(3604)

குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,

ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,

நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை

வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.

 

பதவுரை

குன்றம் எடுத்த பிரான்

-

கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய

அடியாரொடும்

-

அடியார்களோடு கூட

ஒன்றி நின்ற

-

ஒருமைப்பட்டிராநின்ற

சடகோபன்

-

நம்மாழ்வாருடைய

உரை செயல்

-

அருளிச்செயலாய்

ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த

-

ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான

இவை பத்தும்

-

இத்திருவாய்மொழி

மேவி கற்பார்க்கு

-

தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு

வென்றி தரும்

-

பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (குன்றமெடுத்த.) எம்பெருமானுடைய விஜய பரம்பரைகளைத் தொடுத்த இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் எல்லா வகையான விஜயமும் பெறுவார்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.

“குன்ற மெடுத்த பிரானடியாரோடும் ஒன்றிநின்ற சடகோபன்” என்ற சொல்லமைப்பை நோக்கித் திருக்குருகைப் பிரான் பிள்ளான் ஆறாயிரப்படியில் அருளிச் செய்கிறார். “ஆழ்வார்தாமும் கோவர்த்தனத்தின் கீழே ஆயரோடே கூடி நின்று “என்று. குன்றமெடுத்த பிரானுடைய அடியார்கள் குன்றமெடுத்தகாலத்திலுமுண்டு, பிற்காலத்திலுமுண்டு. குன்றமெடுத்த காலத்தில் அக்குன்றத்தின் கீழே யொதுங்கி நின்றவர்களே அடியாராவர்; அவர்களோடு ஒன்றிநின்ற சடகோபன் என்றால், கீழே பிள்ளானுரைத்ததாக எடுத்துக்காட்டினதே பொருளாம். பிற்காலத்திலுள்ள அடியார்களைக் கொண்டு அர்த்தமருளிச் செய்கிறார் பெரியவாச்சான் பிள்ளை; “கோவர்த்தநோத்தரணம் பண்ணின உபகாரனான க்ருஷ்ணன் திருவடிகளையே தஞ்கமாக நினைத்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களிலே தம்மையும் அந்யதமராக நினைத்திருந்த ஆழ்வார் அருளிச் செய்தசவிது. மலையையெடுத்தவன்று மலைக்கீழே யொதுங்தினவர்களைப் போலே ஸம்ஸாரத்துக்கு அஞ்சி க்ருஷ்ணன் திருவடிகளிலே யொதுங்குமவர்கள் வைஷ்ணவர்கள்; அச்செயலுக்குத் தோற்று அடிமை புக்கவராயிற்று இவர்” என்பது இருபத்தினாலாயிரம். கீழேகாட்டிய இரண்டு நிர்பாஹங்களுக்கும் பொதுவாகவுள்ளது ஈடு;-“கோவர்த்த நோத்தரணம் பண்ணின நீர்மையிலும் அப்போதை யழகிலும் ஈடுபட்டிருக்குமவர்களோடே கூடிநின்று தாமும் ப்ரீதராய் ப்ரீதிக்குப் போக்குவீடாகச் சொன்ன பாசுரமாயிற்று” என்பது ஈட்டு ஸ்ரீ ஸீக்தி.

“வென்றிதரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே” என்று ஆழ்வாரருளிய பலச்ருதிக்கேற்ப இற்றைக்கும் இத்திருவாய்மொழியை ஜபித்து விஜயஸிந்தி பெறுவது அநுபவஸித்தம்.

 

English Translation

The decad of the sweet thousand songs sung by the grateful Satakopan who stood with the devotees of the Lord who lifted a mountain, -reciting it with love bestows success

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain