nalaeram_logo.jpg
(3557)

நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில்,

நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும்,

சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே,

மாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே.

பதவுரை

நுண் உணர்வின்

-

(ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான

நீலார் கண்டத்து அம்மானும்

-

சிவபிரானும்

நிறை நான்முகனும்

-

(ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும்

இந்திரனும்

-

தேவேந்திரனும்

உன பாதம் காண வோது ஆற்றேன் என்று

-

“உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு

சேல் எய் கண்ணார் பலர் சூழ

-

கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து

விரும்பும்

-

விரும்பிப்பணியுமிடமான

மால் ஆய் மயக்கி வந்தாய் போலே

-

மயக்கிக்கொண்டு வந்தாப்போலே

அடியேன் பால் வராய்

-

அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நோலாதாற்றேன்) ஸாதநாநுஷ்டானம் என் பக்கலில் ஒன்றுமில்லையென்று சொல்லிக்கொண்டே ஆசைப்பட்டு நாக்கு நீட்டினால் கிடைக்குமோ? என்று எம்பெருமான் திருவுள்ளகளுங்கூடத் தங்களுடைய உபாய தாரித்ரியத்தைச் சொல்லிக் கொண்டன்றோ வந்து உன்னைக் காணப்பெறுகிறது என்கிறார். “நோலாதாற்றேனுள பாதங்காண“ என்பது –நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனுமிந்திரனும் சொல்லும் பாசுரமாயிற்று. “பிரானே! உன் தருவடிகளைக் காண்கைக்கு ஸாதநாநுஷ்டானம் பண்ணாதேயிருந்து வைத்து உன்னையொழிய ஆற்றமாட்டேன்“ என்பதாம் அந்தத் தேவர்களின் வார்த்தை. இங்கே நம்பிள்ளை ஆச்சரியமாக அருளிச் செய்கிறார், “ஒரு பாணாஸுர யுத்தத்திலே தோற்றுப் போக்கடியற்றாவாறே இங்ஙனே வந்து விழுவர்கள், ரஜஸ்தமஸ்ஸுக்கள் தலையெடுத்தபோது “ஈச்சவர்ரோஹம்“ என்றிருப்பார்கள். முட்டினவாறே * க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் * என்று ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்வர்கள்“.

நுண்ணுணர்வின் - * ஈசாநாத் ஜ்ஞாமந்விச்சேத் * என்று சாஸ்தரம் சொன்னபடி பிறர்க்கு ஞானமளிக்க வல்லனாம்படி ஸூக்ஷ்மஜ்ஞாநம் நிரம்பியவனாம் நீலகண்டன். நீலார் கண்டத்தம்மான் – விஷத்தைக் கண்டத்திலே தரித்த சக்தியை யுடையனாய் அத்தாலே உலகுக்கு தலைவனாகத் தன்மை யபிமானித்திருக்குமவனென்கை. இங்கே ப்ராஸங்கிகமாக ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்,

“அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்யங்களை ப்ரமாணமாகக்கொண்டு போராநின்றோமே யென்னில், ஸத்வம் தலையெடுத்தபோது சொல்லுமவையெல்லாம் கொள்ளக்கடவோம். இவை கைக்கொண்டோமென்னா இவர்கள் தாங்கள் உத்தேச்யராகார்கள், * காக்கை வாயிலுங்கட்டுரை கொள்வர் என்றுண்டே – என்று பட்டரருளிச் செய்வர்.

சேலேய்கண்ணார் பலர் சூழவிரும்பும் – கயல்போன்ற கண்களையுடையவர்களென்று ஸ்த்ரீகளைச் சொல்லுகிறது ப்ரக்ருதத்தில் அவரவர்களுடைய பத்நிகளைச் சொல்லிற்றாகிறது, தேவர்கள் வந்து சரணம் புகும்போது தாங்கள் தனித்து வருகையன்றிக்கே மணாட்டிமார்களோடு கூடி வருவர்களாம். (ஈடு) “ஆபத்து வந்தவாறே மணாட்டிமார்கழுத்தலும் தங்கள் கழுத்திலும் கப்படங் கட்டிக்கொண்டு வந்துவிழத் தொடங்குவர்கள்.“

மாலாய் மயக்கி அடியேன்பால் வாராய் – மாலாய் மயக்கி வந்தாப்போலே அடியேன்பால் வாராய் என்று அந்வயிப்பது. மால் என்று கண்ணபிரானைச் சொல்லுகிறது. கண்ணபிரானாய் பிறந்த பியாமோஹ சேஷ்டிதங்களைச் செய்து வஸுதேவாதிகள் முன்னேவந்து நின்றாப்போலே என்முன்னே வந்து நிற்கவேணுமென்று பிரார்த்தித்தபடி. (ஈடு) “க்ருஷ்ணனாய்க்கொண்டு உன் குண சேஷ்டிதங்களாலே அவ்வதாரத்திலுள்ளாரைப் பிச்சேற்றிக் கொண்டு வந்தாப்போலே எனக்காகவும் ஒரு வரத்து வரவேணும்.“

English Translation

Alas, undeservingly I crave and grieve for your lotus feet!  The blue-throated Siva, the four-faced Brahma, the subtle-minded Indra and many fish-eyed damsels surround you desirously forever.  O Lord of Venkatam, pray come as you did then, and bewitch me!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain