(3567)

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒரைவர் வன்கயவரை,

என்று யான்வெல் கிற்பனுன் திருவருளில் லையேல்?,

அன்று தேவர் அசுரர் வாங்க அலைகட லரவம் அளாவி,ஓர்

குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகின்னமுதே!

 

பதவுரை

அன்று

-

பண்டொரு காலத்திலே

தேவர் அசுரர்

-

தேவர்களும் அசுரர்களும்

வாங்க

-

வலிக்கும்படியாக

அலைகடல்

-

அலையெறிகிற கடலிலே

அரவம் அளாவி

-

வாஸூதி யென்கிற பாம்பைச் சுற்றி

ஓர் குன்றம்

-

மந்தர மலையை

வைத்த எந்தாய்

-

நாட்டின் பெருமானே!

கொடியேன் பருகு இன் அமுதே

-

பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!

உன்திரு அருள் இல்லை ஏல்

-

உன்னுடைய கருபை இல்லை யாகில்,

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒர் ஐவர்வன் கயவரை

-

ஆறியிருக்கமாட்டாத பஞ்சேந் திரியங்களாகிற பிரபலக் கொடியவர்களை

யான் என்று வெல் கிற்பன்

-

அடியேன் என்றைக்கு வெல்ல வல்லவனாவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஒன்று சொல்லி) அடியார்கட்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டுவதையே இயல்வாக வுடையனான உன்னுடைய கருணையில்லாயாகில் பிரபரமான இந்திரியங்களை நான் வெல்லுவதென்றொரு பொருளுண்டோ வென்கிறார்.

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத-ஒரு விஷயத்திலே சாபலத்தைப் பண்ணி அது கை புகும்வரையில் அதிலே நிலைநில்லாத என்றபடி. ஒருத்து—ஒருமைப்பாடு. இன்-சாரியை; இல்-ஏழனுருபு. கயவர்-கொடியர். “ஒர் அர்த்தத்திலே நிற்கக் கடவதல்லாத” என்று ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்கையாலே அதறகீடாக “ஓரத்தனில்” என்று பாடமிருக்கலாம் என்றார் ஒரு பெரியயார். அர்த்தம் என்பது ‘அத்தன்’ என்று திரியலாம்; மகரனகரப்போலி. ஆனாலும் “ஒருத்து-ஒருமைப்பாடு” என்று வியாக்கியானங்கள் காண்கையாலே பாடத்திருத்தம் வேண்டாவென்க.

பின்னடிகளிற் குறித்த வரலாறு =  முன்னொரு காலத்தில் இவ்வணட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணு லோகத்துச்சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற் ஒரு வித்யாதர மகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத தன் கை வீணையில் தரித்துக் கொண்டு பிரமரேலபாகவழியாய் மீண்டுவருகையில் துர்வாஸமஹாமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித்துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுகு அங்கு வெகு உல்லாஸமாக ஐரவாத யானையின் மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக்கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்த யானையின் பிடாஜீயின்மேல் வைத்தவளவில் அம்மரயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது; அதுகண்டு முனிவரம் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வாரியங்களெல்லாம் கடலில் ஒளிந்து விடக்கடவன் என்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர். பிறகு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையுந் துணைகொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸூகியென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிலீக லினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமை வடிவமெடுத்து அம்மாலையதின் கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திரளியிருந்தனன். இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹா கூர்மமாய் மந்தரபாவதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க, வாஸூகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர் வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து தன்வந்திரியன் கையிலிருந்த அம்ருத கலசத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள அந்த எம்பெருமான் ஜகந்மோஹனமான ஒரு பெண்வடிவத்தைக் தரித்து அசுரர்களை மயக்கி வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமரர்களுடைய கோஷ்டிக்கு மாத்திரம் ப்ரஸாதித்தனன்.

(இப்படி எம்பெருமான் மோஹிநீரூபத்தால் அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கே அமிருதத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவருகையில், ராஹூவென்னும் ஒர் அசுரன் தான் இருக்கவேண்டிய அசுரர் கூட்டத்தைவிட்டுத் தந்திரமாகத் தேவகோஷ்டியினிடையிலே புகுந்து கையேற்று அமிருதத்தை வாங்கியுண்ண. அதனை ஸூர்ய சந்திரர்கள் குறிப்பித்த மாத்திரத்தில், எம்பெருமான் அவனை அகப்பையா வடித்துத் தலைவேறு உடல்வேறாக்க,அமிருதமுண்டதனால் உயிர் நீங்காத அந்தத்தலையும் உடலும் விஷ்ணுவின் அநுக்ரஹத்தால் ராஹூ கேதுக்கள் என் இரண்டு க்ரஹங்களாகி ஸூலீயன் முதலிய ஏழு த்ரஹங்களோடு சேர்ந்து தம்மேற் கோள் சொன்ன ஸூர்யசந்திரர்க்குப் பகையாய்ச்சிற்சில காலத்தில் அவர்களைப் பிடித்துக் கொள்ளுகின்றன; அதுவேக்ரஹண்மெனப் படுகின்றது-என்பதும் இங்கு அறியத்தக்கது.)

 

English Translation

These fickle senses cannot stick to one path or goal. My sweet ambrosial Lord, you churned the ocean with gods and the Asuras, with a snake rolled around a mountain planted in the deep. Alas, how will ever control my senses if your grace is not forthcoming?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain