(3570)

என்பரஞ் சுடரே! என்றுன்னை அலற்றியுன் இணைத்தா மரைகட்கு,

அன்புருகி நிற்கும் அதுநிற் கச் சுமடு தந்தாய்,

வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை வலித்தெற்று கின்றனர்

முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ!

 

பதவுரை

முன்

-

முன்பொரு காலத்திலே

பரவை அடைந்து

-

சுடலைக் கடைந்து

அமுதம் கொண்ட மூர்த்தி

-

அமுதத்தை யெடுத்து உதவிய ஸ்வாமியே!

என் பரம் சுடரே

-

எனக்கு விதேயனான பரஞ்சோதியே! என்றிப்படி உன்னை நோக்கிக் கூப்பிட்டு

உன் இணைதாமரை கட்கு

-

உனது உபய பாதங்கள் விஷயத்திலே

அன்பு உருகிநிற்கு மது நிற்க

-

அன்பினாலே உருகியிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க

(அதற்கு விரோதமாக)

சுமடு தந்தாய்

-

(சரீரமாகிற) சும்மாட்டைத் தந்தாயே! (அதனால்)

வன் பரங்கள் எடுத்து

-

பிரபலமான விஷயபாரங்களைச் சுமத்தி

ஐவர்

-

பஞ்சேந்திரியங்கள்

திசை திசை

-

ஒவ்வொரு முலையாக

வலித்து

-

இழுத்து

எற்றுகின்றனர்

-

பீடிக்கின்றனர்;

-

இது பொறுக்கமுடிய வில்லையே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! உன் திருவடிகளிலே அடிமை செய்கைக்கு இடையூறாய் விஷயாநுபவங்களுக்குப் பாங்கான உடம்பை எனக்குத் தந்தாய்; அதுவே ஹேதுவாகப் பஞ்சேந்திரியங்களும் பெறுக்கவொண்ணாத ஹிம்ஸைகளைச் செய்கின்றன; அவற்றைப் பரிஹரித்தருளவேணும் என்று ஆர்த்தியோடே பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

முதலில் என்பரஞ் சுடரே!’ என்று ஒருவிளி யிருப்பது அதுபோன்ற பல்லாயிரம் விநிகளுக்கு உபலக்ஷ்ணம்; “ஸ்ரீநாத நாராயண் வாஸூதேவ ஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய சக்ரபாணே, ஸ்ரீபத்மநாபாச்யுத கைடபாரே ஸ்ரீராம பத்மாக்ஷ் ஹரே முராரே!; அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண கோலிந்த தாமோதர மாதவஞ்.” என்றிப்படி ஒய்வின்றி  எம்பெருமானது திருநாமங்களையே சொல்லிச் சொல்லிப் போது போக்குவதென்று ஒன்றண்டே; அதுதான் இங்கு முதலடியில் விவக்ஷிதம்; என்பரஞ்சுடரே! என்றாற்போலே பலபல திருநாமங்களை வாயாரச் சொல்லியலற்றி என்பரஞ்சுடரே! என்றாற்போலே பலபல திருநாமங்களை வாயாரச் சொல்லியலற்றி நீராயுருகி நிற்கையன்றோ என் ஸ்வரூபத்திற்குச் சேருவது; பிரானே! அந்த நிலைமை யிலன்றோ என்னை நீ நிறுத்த வேண்டும்; அஃதொழிய அதற்கு எதிரான நிலையிலே வைத்திருக்கின்றாயே; அதாவது விஷயாநுபவங்களுக்கு உபகாணமான ப்ரக்ருதியைக் தந்துவைத்திருக்கிறாயே! என்கிறார் முன்னடிகளில். சுமடு-இந்திரியங்கள் சமத்தின் சுமையையெல்லாம் சுமக்கைக்கீடான சரீரமாகிற சும்மாடு என்றபடி.

இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“ஒன்றுக்கொன்று ஒப்பாயிருப்பன இரண்டு செவ்விப் பூப்போலேயிருக்கிற உன் திருவடிகளிலே போக்யதையை அநுஸந்தித்து ப்ரேம பரவசனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபமாகக் கடவது. (அது நிற்கச் சுமடு தந்தாய்) ஸ்வரூபமிதுவாயிருக்க உன்பக்கலிலே நின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கடவதான சரீரத்தைக் தந்தாய்; உன்னையநுபவிக்கைக்கு உறுப்பாக தேஹத்தைத் தந்தாயானாய் நீ; அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று. ராஜபுத்ரன். தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக்கொண்டு வழியிலே நின்றால் அடியறியாதார் சுமையெடுத்திக்கொண்டு போமாபோலேயாயிற்று பகவதநுபவத்துக்கீடாகக் கொடுத்த சரீரம் இந்த்ரியங்களுக்குப் பணிசெய்யும்படியாய் விட்டது.”

மூன்றாமடி பரிதாபமே வடிவெடுத்தது. ஒரு எலியெலும்பன் தலையிலே அளவுகடந்த சுமையையெடுத்து வைத்துச் சிலர் சுற்றும் நின்று மூலைக்கொருவராக இழுத்தால் என்ன பாடுபடலாருமென்பது சொல்லப்போமோ? என்னால் தாங்க வொண்ணாத சுமையை என் தலைமேலே வைப்பது; ஒருவரிருவரன்றிக்கே ஐவர் வலிப்பது; அதுதானும் ஒருவழியாக வலக்கையன்றிக்கே திசைதோறும் வலிப்பது; இப்படியானால் இது பொறுக்கக்கூடிய விஷயமோ பிரானே! என்கிறார்.

ஈற்றடியினால், அமுதம் கொடுப்பது சிலர்க்கு; விஷம் கொடுத்து உயிரை மாய்ப்பது சிலர்க்கு என்றிப்படி ஒரு விரதம் கொண்டிருக்ககிறயோ? என்று கேட்கிறபடி.

 

English Translation

O Lord you churned the ocean and gave ambrosia to the gods, I wish to sing your glory and melt with love over your lotus-feet.  Instead you made me carry this log and heave a burden.  These five drag me into stormy directions, and beat me painfully, Oh!

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain