(3571)

கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள் படைத்தளித் துக்கெடுக் கும்,அப்

புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துளிப்பத்தும்,

கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே.

 

பதவுரை

குணங்கள் கொண்ட

-

ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட.

மூர்த்தி ஓர் மூவர் ஆய்

-

மும்மூர்த்திகளுமாய்

படைத்து அளித்து கெடுக்கும்

-

ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய்

அப்புண்டரீகம் கொப்பூழ்

-

அப்படிப்பட்ட பத்மநாபனாய்

புனல் பள்ளி அப்பனுக்கே

-

காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு

தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

-

தாஸாது தாஸராண ஆழ்வார்

சொல் ஆயிரத்துள்

-

அருளிச் செய்த ஆயிரத்தினுள்

இப் பத்தும்

-

இப் பத்துப் பாசுரங்களையும்

சங்குலும் பகலும்

-

ஸதாகாலமும்

கண்டு பாட வல்லார்

-

பொருள் கண்டு பாடவல்லாருடைய

வினை போம்

-

பாவங்கா தொலைந்துபோம்.

 

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கொண்டமூர்த்தி.) இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக்கள் கட்டுகின்றார். “கொண்டமூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்” என்றதை “குணங்கள் கொண்டமூர்த்தியோர் மூவராய்” என்று அந்வயித்துக் கொள்வது ஸதர்வம்ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களுக்கும் தகுதியாக மூன்று திருக்கோலங்களைப் பரிக்ரஹித்தால் எம்பெருமான். ஸத்வதணங் கொண்ட மூர்த்தி-தானான மூர்த்தி; ரஜோகுணங்கொண்ட மூர்த்தி-பிரமனான மூர்த்தி; தமோகுணங்கொண்ட மூர்த்தி-உரத்திரனான மூர்த்தி. பிரமனுக்கு அந்தர்யாமியாய்ப் படைத்தல் தொழிலைச் செய்தும், ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் ஸம்ஹாரத் தொழிலைச் செய்தும், தானான தன்மையிலே நின்று காத்தல் தொழிலைச் செய்தும் போருமவன் என்கிறது முதலடி.

அப்புண்டரீகக் கொப்பூழ்-எம்பெருமானே முதல்வன் என்பதைக் திருநாபிக் கமலமே மூதலித்துக் கொடுக்கும். இவ்வாழ்வார்தாமே பெரிய திருவந்தாதியில் முதலாந் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றும் மென்பர் முதல் வா! நிகரிலகு காருருவா நின்ன்கத்தன்றே புகரிலகு தாமரையின் பூ என்ற பாசுரத்தினால் வெளியிட்டருளின அர்த்தத்தை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்வத்திலே 1-116 “த்ரயோ தேவாஸ் துல்யா”: என்கிற ச்லோகத்திலே “விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந:  என்பதனால் விவரித்தருளினார்.

புனல்பள்ளியப்பனுக்கே - ஜகந்தையெல்லா முண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண்வாளர்ந்தருளினபடியைச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட எம்பெருமானுக்குத் தொண்டர் தொண்டர் தொண்டர்க்குத் தொண்டராம் ஆழ்வார். இங்கே நம்பிள்ளை அருளிச் செய்யும்படி பாரீர்;- “விஷயங்களையும் இந்த்ரியங்களையும் அநுஸந்தித்த நெஞ்சாறல்தீர சேஷத்வத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார், தாபார்த்கன் மடுவிலே ஆழ்விழியுமாப்போலே.”

தாஸாநுதாஸ சரமாவதிதாஸரான ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளே  இத்திருவாய்மொழியைச் கண்டு பாடவல்லாருடைய வினைகள் தொலைந்திடும்.

“கங்குலும் பகலுங்கண்டு பாடவல்லர்” என்றும் அந்வயிக்கலாம்; “கண்டு பாட வல்லாருடைய சங்குலும் பகலும் வினைபோம்” என்றும் கொள்ளலாம்; இரவும் பகலுமுண்டாகிற வினளகளெல்லாம் போம்  என்றபடி.

 

English Translation

This decad of the thousand songs, by the devotee's devotee's devotee Stakopan of Kurugur on the Lord of the three qualities, -of making, keeping and breaking, -will end karmas for those who sing it night and day

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain