(3599)

போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை

சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை

கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்

ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.

 

பதவுரை

போழ்ந்து மெலிந்த

-

போதுபோனவாறே

புன் செக்கரில்

-

செக்கர் வானமிடுகிற வளவிலே

வான் திசை

-

ஆகாசமும் திக்குக்களும்

சூழும் எழுந்து

-

சூழக்கிளம்பி

உதிரம் புனல் ஆ

-

ரத்த வெள்ளமாம்படி

அப்பன்

-

ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி

ஆழ் துயர் செய்து

-

அளவிறந்த துன்பத்தை விளைந்து

அசுரை கொல்லும் ஆறு

-

இரணியாசுரனைக் கொன்ற விதமானது

மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது

-

ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது.

ஆல்

-

ஆச்சரியம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (போழ்து மெலிந்த) ப்ரஹலாதாழ்வானுக்காக இரணியனை வதைக்கும் போதுண்டான அதிசயத்தைக் கூறுவதிப்பாட்டு. தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம் பெற்றவன் இரணியன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பல பல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும்படி செய்து வருகையில், அவன்மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹா விஷ்ணு பக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன் பெயரைக் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே கடுங்கோபங் கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன்பழிப் படுத்துவதற்குப் பலவாறு முயன்றும் அங்ஙனம் வழிப்படாதபபனைக் கொல்வதற்கு என்ன வுபாயம் செய்தும் அவன் பகவானுடைய அநுக்ரஹ பலத்தினால் ஒருகேடு மின்றியிருக்க, ஒரு நாள் சாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புத்திரனை நேர்க்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு’ என்ன; ‘தூணிலுமுளன், துரும்பிலுமுளன் எங்குமுளன்’ என்று அக்குமாரன் உறுதியாய்ச் சொல்லி, உடனே இரணியன் இங்கு உளனோவென்று சொல்லி எதிரில் நின்ற தூணைப் புடைக்க உடனே அதிலிருந்து திருமால் மநுபஷ்யரூபமும் சிங்கவடிவுங் கலந்த நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாசற்படியில் தன் மடிமீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நகங்களால் அவன் மார்பைப் பிறந்து அழித்திட்டு ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்தானென்ற வரலாறு அறிக.

பொழுது போய் செக்கர் வானமிடுகிறவளவிலே (இரணியனது வரத்தில் அகப்படாத ஸந்த்யா காலத்திலே) பள்ளங்கண்டவிடமெங்கும் வெள்ளம் பரக்குமா போலே ஆகாசமும் திசைகளும் நிரம்பரக்த வெள்ளம் கொழித்துப் பரம்பும்படி, ஒரு மலையைக் கீழேயிட்டுக் கொண்டு மேலேயிருந்து அதை ஒரு மலை பிளக்கின்றதோ வென்னலாம்படி வியாபரித்தபடி யென்னே! என்று வியக்கிறார்.

கீழ்து—கிழித்து என்றுமாம். ஈற்றடியில் ‘அசுரரை என்பது பாடமன்று; அசுரை என்றே பாடம் தொகுத்தால் விகாரம். அசுரனை யென்றபடி.

 

English Translation

When the day waned into twilight, a lion-like form exploded from a rock, and blood spewed high like a fountain every which way, when my Father came and killed the wicked Asura

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain