nalaeram_logo.jpg
(227)

முப்போ தும்கடைந் தீண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி

கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி

மெய்ப்பா லுண்டழு பிள்ளைகள் போலந விம்மிவிம் மியழு கின்ற

அப்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

முப்போதும்

-

மூன்று சந்திப்போதுகளிலும்

கடைந்து

-

(இடையரால்) கடையப்பட்டு

ஈண்டிய

-

திரண்ட

வெண்ணெயினோடு

-

வெண்ணையையும்

தயிரும்

-

தயிரையும்

விழுங்கி

-

(களவுகண்டு) விழுங்கி,

(அவ்வளவோடும் நில்லாமல்)

ஆயர்கள்

-

அவ்விடையர்கள் (தம்முடைய)

கப்பால்

-

தோளாலே (வருந்திச்சுமந்து)

காவில்

-

காவடியில்

கொணர்ந்த

-

கொண்டுவந்த பால் முதலியவற்றை

கலத்தொடு

-

(அந்தப்) பாத்திரத்தோடே

சாய்த்து

-

சாய்த்து

பருகி

-

குடித்தும்

(அதனால் பசியடங்கினபடியை மறைக்க நினைத்து)

மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற

-

முலைப்பாலை உண்டு (அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற

அப்பா

-

பெரியோனே!

(உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்த இடைச்சேரியிலோ காலை உச்சி அந்தியென்கின்ற மூன்று காலங்களிலும் பசுக்கள் கறக்கின்றன; இம்மூன்று காலங்களிலும் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்கிறார்கள். அப்படிக் கடைந்தெடுத்த வென்ணையையும் தயிரையும், இடையர்கள் காவடியிலே தம் தோளினால் சுமந்துகொண்டு வந்த பால்களையும் மிச்சமில்லாதபடி நீ குழந்தையாக இருக்கிற இப்பருவத்திலேயே உண்டு விடுகிறாய்; அப்படியுண்டும், முலைப்பாலையே தங்களுக்குத் தாரகமாகக் கொண்டு உண்டு அம்முலைப்பால் பெறாதபோது அழுகிற பிள்ளைகளைப் போலே

என்னுடைய முலைப்பாலையுண்டதற்குப் பொருமிப் பொருமி அழவும் அழுகிறாய்; இப்படி அதிமாநுஷச் செயல்களையுடைய பெரியோனே! நீ மனிதனல்லையென்று நான் உணர்ந்து கொண்டேன்; ஆகவே உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள். நீ என்பது வார்த்தைப்பாடு; அதற்கு இங்கு பொருளில்லை. முப்போது-காலை உச்சி அந்தியாகிற மூன்றுகாலம்.-மெய் என்று உடம்பாய் இலக்கணையால் முலையைக் குறித்தது. உலகத்தில் முலைப்பாலையே உண்டு வளர்கின்ற பிள்ளைகள் முலைப்பால் பெறாதபோது பசியின் மிகுதியால் அழுமா போலே இக்கண்ணபிரானும் “நமக்குப் பசியுள்ளமையைக் காட்டாவிடில் நம் தாய் ‘இவன் எங்கேனும் களவு கண்டு உண்டிருக்கக்கூடும்’ என்று ஐயப்பட்டு நம்மைத் தண்டிக்க ஒருப்படுவள்” என்று நினைத்து (ப் பசியுள்ளவன் போல) அழுகின்றமை மூன்றாமடியில் விளங்கும். கொணர்ந்த-பலவின்பால் வினையாலணையும் பெயர்; பெயரெச்சமன்று.

English Translation

You gobble up the curds and butter churned all day long, then drink up the milk straight from the canister, brought on a yoke by the cowherds, then also drink breast-milk and cry for more like a wailing babe. My Master! I know you now, I fear to give you suck.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain