nalaeram_logo.jpg
(229)

மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு வாய்வைத்துஅவ் வாயர்தம் பாடி

சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்துஉன்னைச் சுற்றும் தொழநின்ற சோதி

பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்றகுற் றமல்லால் மற்றிங்கு

அரட்டா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

மருட்டு ஆர்

-

(கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமையுள்ள

மெல்

-

மெல்லிய (த்வநியையுடைய)

குழல் கொண்டு

-

வேய்ங்குழலைக் கையிற் கொண்டு

பொழில்

-

(ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே

புக்கு

-

போய்ச்சேர்ந்து

(அந்த வேங்குழலை)

வாய் வைத்து

-

(தன்) வாயில்வைத்து (ஊத)

(அவ்வளவிலே)

ஆயர் தம் பாடி

-

இடைச்சேரியிலுள்ள

சுருல் தார் மெல்குழல்

-

சுருண்டு பூவனிந்த மெல்லிய குழலையுடைய

அ கன்னியர்

-

(இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள்

(குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்)

வந்து

-

(அச்சோலையிடத்தே) வந்து

உன்னை

-

உன்னை

சுற்றும் தொழ

-

நாற்புரமும் சூழ்ந்துகொண்டு ஸேவிக்க

நின்ற

-

(அதனால்) நிலைத்துநின்ற

சோதி

-

தேஜஸ்ஸையுடையவனே

எம்பெருமான்

-

எமக்குப் பெரியோனே!

உன்னை

-

(இப்படி தீம்பனான) உன்னை

பெற்ற

-

பிள்ளையாகப்பெற்ற

குற்றம் அல்லால்

-

குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக்கொண்டேனத்தனை) யல்லது

இங்கு

-

இவ்வூரில் உள்ளாரோடொக்க

மற்று பொருள் தாயம் இலேன்

-

மற்றொரு பொருட்பங்கையும் பெற்றிலேன்;

அரட்டா

-

(இப்படிப்பட்ட) தீம்பனே!

உன்னை அறிந்து கொண்டேன் ; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் சர்வஜந மோஹநமான ஸ்வரத்தையுடைய வேய்ங்குழலையெடுத்துக்கொண்டு ஸர்சவிஹாரத்துக்குப் பாங்கான சோலைப் புறங்களிலேபோய், தான் விரும்பின பெண்களின் பேரைச்சொல்லுதலும், தன்மேல் கொண்டிருக்கும் பெண்களின் காலைக் கையைப்பிடித்துக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி அக்குழலை ஊதினவளவிலே, இடைச்சேரியில் தந்தம் மாமியார் முதலியோரால் காவலிலே நியமிக்கப்பட்டுள்ள பெண்கள் இக்குழலோசையைக் கேட்டுப் பரவசைகளாய் “****”” என்று-தந்தம் நியாமகர்களையும் லக்ஷியம்பண்ணாமல் கண்ணனிருப்பிடத்தேற ஓடிவந்து அவனைச் சுற்றிக்கொள்ள அதனால் அவன் விலக்ஷணமான ஒளியை முகத்திற்பெற்றானென்ற கருத்தைக்காட்டும் முதலிரண்டடி. மருட்டு-பிறவினைப் புருதியே தொழிற்பெயர் தந்தது; மயங்கப்பண்ணுதல் என்று பொருள். வாய்வைத்து-வாய்வைக்க; எச்சட்திரிபு. “அவ்வாயர்தம்பாடி” என்றவிடத்திலுள்ள அகரச்சுட்டு கன்னியர் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. சுருள் = சிறந்த கூந்தலுக்குச் சுருட்சி இலக்கணமென்க. தார்-பூமாலை. சுற்றுந்தொழும்படிநின்ற, சோதி-பரஞ்சோதியாகிய கண்ணபிரானே! என்று முரைக்கலாம். [பொருள்தாயமியாதி.] ‘இப்படிப்பட்ட பெருந்தீம்பனான பிள்ளையைப் பெற்றாயே பாவி’’ என்று. என்னை அனைவரும் காறுகாறென்னும்படியான நிலைமையை நான் உன்னால் பெற்றேனேயொழிய வேறொரு ஸாம்ராஜ்யமும் பெற்றேனில்லையென்கிறாள். உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றமொழிய, உன்பொருட்டாக பந்துவர்க்கங் கெடாதபடியானேன்” என்பர்-திருவாய்மொழிப்பிள்ளை.

English Translation

You enter the groves with a slender flute and play enchantingly; Curly-locked maidens of the village come pouring out to you and worship you from all sides. O Radiant Lord, other than receiving a bad name for begetting you. I have no share in the common wealth of the village. O Wicked One! I know you now, I fear to give you suck.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain