(3565)

தீர்மருந் தின்றி யைந்து நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,

நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய்,

ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி யேந்தி யசுரர் வன்குலம்,

வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ.

 

பதவுரை

அடல் ஆழி ஏந்தி

-

சேசு பொருந்திய திருவாழியைக் கையிலேதாங்கி

அசுரர் வன்குலம்

-

அசுரர்களின் பிரபலமான கூட்டங்களை

மருங்கு வேர் அறுத்தாய்

-

பக்கவேரோடே அறுத்தவனே!

ஓ விண்ணுளார் பெருமானே

-

ஓ நித்யஸூரிதாதனே!

தீர் மருந்து இன்றி

-

மாற்று மருந்தில்லாதபடி (அபரிஹார்யமாக)

ஐந்து நோய் அடும்

-

ஐந்து வகைப்பட்ட சப்தாதி விஷயங்களாகிற நோய்களாலே முடிக்கக்கடவதான

செக்கில் இட்டு

-

(சரீரமாகிற) செக்கிலே தள்ளி

திரிக்கும் ஐவரை

-

நெருக்கிற பஞ்சேந்திரியங்களை

நேர் மருங்கு உடைத்தா அடைத்து

-

நேரிலும் பக்கங்களிலுமாக  நிறுத்தி

நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்

-

நெகிழ விடுவான் போலேயிரா நின்றாய்;

இனி மருந்து ஆகுவார்யார்

-

இனி மரந்தாகக் கூடியவர் யார்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தீர் மருந்தின்றி.) நான் ஒரு ஸமாதானம் செய்து கொள்ள முடியாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் என்னை ஹிம்ஸிப்பவர்களும் ஐவர்; ஹிம்ஸைக்குப் பரிகரமான வஸ்துக்களும் ஐந்து என்கிறார். சப்தாதி விஷயங்களாகிற ஐந்து நோய்களாலே பஞ்சேந்திரியங்கள் நலிகின்றமையைச் சொன்னபடி. தீர்மருந்தின்றி என்றது-வேறொரு ப்ரதிக்ரியை பண்ணவொண்ணாதபடி என்றவாறு. ஸர்வசக்தியான ஸர்வேச்வரனாலும் போக்கப் போகாத்வையாதலால் இங்ஙனே சொல்லுகிறது. சரீரத்தை இங்குச் செக்கு என்கிறது. செக்கானது சுழன்று கொண்டேயிருப்பதும், உருமாய்க்கும் மாயிருத்தலால் இது சரீரத்திற்குப் பொருத்தமான த்ருஷ்டாந்த மென்க.

நேர் மருங்கு உடைத்தா அடைத்து—நேர்-எதிர்; மருங்கு-பக்கம் என்னுயை எதிரிடமும் இந்த ஐந்து சத்துருக்களை யுடைத்தாம்படி நெருக்கி என்றபடி. எங்குப் பார்த்தாலும் இவையேயாம் படி செய்து என்கை. இங்கே ஈடு;-“அபிமந்யு என்றொரு பாலனை நலிகைக்கு அதிரத மஹாரதர்களடங்கலும் சூழப் போந்தாப்போலே இந்திரியங்களைக் கையடைப்பாக்கி.”

நெகிழ்ப்பானொக்கிறாய் - நெகிழவிடுவான் போலே யிராநின்றாய்: உன்பக்கலில் உண்டாகியிருக்கிற விச்வாஸமும் குலையும் போலே யிராநின்றது என்று தாற்பரியம். இதுவரையில் உன்னை ரக்ஷ்கனென்று நம்பியிருந்தேன்: ரக்ஷ்கனல்லன். பக்ஷ்கன்போலும் என்று இப்போது நினைக்க வேண்டியதாகிறதே! என்றவாறு.

இப்படி சொன்ன ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! உம்முடைய கஷ்டத்திற்கு நீரே ஒரு மருந்து தேடிக்கொள்ளப்பாரும்’ என்ன, ஆர்மருந்தினி மாகுவார்? என்கிறார், மருந்து என்றும் மருத்துவனென்றும் ப்ரஸித்தனான நீயேகை விட்டால் இனி வேறொரு மருந்து தேடப்போமோ? என்கை. மருந்து என்பது அசேதந மாகையாலே ‘எது மருந்தாகும்’ என்று சொல்ல வேண்டுவது முறைமை வாருடைய மருந்து ஒரு பரம்சேதநனாகவெ யிருக்க வேணுமென்னுமிடம் பெறப்படுகிறது. நிர்வாணம்; பேஷஜம் பிஷக்க என்ற ஸஹஸ்ர நாமம் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.

அடலாழியேந்தி யசுரர் வன்குலம் வேர்மருங்கறுத்தாய்-இங்கு அசுரர் என்னுஞ்சொல் அஸூரர்களென்கிற தைத்யவகுப்பனரை மாத்திரம் சொல்லுவதன்று; ஆஸூர ப்ரக்ருதிகளாயுள்ளவர்களை யெல்லாம் சொல்லுகிறது; ஆகவேராக்ஷ்ஸர்களும் இச்சொல்லில் அடங்கவர்கள். ஸூதர்சநசதகத்தில் காசீ விப்லோஷ சைத்யக்ஷ்பண் என்பது முதலான சுலோகங்களில் அடலாழியின் அதிசயம் அறியத்தக்கது.

விண்ணுளார்  பெருமானேயோ!-இவ்விடத்தில் பரமபோக்யமனா ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்;- “ஒருத்தன் சிறையிருக்க, பிதாவும் மாதாவும் சொல்லுகளுமாய்;க் கல்யாணம் செய்யக்கண்டு தான் கூடப்பெறாதே நோவுபடுமாபோலே, நித்யஸூர்களும் பிராட்டியும் அவனுமாகப் பரமபதத்திலே யிருக்கிறபடியை அநுந்தித்து அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். ஹா ராம! ஹாலக்ஷ்மண! ஹா ஸூமித்ரே என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாப் போல, பரமபதத்திலிருப்பும் அணிகலங்கும்படி கூப்பிடுகிறார்.”

 

English Translation

These five senses swirl me in a giant-wheel causing me incurable sicknesses.  O Lord of celestials, you routed the wicked Asura clan; O Lord of radiant discus! Now who will be my medicine?  Alas, you are like the executioner who blocks the front, back and the sides

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain