(3566)

விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லனிவை,

மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய் யாமற்று நீயும்விட்டால்?

பண்ணு ளாய்கவி தன்னுளாய் பத்தியினுள் ளாய்பர மீசனே! வந்தென்

கண்ணுளாய் நெஞ்சுளாய்! சொல்லுளாய் ஒன்று சொல்லாயே.

 

பதவுரை

விண் உளார்

-

விண்ணுலகில் உள்ளவர் களாய்க்கொண்டே

பெருமாற்கு

-

பராத்பரனான உனக்கு

அடிமை செய்வாரையும்

-

அடிமைசெய்பவர் காளன நித்யஸூரிகளையும்

மண்ணுள்

-

இந்நிலத்திலே

செறும்

-

மேலிட்டு நலியக்கூடிய

ஐம்புலன் இவை

-

இந்த பஞ்சேந்திரியங்கள்

என்னைப் பெற்றால் என் செய்யா

-

(இவற்றை வெல்லுதற்குரிய வலிமையற்ற) என்னிடம் வந்து சேர்ந்தால் இவை என்னதான் செய்ய மாட்டா?

மற்று

-

அதற்கு மேலே

நீயும் விட்டால்

-

சக்தனான நீயும் கை விட்டால்

(என்செய்யா)

-

என்ன செய்யமாட்டா? (எதுவும் செய்யக்கூடுமன்றோ.)

பண் உளாய்

-

ஸ்வரத்தை அறியுமவனே!

கவிதன் உளாய்

-

(என்னுடைய ஆர்த்தியே வடிவெடுத்த சொற்களே யறியுமவனே!

பத்தியின் உள்ளாய்

-

என்னுடைய ஆற்றாமையை அறியுமவனே!

பரம் ஈசனே

-

பராத்பரனே!

என் கண் உளாய் நெஞ்சு உளாய்  சொல் உளாய்

-

என்னுடைய கண்ணோடும் நெஞ்சோடும் வாகிந்திரியத்தோடும் வாசியற உள்ளே ஸந்நிதி பண்ணியிரப்பவனே!

வந்து

-

என்னளவில் வந்து

ஒன்று சொல்லாய்

-

(அபயமாக) ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (விண்ணுளார் பெருமாற்கு.) நம்மிற் காட்டில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று ப்ரஹித்திபெற்றவர்களையும் நலியக்கடவ இந்திரியஙகள் என்னை என்ன பாடுபடுத்தா? என்கிறார். விண்ணுளாருடைய பெருமானுக்கு  அடிமை செய்வாரையும் செறும் என்றும் பொருள்கொள்ளலாம்; விணணுளார்-விண்ணுலகத்திலே யிருப்ப பொருள்கொள்ளலாம். அடிமை செய்வார் என்பதற்கு—அடிமைசெய்ய ருசியுடையார் என்றும், அடிமைசெய்து கொண்டிருப்பவர்கள் என்றும் பொருள்கொள்ளலாம். ஸ்வர்க்கலோக வாஸிகளான இந்திராதி தேவர்களைக் கொள்ளவுமாம்; பரமபத வாஸிகளான கருத்மான் முதலிய நித்யஸூரிகளைக் கொள்ளவுமாம். இருவகுப்பினர் விஷயமாகவும் இரண்டு இதிஹாஸங்களை ஆசாரியர்கள் எடுத்துக்காட்டி இவ்வர்த்தத்தை மூதலிக்கின்றார்கள்.

நரகாஸூரனென்பவன் ப்ராக்ஜோதிஷமென்னும் பட்டணத்திலிருந்து கொண்டு ஸகல ப்ராணிகளையும் நலிந்து தேவஸித்த கந்தர்வாகிகளுடைய கன்னிகைகள் பற்பலரையும் பலாத்காரமாய் அபஹரித்துக் கொண்டுபோய்த் தான் மணம் புணர்வதாகக் கருதிக் தன் மாளிகையிற் சிறைவைத்து, வருணனது குடையையும் மந்தரகிரிசிகரமான ரத்னபருவதத்தையும் தேவமாதாவான அதிதி தேவியின் குண்டலங்களையும் கவர்ந்துபோனதுமன்றி இந்திரனுயை ஐராவத யானையையும் அடித்துக் கொண்டுபோகச் சமயம் பார்த்திருக்க, அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட இந்திரன் வேண்டுதளால் கண்ணபிரான் கருடனை வரவழைத்து ஸத்யபாமையுடனெதான் கருடன் மேலேறி அந்நகரத்தையடைந்து போர்செய்த நரகனைக்கொன்று, அவன் பல திசைகளிலிருந்து கொண்டவந்து சிறைப்படுக்கியிருந்த பதினாயிரத்தொரு நூறு கன்னிகைகளையும் ஆட்கொண்டு, நரசனால் முன்பு கவரப்பட்ட (இந்திரமாதாவான அதிதி தேவியின்) குண்டலங்களை அவளிடம் கொடுக்கும்பொருட்டு ஸத்யபாமையுடனே கருடன் தோள்மேல் ஏறிக்கொண்டு தேவலோகத்துக்குச் செல்ல, அங்கு இந்திராணி ஸத்யபாமைக்கு ஸகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே உரிய பாரிஜாத புஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று ஸமர்ப்பிக்க வில்லையாதலின், அதனைக்கண்டு பாமை விருப்புற்றவளாய் நாதனை நோக்கி ‘பிராணிநாதனே! இந்தப் பாரிஜாத  தருவை த்வாரகைக்குக் கொண்டு நோக்கி ‘பிராணநாதனே! இந்தப் பாரிஜாத தருவை த்வாரகைக்குக் கொண்டு போக வேண்டும், என்றதைக் கண்ணபிரான் திருச்செவிசார்த்தி உடனே வ்ருக்ஷ்த்தை வேரோடு பெயர்த்துத் கருடன் தோளின்மேல் வைத்தருளி த்வாரகைக்குக் கொண்டுபோக, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் இந்திரன் தேவஸைன்யங்களுடனே வந்து மறித்துப் போர்செய்தான்; கண்ணபிரான் அவனை ஸகலஸைன்யங்களுடன் பங்கப்படுத்திப் பின்பு அம்மரத்தைக் கொணர்ந்து ஸத்யபாமையின் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் நாட்டியருளினன் என்கிற மேல்கதை யிருக்கட்டும்; தனக்கு மஹொபகாரம் செய்தருளின பகவான் திறத்தாலே இந்திரன் த்ரோஹியானானென்பது இவ்வரலாற்றினின்று அறியத்தக்கது. “விண்ணுளாரையும் ஐம்புலன் செறும்” என்னத் தட்டுண்டோ?

ஈட்டில் மற்றொர கதையை எடுத்தருளிச் செய்கிறார்-அதாவது; “ஸூமுகனென் கிறஸர்ப்பவிசேஷம் திருவடிகளிலே சென்று கிட்ட, பெரிய திருவடி ஓடிச்சென்று ‘எனக்கு ஆமிஷமாயிருக்கிற  இத்தைக் கைக்கொண்டு நோக்குவதே!’ என்று வெறுத்து ‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் வஹித்துக்கொண்டு திரிந்தேன். நான் என் பெற்றேன்’ எங்றானறே. இதிறே ஸம்ஸாரஸ்வபாவமிருக்கும்படி.”

இங்கு அறியவேண்டிய கதையாவது-தேவேந்திரனுக்கு நண்பனும் மந்திரியும் ஸாரதியுமான மாதலிகேசியென்னும் கன்னிகைக்குக் தக்க வரனைத் தேடுபவனாய்ப் புறப்பட்டு வழியில் நார தமுனிவரைச் சந்தித்துத் துணையாகக் கொண்டு பலவுலகங்களிற் சென்று பார்த்துத் தக்க வரனைக் காணாமல் பாதாள லோகத்தில் வாஸூகியினால் ஆளப்படுகின்ற போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தை யடைந்து அங்கே யிருக்கின்ற அழிகை—குமாரர்களைப் பார்க்கின்றபொழுது ஸூமுகனென்னும் நாககுமாரனை நோக்கி அவனுடைய ரூபலாவண்யங்களிலீடுபட்டு அவனுக்குத் தன்மகளைக் கொடுக்கக் கருதி அவனது பாட்டனாரைக் கண்டுபேச, அவர் மகிழ்ச்சி யோடு குடரமுங் கொண்டவராய் ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இந்த பக்ஷித்து இந்த ஸூமுகனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனென்று சொல்லியிருக்கின்றானாதலால் இவனுக்கு மணஞ்செய்தால் ஏற்ற என்று ‘என்று தெரிவித்தார். அதுகேட்ட மாதலி ‘என்னால் மருமகனாக வரிக்கப்பட்ட உனது பௌத்திரன் எங்களுடன் வந்து தேவேந்திரனைக் காண்பனாயின் அவனுக்கு ஆயுளைத் தந்து கருடனைக் தடுக்க முயல்வேன்’ என்று சொல்லி ஸூமுகனை யழைத்துக்கொண்டு இந்திரனிடஞ் சென்று சேர, அங்கு இந்திரனுடனே உபேந்திரமூர்த்தியான திருமாலும் வீற்றிருக்கையில், நிகழ்ந்த செய்திகளை யெல்லாம் நாரகமுனிவர் சொல்லக்கேட்ட திருமால் இந்திரனை நோக்கி ‘இவனுக்கு அமிர்தத்தைக் கொடுக்கலாம்; அதனால்  இவர்கள் இஷ்டஸித்தியடைந்தவராவர்’ என்று சொல்லியருள், இந்திரன் கருடனது பராக்கிரமத்தை ஆலோசித்துத் திருமாலை நோக்கி ‘தேவரீரே அவனுக்கு அமுதத்தையும் ஆயுளையும் தந்தருள்க’ என்றதற்கு, திருமால் ஸகல லோகாதிபதியான நீ கொடுப்பதே போதும்; அதனை மாற்றுபவர் யார்?’ என்றுகூற, பிறகு இந்திரன் ஸூமுகனுக்கு அமுதமண்பியாமல் நீண்ட ஆயுளை வரமளிக்க, உடனே மாதலி ஸூமுகனுக்குத் தன்மகளை மணம் புரிவித்தான். இச் செய்தியைக் கேள்வியுற்ற கருடன் கோபங்கொண்டு இந்திரனோடு மாறுபட்டு, தனது இரையை அவன் தடுத்து விட்டதற்காகப் பலபல நிஷ்டூரவார்த்தைகள் கூறுகையில், ஸூமுகன் தான் நீண்ட ஆயுளை வரம் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக்கண்டு அஞ்சிப் பாம்பு வடிவாய்க் திருமாலினருகறி சேர்ந்து அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரண்புக. பின்பு கருடன் திருமாலை நோக்கி ‘ஸகல தேவர்களினுள்ளும் மஹா பல சாலியானவுனனைச் சிறிதும் சிரமனின்றி இறகு முனையாற் சுமக்கின்ற என்னிலும் வலிமையுடையார் யார்? இதனைச் சற்று ஆலோசித்துப்பா என்று செருக்கிப் பேச, அக்கடுஞ் சொற்கேட்ட திருமால் கருடனை நோக்கி மிகவும் துர்ப்பலனான நீ உன்னைத் தானே மஹா பலசாலியாக எண்ணி எமது முன்னிலையில் தற்புகழ்ச்சி செய்து கொண்டது போதும்; மூவுலகமும் எனது உடம்பை வஹிக்க முடியாவே; யானே எனது சக்தியால் என்னை வஹித்துக்கொண்டு உன்னையும் வஹிக்கின்றேன். எனது இந்த வலக்கை யொன்றை மாத்திரமாவது நீ தாங்கவல்லையாகில் உனது செருக்கும்மொழி பயன் பட்டதாகும்’ என்று சொல்லிக் கருடானது தோளில் தனது வலக்கையை வைத்த மாத்திரத்தில் அவன் அதன் அதிபாரத்தைத் தாங்க மாட்டாமல் வருந்தி வலிமையொழிந்து மூர்ச்சித்து விழுந்து, பின்னர் அரிதில் தெளிந்து வேண்டும். என்ற பிரார்த்திக்க, திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானங்கூறித் தனது திருவடிகளே பெருவிரலால் ஸூமுகனே யெடுத்துக் கருடன் தோளிவிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாதுக்காக்கக் கடவை’ என்று குறிப்பிக்க, அதுமுதல் கருடன் ஸூமுகனோடு நட்புக்கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸூகமா!’ என்று சேஷமம் விசாரிப்பவனாயினால்-என்பதாம்.

இன்னமும் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்;-“அவன் தான் அவதரித்து சோகிப்பது மோஹிப்பதானாப் போலேயாயிற்று இவர்களும், அன்றிக்கே, அயர்வறுமமரர்களதிபதியாயிருக்கிற ஸர்வேச்வரனுக்கு, ஸம்ஸாரத்திலே முமுக்ஷூக்களாய் கைங்கர்யத்திலே அவகாஹித்திருக்கக் கடவரானவர்களையும் நெருக்கக் கடவ இந்தியங்களிவை, ஒரு விச்வாமித்ர ஸூக்ரீவாதிகளைக் கண்டோமிறே ஜ்ஞாநாதிகனான விச்வாமித்ரனகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே நெடுங்காலம் கிடந்தானிறே. பெருமாளுக்குப் பரிவரான மஹாராஜா;. பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டுவைத்து நாலுமாஸம் இந்த்ரிய பரவசராய் அவ்வழியென்று நினைத்திலாஜீறே.”

“மண்ணுளென்னைப் பெற்றால்” என்ற சொல் நயத்தால் ஆழ்வார் தாம் விண்ணுளாரில் ஒருவர் என்பது தோன்றுமென்ப.

பின்னடிகளின் உட்கருத்தை நம்பிள்ளை வெகு அழகாகவும் உருக்கமாகவும் எடுத்தருளிச்செய்கிறபடி பாரீர்;- (“பண்ணிளாய்) என் ஆர்த்தஸ்வரம் கேளாதிருக்கின்றாயல்லையே. (கவி தன்னுளாய்) என்னுடைய ஆர்த்தி கர்ப்பமான உக்தி கேளாதிருக்கிறயல்லையே. (பக்தியினுள்ளாய்) இப்படி சொல்லுகிற ஆற்றாமை அறியாதிருக்கிறாயல்லையே. (பரமீசனே) உனக்கு முடியாததொன்று உண்டாயிருக்கிறாயல்லையே உன் சேஷித்வம் ஏறிப்பாயாத இடமுண்டோ?”

 

English Translation

These five senses afflict even the celestials who serve and worship you.  What can they not do to an earthling, more so when you too have left me?  O Great Lord, you are hidden in music, in poetry and in devotion.  I see you in my eyes, now in my heart, now in my speech; pray speak a word to me?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain