(3600)

மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன

நூறு பிணம்மலை போல்புர ள,கடல்

ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்

நீறு படவிலங் கைசெற்ற நேரே.

 

பதவுரை

அப்பன்

-

ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்

இலங்கை நீறு பட செற்ற நேர்

-

லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்)

மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள்

-

எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே

இனம் நூறு பிணம்

-

இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை

மலை போல் புரள

-

மலை மலையாகப் புரண்டு விழவும்

கடல்

-

கடலானது

உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து

-

ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மாறுநிரைத்தது.) இலங்கையைப் பாழ்படுத்தின விதம் வியந்து கூறப்படுகிறது இதில். ஒயாதே அம்புகளைப் பொழிகையாலே அம்புகளானவை ஒன்றோடொன்று தாக்கி அதனாலெழுந்த வொலி விசைத்திருந்தது. அரக்கர் பிணய்களானவை நூறு நூறு இனமினமாக மலைபோலே புராண்டு வீழ்ந்தன. கடல் ரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே வரவெதிர்க்க நின்றது.

பிராட்டி அசிரேணைவ லங்கேயம் ச்மசாந ஸத்ருசீ பவேத் என்று சொன்ன படியே சுடுகாடாயிற்றென்கிறார் இலங்கை நீறு ட வென்று.

 

English Translation

Arrows grinding against countless heavy arrows, corpses by the hundred heaped like mountains, pools of blood flowing like rivers everywhere, -Oh, how my Father destroyed Lanka to dust!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain