(3568)

இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த

முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்

சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு,

என்னம் மா! என் கண்ணா! இமையோர்தம் குலமுதலே!

 

பதவுரை

என் அம்மா

-

என் ஸ்வாமியே!

என் கண்ணா

-

எனக்கு எளியவனானவனே!

இமையோர் தம் குலம்; முதலே

-

நிக்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனே!

ஒர் ஐவர்

-

சப்தாதி விஷயங்கள் ஐந்தும்

இன் அமுது என தோன்றி

-

இனிய அமிருதம் போல் போக்யமாய்த் தோன்றி

 

-

 

யாவரையும் மயக்க

-

எப்படிப்பட்டவர்களையும் மயக்கும் படியாக

நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம்

-

நீ உண்டாகி வைத்த அநாதியான ஸம்ஸாரத்தை யெல்லாம்

முழுவேர் அரிந்து

-

வாஸநையோடே போக்கி

என்னை

-

அடியனே

உன் சின்னமும் திரு மூர்த்தியும்

-

உனது அஸாதாரண லக்ஷ்ணங்களான சங்கசக்ராதிகளையும் திவ்யமங்கள் விக்ரஹத்தையும்

சிந்தித்து

-

நெஞ்சார நினைத்து

ஏத்தி

-

வாயாரத் துதித்து

கை தொழ

-

கையாரத் தொழும் படியாகப் பண்ணி

எனக்கே அருள்

-

எனக்கென்று விசேக்ஷித்த க்ருபையைப் பண்ண வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இன்னமுதென) எனக்குண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையறுத்து, மனமொழி மெய்களாலே உன்னையே நான் நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார். முன்னம் அநுபவிக்குங்காலத்தில் அமுதம்போல் பரமபோக்யமாகத் தோற்றுவதும், பிறகு பரிபாகத்தில் விஷமாயிருப்பதும சப்தாதி விஷயங்களுக்குண்டான இயல்பு. இங்கு “இன்னமுதெனத் தோன்றி” என்று முன்னம் தோன்றுகிற ரீதி மாத்திரமே சொல்லப்பட்டது; பரிணாமத்தில் விஷமாகும் தென்னுமிடம் இங்குச் சொல்லிற்றில்லையேயாகிலும் அது சொற்போக்கில் அர்த்தாத் ஸித்தம்.

இத்திருவாய்மொழியில் பாசுரந்தோறும் ஐவர் என வருவது பஞ்சேந்திரியங்களைக் குறிக்குமதாயினும் இப்பாசுரத்தில் ஐவரென்பது சப்தாதி பஞ்ச விஷயங்களைக் குறிக்குமதாக ஆசாரியர்கள் வியாக்கியான மருளியுள்ளார்கள். ஈடு காண்மின்;- “(ஒரைவர்) தனித்தனியே ப்ரபலமாய் அத்வித்யமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும்.” குருயிரமும் ஒன்பதினாயிரமும் இருப்பத்துதாலாயிரமும் இப்படியே. பன்னீராயிரவுரைகாரர் மாத்திரம் “ஐவர் -ஐந்து இந்த்ரியங்களாலே என்று உரையிட்டார்.

சப்தாதி விஷயங்களானவை முகப்பில் பரமபோக்யம் போலத் தோற்றிப் எப்படிப்பட்ட வாகளையும் மதிகெடுக்கும்படியாக நீ பண்ணிவைத்த பழையதான் இந்த ஸமஸாரபந்தத்தை நிச்சேஷமாக விடுவித்து உன்னுடைய பஞ்சாயுதாதி திவ்ய சின்னங்களையும் அவற்றால் பொலியும் திருமேனியையுமே இடையறாது சிந்திக்கவும் துதிக்கவும் கைதொழிவும் பாங்கான திருவருளைச் செய்யவேணுமென்று பிரார்த்திக்கிறாராயிற்று. சின்னம்-வடசொல்விகாரம்.

 

English Translation

The five senses you gave can deceived anyone as sweet ambrosia.  My Master! My Krishna!  Lord of celestials! Grant that I may be rid of timeless Maya, root and all, that I may contemplate, sing and worship your symbols and forms

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain