nalaeram_logo.jpg
(3555)

எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,

எந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,

மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே,

மெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

பதவுரை

மண் அளந்த தாமரைகள் இணை

-

உலகமளந்த உபயபாதங்களை

நாம் காண்பதற்கு எந்நாள் என்று

-

நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று

இமையோர்கள்

-

நித்யஸூரிகள்

எந்நாளும் நின்று ஏத்தி

-

நிரந்தரமாக நின்று துதித்து

இறைஞ்சி

-

வணங்கி

இனம் இனம் ஆய்

-

திரள் திரளாக

மெய் நா மனத்தால்

-

த்ரிகரணங்களாலும்

வழிபாடு செய்யும்

-

ஆராதனை செய்யுமிடமான

திருவேங்கடத்தானே

-

திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!

அடியேன் நான்

-

அடியேனாகிய நான்

மெய் எய்தி

-

(கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து

உன் அடிக்கள் மேவுவது

-

உன் திருவடிகளிலே பொருந்துவது

எந்நாள்

-

என்றைக்கோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (எந்நாளே நாம்.) கீழ்ப்பாட்டில் “உனபாதம் சேர்வதடியே னெந்நாளே“ என்றதற்கு உன் திருவடிகளே நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா? அது எது? என்று ஸந்தேஹித்துச் சொல்வதாகவும் பொருளாகக்கூடுமே, எம்பெருமான் “ஆழ்வீர்! எந்நாளேயென்று நீர் ஸந்தேஹிப்பதென்? அது ஒரு தேசவிசேஷத்திலே நியதமாயிருக்குமே“ என்றரு மாத்திரம் தேசவிசேஷமா? என்கிறார். இப்பாட்டின் இரண்டாமடியில் இமையோர்கள் என்றது நித்யஸூரிகளைச் சொல்லிற்றாகக் கொண்டால் இங்ஙனே ஸங்கதியாகக் கடவது இனி, ஸர்வர்க்கலோகத்திலுள்ள தேவர்களைச் சொல்லிற்றாகக் கொண்டால், ப்ரயோஜநாந்தரநான் இழந்துபோவதே! என்கிறாராகக் கொள்க.

பன்னீராயிரவுரைகாரர் “எந்நாளேம்“ என்று பதம் பிரித்து உரையிட்டார், “எந்நாளேம் என்றது எந்நாளையுடையோமென்றபடி“ என்பது உரையில் முடிவிலுள்ளது. எந்நாளேம் நாம், எந்நாளேநாம் என்று சந்தியாகும். மவ்வீறொற்றெழிந்து உயிரீறொப்பவும்“ என்பது நன்னூல் மகரவீற்றதல்லாமல் “எந்நாளே“ என்றே சொல் வடிவமானாலும் அந்வயிக்கக் குறையில்லை, மண்ணளந்த இணைத்தாமரைகளை நாம் காண்பதற்காகும் நாள் எந்நாள் என்றதாகக் கொள்க.

இவ்விபூதியிலுள்ளார் அவ்விபூதியிலே சென்று அங்குள்ள பரவத்வத்தைக்கண்டு உகந்து அங்கே அடிமைசெய்ய ஆசைப்படுமாபோலே அங்குள்ளாரும் இவ்விபூதயிலே வந்து ஸௌலப்ய “ஸர்வஸுலபமான திருவடிகளை நாம் காணப் பெறுவதன்றோ“ என்ற பாரிப்போடே வந்து இவ்விடம் விட்டுப் பெயர்ந்து போகமாட்டாதே நியதமாக நிலைநின்றிருந்து திரள்திரளாய் மநோவாக் காயங்களினால் ஆச்ரயிக்கும்படியான திருமலையில் உறையும் பெருமானே!

மெய் நா மனத்தால் வழிபாடு – மெய்யினால் செய்யும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள், நாவினால் செய்யும் வழிபாடு –தோத்திரம் மனத்தால் செய்யும்  வழிபாடு –சிந்தித்தல். மெய் என்பதை நாவிலும் மனத்திலும் அடைமொழியாகவும் கூட்டலாம், மெய்யான நா, மெய்யான மனம் என்க. இங்கு மெய்ம்மை ப்ரயோஜநாந்தரத்தை விரும்பாமை.

ஈற்றடிக்கு ஈடு காண்மின், - “குணாவிஷ்காரத்தாலே மாநஸாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்டவொண்ணாது, நான் உன் திருவடிகளைப் பத்தும்பத்தாகக் கிட்டி பின்னை விச்லேஷத்தோடே வ்யாப்தமாகாதபடி பொருந்தப்பெறுவது என்றோவென்கிறார். ஓரடிவிடில் வத்தையற்றிறே இவர்க்கிருக்கிறது.“

முதலடியில் “இணைத்தாமரையடிகள்“ என்ன வேண்டுமிடத்து “இணைத்தாமரைகள்“ என்றது முற்றுவமை. * தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே * என்ற விடத்திற்போல.

பவிஷ்யத் புராணத்தில் சரணாபதியநுஷ்டானத்தைக் காட்டுமிடத்தில் * லோகவிக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ * என்று உலகளந்த திருவடிகளை ப்ரஸ்தாவித்து அந்தத் தருவடிகளிலே சரணாகதியநுஷ்டானம் செய்வதாகக் காட்டியிருத்தாலும், கத்யமுகத்த லே சரணாகதிசெய்தருளின எம்பெருமானார் தாமும் அந்த ச்லோகத்தை முன்னிட்டே உலகளந்த திருத்தாளிணையில் சரணாகதி செய்த்தாகக் காட்டியிருக்கையாலும் சரணாகதி ப்ரகரணத்தில் உலகளந்த திருவடிக்கு ஒரு விசேஷமுண்டென்று தெரிகிறது. இங்கு மேலே * அகலகில்லே னென்கிற பாசுரம் சரணாகதியாகையாலே இவ்வாறாம்பத்து முழுவதும் சரணாபதிஸாரமாயிருக்குமென்று நம் முதலிகள் திருவுள்ளம் பற்றுவர்கள். அதற்கு ஏற்ப இவ்வாறம்பத்தில் உலகளந்த திருவடி ப்ரஸ்தாவம் மலிந்திருக்கும், * மின்கொள்சேர் புரிநூல் குறளாயகன் ஞாலங்கொண்ட வன்மளந்த மாயனென்னப்பன் * திசைஞாலம் தாவியளந்தும் * மாலுக்கு வையமளந்த மணாளற்கு * மண்ணும் விண்ணுங்கொண்ட மாணவம்மான் * ஓரடியா லெல்லாவுலகுந் தட வந்த மாயோன். தாவி வையங்கொண்ட தடந்தாமரைகள் * (இங்கு) * மண்ணளந்த இணைத்தாமரைகள்.

இதனால், ஆழ்வாருடைய சரணாகதிக்கு இலக்கான திருவேங்கடமுடையானது திருவடிகள் உலகமளந்த திருவடிகளேயென்று காட்டப்பட்டதாயிற்று அதாவது, அத்தகைய ஸௌலப்ய ஸௌசீல்யம் வாய்ந்தவை என்கை.

English Translation

O Lord of venkatam whom celestials worship everyday, through thought, world, deed, and praise!  I long to see the lotus-feet that spanned the Earth. O, when will the day be when I join you inseparably?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain