nalaeram_logo.jpg
(228)

கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றா நிறைமண்டித் தின்ன

விரும்பாக் கன்றொன்று கொண்டு  விளங்கனி வீழ எறிந்த பிரானே

சுரும்பார் மென்குழல் கன்னி யொருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும்

அரம்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

நீள் வயல்

-

பரந்த வயலிலே

கரும்பு ஆர்

-

கரும்பு போலக் கிளர்ந்துள்ள

காய்

-

பசுங்காயான

கதிர்

-

கதிரையுடைய

செந்நெலை

-

செந்நெல் தாந்யத்தை

கன்று ஆ நிரை

-

கன்ருகலோடு கூடின பசுக்களின் திரள்

மண்டி தின்ன

-

விரும்பித்தின்னா நிற்கச் செய்தே

(அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான)

விரும்பா கன்று ஒன்று

-

(நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை

(அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து)

கொண்டு

-

(அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த)

விளங்கனி

-

விளாமரத்தின் பழங்கள்

வீழ

-

உதிரும்படி

எறிந்த -

-

(அவ்விளாமரத்தின்மேல் அக்கன்றை) வீசியெறிந்த

பிரானே

-

பெரியோனே!

சுரும்பு ஆர்

-

வண்டுகள் நிறைந்த

மென் குழல்

-

மெல்லிய குழலையுடையனான

கன்னி ஒருத்திக்கு

-

ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக

சூழ் வலை

-

(எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக்கடவ (திருக்கண்களாகிற) வலையை

வைத்து

-

(அவள் திறத்திலே விரித்து) வைத்து

திரியும்

-

(அந்யபாரைப்போலத்) திரியாநின்ற

அரம்பா

-

தீம்பனே!

உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல வேணுமென்ற கருத்துக் கொண்டுள்ள கம்ஸன் பற்பல அஸுரர்களைப் பற்பல வகையாக உருவெடுத்துத் தீங்குசெய்யும்படி ஏவியிருந்ததற்கேற்ப ஓரஸுரன் விளாமரமாய் வந்து நின்றான்; ஒரஸுரன் கன்றினுருவங்கொண்டு, வயல்களிற் கரும்புபோலக் கிளர்ந்துள்ள செந்நெற்களை மேய்ந்துகொண்டிருந்த பசுத்திரளிலே கூடிக் கலந்து அவற்றைப் போல் தானும் மேய்கிறாப்போல் பாவனை பண்ணி அச்செந்நெற்களை மெய்யே மேயாதொழிந்தவாசியைக் கண்ணபிரானுணர்ந்து ‘அஸுரப்பயல் இங்ஙனே வந்துளன்’’ என்றறுதியிட்டு அக்கன்றை எறிகுணிலாகக் கொண்டு அவ்விளாமரத்தின்மே லெறிந்தவரலாறு முதலிரண்டடிகளிற் கூறப்பட்டது. கன்று+ஆநிரை, கற்றாநிரை. கூந்தலில் பூமாறாதேயிருந்ததால் அதில் மதுவைப்பருகுவதற்காக வண்டுகள் படிந்திருக்கப் பெற்ற முடியையுடையாளொரு மங்கையை தன்வசப்படுத்திக் கொள்வதற்காகத் “தாமரைத்தடங்கண் விழிநளினகவலை” என்றும்” , “கார்த்தண் கமலக் கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறு” என்றும் வலையாகச் சொல்லப்பட்ட தன்கண்களை அவல்மேல் விரித்துவைத்து இவ்வாறு தீம்புசெய்பவனே! என்பது மூன்றாமடியின் கருத்து; இவன் அவளைக் கண்ணால் குளிர நோக்க, அவள் அதுக்கு அற்றுத்தீர்ந்து இவனுக்கு வசப்படுவளென்க. சூழ்வலை-தப்பாமல் அகப்படுத்திக்கொள்ளலும் வலை. இங்கு (’கண்’ என்ற) உபமேயத்தை அதன்சொல்லாற் சொல்லாமல் (சூழ்வலைஎன்ற) உபமாச் சொல்லால் இலக்கணையாகச் சொல்லியிருத்தலால்- உருவகவுயர்வு நவிற்சியணி; வடநூலார், ரூபகாதிசயோக்தியலங்கார மென்பர்.

English Translation

Grazing the cows in tall fields with golden ears of paddy, then noticing an odd calf not grazing, you grabbed his feet and swirled him, then let go to dash him against a wood-apple tree, felling its fruit. O Bad One roaming the streets, spinning a trap for bee-humming flower-coiffured maidens! I know you now, I fear to give you suck.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain