nalaeram_logo.jpg
(3554)

புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ,

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ,

திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே,

திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே?

பதவுரை

அன்று

-

ராமாவதாரத்திலே

புணரா நின்ற மரம் ஏழ்

-

ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை

எய்த

-

துளைபடுத்தின

ஒரு வில் வலவா ஓ

-

ஓ தனிவீரனே!

புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே

-

சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே

போன்

-

தவழ்ந்து சென்ற

முதல்வா ஓ

-

ஓ மூலபுருஷனே!

திணர் ஆர் மேகம் என

-

தின்மை மிக்க மேகங்களென்னும்படி

களிறு சேரும்

-

யானைகள் சேருமிடமான

திருவேங்கடத் தானே

-

திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே

திணர் ஆர் சார்ங்கத்து

-

திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய

உன பாதம்

-

உனது திருவடிகளை

அடியேன் சேர்வது எந்நாள்

-

அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (புணராநின்ற) ஆழ்வீர்! நீர் இங்ஙனே கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம்முடைய விருப்பம் செய்வதாகவே நினைத்திருக்கிறோமென்று திருவேங்கடமுடையான் திருவுள்ளமாக, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளிட்டு தரலாகாதோ வென்கிறார்.

ஸுக்ரீவன் இராமபிரானால் அபயப்ரதானம் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப் பலவாறு சொல்லி வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒரு யோஜநை தூரம் தூக்கியெறிந்த்தையுங் குறித்துப் பாராட்டிக்கூறி இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது கூடுமோ? என்று சொல்ல, அதுகேட்ட லக்ஷ்மணன், உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது என்னசெய்ய வேண்டுவது? என்ன, ஸுக்ரீவன், இராமபிரான் நீறுபூத்த நெருப்புப்போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும் போது சங்கையுண்டாகின்றது, ஏழு மராமரங்களைத் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும் என்று சொல்ல, ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாகுமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்துயோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக்கண்ட ஸுக்ரீவன் “முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைக் தூக்கியெறிந்தான், இப்போது உலர்ந்துவிட்ட இதனைத் தூக்கியெறிதல் ஒரு சிறப்பன்று“ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின்மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டு அம்பறாத் தூணியை யடைந்த்து என்கிற வரலாறு இப்பாட்டின் முதலடியில் அறியத்தக்கது. இந்தச் சரிதையை ஆழ்வார் இங்கு எடுத்துக் கூறியது, உன்னுடைய ஆற்றலில் நம்புதலில்லாமல் அதிசங்கை கொண்ட குரக்கரசனுக்கு சங்கையைப் போக்கியும் காரியம் செய்த நீ, உன் பக்கலில் அதிசங்கை சிறிதுமின்றிக்கே உன் ஆற்றலை உள்ளபடியறிந்திருக்குமென் திறத்திலே காரியஞ் செய்யலாகாதோ? என்கைக்காக.

கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கிருஷ்ணனைத் திருவயிற்றில் தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில் முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களைக் கிடந்த குபேரபுத்திரரிருவரும் சாபம் தீர்ந்து சென்றனர் என்கிற வரலாறு இரண்டாமடியில் அநுஸந்திக் கத்தக்கது. இன்னாருடைய சாபத்தைத் தீர்ப்பது, இன்னாருடைய சாபத்தைத் தீர்க்கலாகாது என்று ஒரு நியதி வைத்துக்கொண்டிருக்கிறாய் போலும் என்று கேட்கிற பாவனை.

(திணரார்மேகமித்யாதி) களிறென மேகஞ்சேரும், மேகமெனக் களிறுசேரும் என்று இரண்டுபடியும் அந்வயிக்கப்பொருந்தும். யானைபோன்ற மேகங்களும், மேகம்போன்ற யானைகளும் திருமலையிலே வர்த்திப்பது இயல்பு. * தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய் * என்றும் * சோலை மழகளிறே * என்றும் யானை தானாகச் சொல்லலாம்படியும் எம்பெருமானிருக்கிற இருப்புக்கு ஸ்மாரகமானபடி.

திணரார் சார்ங்கத்து உன-உன்கையில் வில் இருக்க நான் இழக்க வேண்டுவதில்லை, இழக்கமாட்டேன், இனி உன்னைப் பெறும் நாளைச் சொல்லியருளினால் போதுமென்கிறார்.

English Translation

O Deft archer who pierced an arrow through seven trees! O First-Lord who went between the two Marudu trees!  O Lord of Venkatam where elephants resemble dark clouds! O Wielder a the heavy sarngo-bow, when will I reach your feet.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain