(3588)

காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,

நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,

ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,

கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே.

 

பதவுரை

(அன்னைமீர் காள)

-

தாய்மார்களே!,

நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான்

-

நீலமேக நிறத்தனான எம்பெருமான்

முன்னே வந்து நிற்கும்

-

என் கண்முன்னே வந்து நிற்பதாகக் காண்மின்றான்; (ஆனால்)

என் கைக்கும் எய்தான்

-

என் கைக்கு எட்டாதபடி தூரஸ்தானாகவே யிராநின்றாள்;

காதல் கடலின்மிக பெரியது

-

எனது காதலோ வென்னில் கடலிற் காடடிலும்மிகவும் பெரியதாக வுள்ளது;

ஆல்

-

அந்தோ!;

அவன்

-

அப்பெருமான்

ஞாலத்து வந்து வீற்றிருந்த

-

இந்நிலவுலகத்தில் வந்து எழுந்தருளியிருக்கு மிடமாய்

நால் மறையாளரும் வேள்வி ஓவா

-

நான்கு வேதங்களையும் கரை கண்டவர்கள் வைதிகாநுஷ்டானங்களை நிரந்தரமாக நிகழ்த்துமிடமாய்

கோலம் செந்நெற்கள் கவரி வீசும்

-

அழகிய செந்நெற்பயிர்கள் கவரிபோலே அசையப் பெற்றதாய்

கூடு புனல்

-

தீர்த்த ஸம்ருத்தயையு டையதான்

திருப்பேரெயிற்கே –

-

திருப்பேரெயில் தலத்திற்கே

காலம் பெற என்னை காட்டுமின்கள்

-

சீக்கிமாக என்னைக் கொண்டு போய்க் காட்டுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(காலம் பெற வென்னை) கீழ்பாட்டில் ‘காலம்பெற வென்னைக் காட்டுமினே’ என்றாள். அது கேட்டவர்கள் ‘நங்காய்! அவர் இப்போயேன்றோ வேட்டைக் கெழுந்தருளினது; இப்போது நீ பதறிப் பானென்?’ என்று சொல்ல, ஐயோ! எனக்கோ அபிநிலேசம் மீதூர்ந்து செல்லா நின்றது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது; வீணாக எதையுஞ் சொல்லிப் போதுபோக்தாதே இப்போதே யென்னைத் தென் திருப்பேரையிலே கொடுபுக்கு மகர நெடுங்குழைக் காதனைக் காட்டி ஸமாதானப்படுத்துங்கோனென்கிறாள். “(காலம்பெற வென்னைக் காட்டுமின்கள்) குடிக்கப் பரிஹாரமன்கிறாகிலும் எனக்குப் பரிஹாரம் இத்தில்லதில்லை” என்பது நம் பிள்ளையீடு. அப்பெருமாளை நான் காலதாமதமின்றிக் காணும்படி செய்யுங்கோளென்றபடி. அதற்குக் காரணம் கூறுகின்றது “காதல் கடலின் மிகப் பெரியதால்”  என்று. கீழே ஐந்தாம் பத்தில் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி என்று தனது காதலைக் கடலோடொத்ததாகச் சொன்னாள்;  இங்குக் கடவினும் விஞ்சியதாகச் சொல்லுகின்றாள்; மேலே எட்டாம்பாட்டில் என்காதல்-மண்டிணி ஞாலமு மேழ்கடலும நீள்விசும்புங் கழியப் பெரியதால் என்கிறாள்; முடிவில் சூழ்ந்ததனிற் பெரிய என்னல்லா என்று தத்வத்ரயத்தையும் விளாக்குலைகொண்ட காதலென்கிறது. இப்படி கனத்தகாதலையுடைய நான் எங்ஙனே பதறாது ஆறியிருக்கும்படி யென்கிறாள் போலும்.

நங்காய்! கடலின் மிகப்பெரியதாக வளர்கின்ற காதலை ஒருவாறு அடக்கி அளவுபடுத்த வேண்டாவோ? நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுகவேண்டாவோ? என்று தாய்மாரும் தோழிமாரும் சொல்ல, ‘நீலமுகில் வண்ணத் தெம்பெருமான் முன்னே வந்து நிற்கும்’ என்கிறார். அழகிய வடிவைக்கொண்டு அவன்முன்னே வந்து நிற்க. காதல் வளருகைக்கு வழியண்டாயிருந்ததே யல்லது அளவு படுகைக்கு வழியுண்டோ? அவன் முன்னேவந்து நின்றிலனாகில் நான் காதலையடக்கி உங்கள் வார்த்தையைக் கேட்க மாட்டேனோ? என்றாள்.

தங்காய்! நீலமுகில்வண்ணத் தெம்பெருமான் உன்முன்னே வந்து நின்றானாகில் அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவன்பிள்ளை நீ போலாமே, காலம் பெற வென்னைக் காட்டுமின்கள்’ என்று சொல்லுவதென்? என்று தாய் தோழியா கேட்க, என் கைக்கும் எய்தான் என்கிறாள். உருவெளிப்பாடேயல்லது வேறொன்றில்லையே; வார்த்தை சொல்லுதல் அணைத்தல் செய்யாமையேயன்று, என் கைக்கும் எட்டுகிறிலன்; ஆகையால் சொல்லுகிறேனென்றாள். எங்கே கொண்டுபோய்க் காட்டச் சொல்லுகிறாயென்ன. அதற்குப் பின்னடிகளாலே விடை கூறுகின்றாள். வெறும் உருவெளிப்பாடன்றியே கண்ணாலே கண்டநுபவிக்கலாம் திருப்பதிலே போகப்பார்த்தே னென்கிறாள்.

அவன் ஞாலத்து வந்து வீற்றிருந்த-நெடுஞ்தூரஞ் சென்று காணவேண்டாத பரமபதத்துச் செல்வமெல்லாம் இங்கே தோற்றும்படி வந்து வீற்றிருக்குமிடமன்றோ தென்திருப்பரை. அவ்வளவேயோ? தான்மறையாளரும் வேள்வி ஓவா-வேதவிததுக்களான பரமபாகவதர்களின் ஸமாராதனமும் நிரந்தரமாகச் செல்லுமிடமன்றோ. இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசத்தின் நிலவளமும் நீர்வளமுமே கண்ணாரக கண்டுகொண்டிருக்கப் போதுமேயென்கிறாள் ஈற்றடியால்.

 

English Translation

Save time and take me there, my love swells like the ocean! My cloud-hued Lord appears before me, but is not within my grasp. He sits on Earth in Tirruppereyil amid large water tanks, whisked by fertile ears of paddy with endless Vedic chants

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain