(3598)

ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்

ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்

ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்

காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.

 

பதவுரை

அப்பன்

-

ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான்

காணுடை பாரதம் கை அறை போழ்து

-

ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது,

ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி

-

வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும்

மன்னர்

-

அரசர்களினுடைய

ஆண் உடை சேனை

-

வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை

நடுங்கும் ஒலி விண்ணுள்

-

நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே

ஏண் உடை தேவர்

-

மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள்

வெளிப்பட்ட ஒலி

-

(யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(ஊணுடைமல்லர்.) கண்ணபிரான் பாரதப்போர் நிர்வஹித்தருளின சதிரைப் பேசுகிறாரிப்பாட்டில். மல்லாகள் ஒருவரோடடொருவர் பொருது நேரிந்து விழுந்த வோசை அப்போது வலிதாயிருந்தது. வீரபுருஷர்கள் நிறைந்த ராஜஸேனைகளானவை “க்ருஷ்ணன் ஸாரதியாய் நிற்கிறேன்” என்று கேட்டவாறே குடல குழம்பிக் கூப்பிட்ட வொலி மிகுந்திருந்தது. விண்ணவர்கள் இந்த யுத்தத்தின் அதிசயம் காண்கைக்காக வெளிப்பட்டு நின்று ஸ்தோத்ரம் பண்ணுகிற முழக்கம் விஞ்சியிருந்தது. ஆக இத்தகைய கோஷங்கள் நிரம்பப்பெற்று நடந்தது பாரதப்போர் என்றதாயிற்று

மல்லர்-ஆயுதமொன்றும் கையிலின்றியே உடலோடு உடல் நேரியப்பொருபவர் மல்லர் எனப்படுவர். யுத்தத்திற்கென்றே அவர்கட்கு அதிகப்படியான உணவுகளையிட்டு வளர்ப்பர்களாதலால் ‘ஊணுடை’ என்று சிறப்படைமொழி கொடுக்கப்பட்டது.

ஆணுடைச்சேனை—பீஷ்மர் த்ரோணர் என்னும்படியான மஹாபுருஷாகளைத் தலைவராகக்; கொண்ட சேணையாதலால் ஆணுடைச் சேனையென்றது. கண்ணபிரான் யுத்தத்தில் ஒரு காரியமும் செய்யாமற் போனாலும் அவன் பாண்டவ பக்ஷ்பாதிபாயிருக்கி;ன்றானென்று கேட்டவாறே அந்த சேனையடங்கலும் நடுங்கும்படியாயிற்று. ஏணுடைத்தேவர் என்றது ஸப்ரஹமா ஸசிவஸ்ஸேந்த்ர: என்பது முதலான பல வேதவாக்கியங்களிலே ஒரு கோவையாக எண்ணப்பட்ட தேவர்கள் என்றபடி. காணுடைப்பாரதம்-விரும்பிக் காணவேண்டும்படியான ஆசையை விளைக்கவல்ல பாரதப்போர் என்பது கருத்து கையறை போழ்து—தொடங்கின காலத்தில் என்பது தேர்ந்த பொருள். “கையுமணியும் வகுத்து அங்கோடிங்கோடுவாவிப் படை பொருத்தி நீங்களின்னபடி செய்யக்கடவிகோள் நாங்களின்படி செய்யக் கடவோமென்று கை தட்டி விட்டபோது” என்பது ஈடு.

 

English Translation

Oh! The sounds of well-fed wrestlers being crushed!  The jitters of the manly warrior kings, and the praise that the wakeful celestials showered, when my Father took charge of the glorious Bharata war!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain