(3608)

தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,

பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,

நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே?

 

பதவுரை

பன்மை படர் பொருள் ஆதும் இல்பாழ் நெடுங்காலத்து

-

பலவகைப்பட்ட விரிவான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாதபடி வெகுகாலம் சூந்யமாயிருந்தபோது

நன்மை புனல் பண்ணி

-

நன்மை மிகுந்த காரணஜலத்தை முந்துற முன்னம் ஸ்ருஷ்டித்து

(பிறகு)

நான்முகனை பண்ணி

-

பிரமனைப் படைத்து

தன் உள்ளே

-

தன்னுடைய ஸ்வருபத்தின் ஏகதேசத்திலே

தொன்மை மயக்கிய

-

பண்டு தான் ஸம்ஹரித்த பதார்த்களை

தோற்றிய

-

பழையபடி உண்டாக்கின

சூழல்கள்

-

இப்படிப்பட்ட மஹா குணங்களை

சிந்தித்து

-

சிந்தனை செய்து

தன்மை அறிபவர் தாம்

-

அவனுடைய அஸாதாரண லக்ஷ்ணத்தை அறியவல்லவர்கள்

அவற்கு அன்றி ஆள் ஆவரோ

-

அப்பெருமானுக் கொழிய வேறொருவனுக்கு அடிமைப்படலாகுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரளயத்திலே மங்கிக்கிடந்தஜகத்தை மீளவு முண்டாக்கின மஹாகுணத்தை யறிந்துவைத்தால் இப்படிப்பட்ட குணசாலிக்கேயன்றோ ஆளாகப் பெறவேணுமென்கிறார்.

தன்மையறிபவர் என்றது—தத்வஸ்திதியை உள்ளபடியே யறியுமவர்கள் என்றபடி விசித்ராதேஹஸம்பத்திரீச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹமந் ஹஸ்தபாதா திஸம்யுதா” என்கிறபடியே நம்முடைய கரணக்ராமங்கள் பகவத் விஷயத்தில் அந்வயிப்பதற்காகவே படைக்கப்பட்டன வென்கிற தத்துவத்தையறியும் விவேகிகள் என்றதாயிற்று. மற்றும் பலவகையாகவும் நிர்வஹிப்பதுண்டு.

தன்னைப் படைத்தவனுக்குத் தான் அடிமையாகவேணுமென்பதை ஒருவர் சொல்லவேணுமோ? “கச்ச த்யேய:? காரணம் து த்யேய:” என்றன்றோ ஒதிற்று. முதல் தனிவித்தாகிய மூலக் காரணப் பொருளை யறிந்து அதற்கன்றோ ஆட்படவேணும்;. தேவ மநுஷ்யாதிரூபத்தாலே பலவகைப்பட்டு, கருமங்களுக்கேற்றவாறு விஸ்த்ருதமான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாத காலத்து, முற்பட ஜலஸ்ருஷ்டியைப் பண்ணி, பின்னே சதுர்முகனையும் ஸ்ருஷ்டித்து, தன் ஸங்கல்ப ஸஹஸ்ரத்தின் ஏகதேசத்திலே சேதநாசேதநஸமஸ்த வஸ்துக்களையும் ஸ்ருஷ்டித்தருளின் இந்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அந்த பரம காருணிகனுக்கன்றி மற்றுமொருவற்கு ஆளாக வழியுண்டோ வென்றாராயிற்று.

 

English Translation

In the hoary past when none of this existed, he made the waters, then the four-faced Brahma, then hid all these within himself, Contemplating these wonders, will scientists ponder on anything else?

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain