

சொல் நேர்பட்ட

-

சொல்வாய்ப்பையுடைய

தமிழ் மாலை

-

தமிழ் மாலையான

ஆயிரத்துள்

-

ஆயிரத்திலுள்ளே

இவை பத்தும் நேர்பட்டார் அவர்

-

இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள்

நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார்

-

ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். முன்னி ரண்டடிகளில் ஆழ்வாரதம் பெருமை சொல்லுகிறது. அடுத்தபதிகம் * நெடுமாற்கடிமை, அதில் பாகவத கைங்கர்யமே பரமபுருஷார்த்தமென்பது அறுதியிடப்படுவதால் அப்பெருவெள்ளம் இப்பாட்டிலேயே பொசிந்து காட்டுகிறது தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்று.

ஆக, எம்பெருமானுடைய வடிவழகு முதலான திருக்குணங்களை யனுபவித்து அதனாலுண்டான மகிழ்ச்சியினாலே பகவச்சேஷத்வ காஷ்டையில் நின்ற ஆழ்வார், சொல்வாய்ப்பை யுடைத்தாம்படி யருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தையும் ஓதவல்லவர்கள் தொண்டர்பால் வியாமோஹமே வடிவெடுத்தவனான எம்பெருமானுக்கு அடிமைசெய்ய வாய்த்தவர்களாவர் என்று பயனுரைத்தாராயிற்று.

 

English Translation

This decad of the beautiful thousand songs by Satakopan, devotee of the devotees of the Lord who is master of the three worlds, will  secure a life of service to the Lord for those who recite it

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain