nalaeram_logo.jpg
(3558)

வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,

செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,

சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்¦ சய் திருவேங் கடத்தானே,

அந்தோ. அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.

பதவுரை

வந்தாய் போலே வாராதாய்

-

கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே!

வாராதாய் போல் வருவானே

-

எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே!

செம் தாமரை கண்

-

செந்தாமரைபோன்ற திருக்கண்களையும்

செம் கனி வாய்

-

செங்கனி போன்ற திருப்பவளத்தையும்

நால் தோள்

-

நான்கு திருத்தோள்களையுமுடைய

அமுதே

-

பரமபோக்யனே!

எனது உயிரே

-

எனக்கு உயிரானவனே!

சிந்தாமணிகள் பகர்

-

சிறந்த ரத்னங்களின் ஒளியான

அல்லை பகல் செய்

-

இரவையும் பகலாக்குமிடமானது

திருவேங்கடத்தானே

-

திருமலையில் வாழ்பவனே!

அந்தோ

-

ஐயோ!

உன பாதம்

-

உனது திருவடிகளே

அடியேன்

-

அடிமைச்சுவடறிந்த நான்

இறையும் அகல கில்லேன்

-

ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வந்தாய்போலே) தம்முடைய விச்லேஷ வ்யஸநத்தைக் கனக்க அருளிச் செய்கிறார். வந்தாய்போலே வாராதாய் – மாநஸாநுபவம் கரைபுரண்டு போகும்போது நோக்கினால் பாஹ்ய ஸம்ச்லேஷமும் பெற்றோம் என்றெண்ணி த்ருப்தி பிறக்கும்படியாயிருக்குமே, அத்தை அதைச் சொல்லுகிறது இங்கு. வாராதாய் போல் வருவானே! – வந்து தோற்றுகைக்கு ப்ரஸக்தி யில்லையென்று நிச்சயித்து ஆசையற்றுக் கிடக்குங்கால், கேட்பாரற்ற ஸ்வாதந்தரியத்தாலும் அப்ரதிஹத ஸங்கல்பத்தாலும் ஆகஸ்மிகமாக வந்து நிற்பதுமுண்டே பகவானிடத்தில், அதைச் சொல்லுகிறது. வேறுவகையாகவும் நிர்வஹிக்கலாம், இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காணமின் – அன்றிக்கே அநாச்ரித விஷயத்தில் , கைபுகுந்தானென்று தோற்றியிருக்கக் செய்தே புறம்பாய் ஆச்ரிதர்க்கு இவன் கிட்டவரியன் என்றிருக்கச் செய்தே உட்புகுந்திருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்“ (இதன் கருத்தாவது) விபவாவதாரங்களிலே சத்ருக்களாதவுள்ளவர்கள் இதோகைப்படாதே யிருப்பன், அடியவர்களாயிருப்பார் இவனுடைய பரத்வத்தை யெண்ணி இவன் நமக்கு எளியனாகப் போகிறானோ என்றிருக்கவும் அவர்களிடத்தே தனது ஸௌலப்யத்தைக் காட்டிக்கொண்டு வந்து நிற்பன் என்கை.

செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால்தோளமுதே – கண்டாருடைய ஸகல தாபங்களும் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களை யுடையையாய், சிவந்து கனித்திருந்துள்ள திருவதரத்தையு முடையையாய், கற்பகத்தரு பணைத்தாற்போலே யிருக்கிற நான்கு திருத்தோகளை யுடையையாய் எனக்கு பரம போக்யனாயிருப்பவனே!

இங்ஙனே வடிவழகின் மிகுதியைப்  பேசினவுடனே எனதுயிரே! என்றது – இப்படி விலக்ஷணமான வடிவழகை நான் அநுபவிக்கும்படி பண்ணி, பிரிவில் நான் உளனாகாதபடி பண்ணிவனே! என்றவாறு.

(சிந்தாமணிகள் இத்யாதி) நெஞ்சால் நினைத்தவாறே எதையும் அளிக்கவல்ல ரத்னத்திற்குச் சிந்தாமணி யென்று பெயர். அதுபோற் சிறந்த ரத்னங்களை இங்குச் சிந்தாமணிகளென்கிறது. திருமலையிலுள்ள ரத்னங்களைச் சொன்னதாகவுமாம், திருவேங்கடமுடையானுடைய திருமேனியிலணிந்துள்ள ரத்னங்களைச் சொன்னதாகவுமாம். அவற்றினுடைய பகர் – ஒளியானது, அல்லைப் பகல் செய்யாநின்றதாம், எப்போமு பகலாகவே காண்கிறதாயிற்று. * படியானது, அல்லைப் பகல் செய்யாநின்றதாம், எப்போதும் பகலாகவே காண்கிறதாயிற்று. * படியிடை மாடத்தடியிடைத் தூணில் பதித்த பன்மணிகளினொளியால், விடிபகலிரவென்ற்றிவரிதாய  திருவெற்றியங்குடியதுவே * என்ற திருமங்கையாழ்வார்ருளிச் செயல் இங்கு நினைக்கத்தக்கது.

பரமபதம் போலே எப்போதும் பகலேயாயிருக்கின்ற திருமலையிலே யெழுந்தருளியிருப்பவனே! என்று சொன்னவுடனே அந்தோ! என்றதன் கருத்தை நம்பிள்ளை யெடுத்துக் காட்டுகின்றார் காண்மின் (அந்தோ) போக்யமும் குறைவற்று அவன் தானும் ஸந்நிஹிதனாய் எனக்கு ஆசையும் மிகுந்திருக்கக் கிட்டி யநுபவிக்கப்பெறாதொழிவதே என்கிறார்.

அடியேன் உனபாதம் இறையும் அகிலகில்லேன் திருவடிகளை விட்டு நீங்காதவன் என்கிற காரணத்தினாலன்றோ அடியேனென்று பேர் பெற்றது, அகவே அடியேனாயிருந்துவைத்து உன் திருவடிகளை விட்டு அகல்வேனோ நான்? இங்கு இறையும் என்றதற்க அந்தரங்கமான கருத்தை நம்பிள்ளை வெளியிடுகிறார் – “தர்சியாநிற்கச்செய்தே அதுக்கு வர்த்த கமாகக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்கமாட்டேன்“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. அகன்றிராமே கலந்திருக்கச் செய்தே அக்கலவிக்கு உத்தேஜகமாக அந்ய பரத்வம் காட்டுவதுண்டு அதுவும் பொறுக்க முடியாதது என்றவாறு.

English Translation

You never come when you seem to, and come when you only seem to.  My soul's ambrosia!  My Lord with lotus eyes, coral lips and four arms!  O Lord of Venkatam, where brilliant gems turn night into day!  Alas, I cannot bear the separation from your feet even for a moment!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain