(3494)

நாய கன்முழு வேழுல குக்குமாய் முழுவே ழுலகும்,தன்

வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய் அவையல் லனுமாம்,

கேசவன் அடியி ணைமிசைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன

தூய வாயிரத் திப்பத் தால் பத்தராவர் துவளின்றியே.

 

பதவுரை

முழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய்

-

எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி

முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து

-

அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி.

அவை ஆய்

-

அவை தானேயாய்

அவை அல்லனும்

-

அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான

கேசவன்

-

எம்பெருமானுடை

அடி இணை மிசை

-

உபயபாதங்கள் விஷயமாக

குருகூர் சடகோபன் சொன்ன

-

ஆழ்வார் அருளிச்செய்த

தூய ஆயிரத்து

-

பரிசுத்தமான ஆயிரத்துள்ளே

துவள் இன்றி பக்தர் ஆவர்

-

அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நாயகன்) கண்ணபிரானுடைய திவ்யசேஷ்டிதங்களைப் பேசின இத்திருவாய்மொழிகாங்கேய ஸம்பவாதி அஸந்தேயம். (அதன் கருத்து) வால்மீகிபகவான் ராமகதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று தொடங்கி, கங்கையின் உற்பத்தி ஸுப்ரஹ்மணியனுடைய உற்பத்தி, புஷ்பகவர்ணநம் முதலான கதைகளைப் பரக்கப் பேசினதால் அஸத் கீர்த்தனம்பண்ணி வாக்கில் அசுத்தி படைத்தான், வேதவ்யாஸபகவானும் * நாராயணகதாமிமாம்* என்று நாராயணன் கதையைச் சொல்வதாக விழிந்து, ஸம்பவபர்வத்திலே பீஷ்மர் முதலான பற்பலருடை உத்பத்தி ப்ரகாரங்களை விரிவாகப் பேசுகையாலும், பூசல்பட்டோலை (யுத்த புஸ்தகம்) என்னும்படி பாரதப்போர் வகைகளையே பரக்க நின்று வருணித்த படியாலும் அஸத்கீர்த்தனத்திலே மிகவும் பரந்து வாக்கை அசுத்தமாக்கிக் கொண்டு, பிறகு அஸத்கீர்தம காந்தார பரிவர்த்தநபாம்ஸுலாம், சம் சௌரி கதாலாபகங்கயைவ புநீமஹே * என்று, அப்படி அசுத்தமான வாக்கை பகவத்கதா கீர்த்தநமாகிற கங்கையினாலே சுத்தமாக்குகிறேனென்று தானே சொல்லி சுத்தி பண்ணினான். ஆகவிப்படி தொடங்கினபடிக்குச் சேராமே அஸத்கீர்த்தனத்தைப்பண்ணி வாக்கை அசுத்தமாக்கிப் பின்பு அதற்கு சுத்திபண்ண வேண்டாதபடி, ஆழ்வார் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் * திருமாலவன்கவி * என்று திருமால் விஷயமான கவியென்று வாயோலையிட்டபடியே இதர விஷயஸம்பந்தமுள்ள ஒரு சொல்லும் ஊடு கலசாதபடி சொற்களைத் தெரிந்தெடுத்து விஷயத்திற்குத் தகுதியான சொற்களாலே சொல்லப்பட்டதாய் ஸர்வேச்வரனுக்கு வாய்த்ததான இத்திருவாய்மொழியாயிரமானது வேதங்களில் புருஷஸூக்தம்போலவுமு, தர்மசாஸ்த்ரங்களில் மநுஸ்ம்ருதிபோலவும், மஹாபாரத்தில் கீதைபோலவும், புராணங்களில் ஸ்ரீவிஷ்ணுபுரானம் போலவும் திவ்யப்ரபந்தங்களுள் ஸாரமாயிருக்குமென்றபடி. ஆகவே, தூய என்றது பகவத்விஷயமொன்று தவிர வேறு ஒரு விஷயமும் ஊடு கலசரமைபற்றிய பரிசுத்தியைப் புஷகலமாகவுடைய என்றபடி.

துவளின்றியேபத்தராவர் – இங்கெ ஈடு “துவளாவது குற்றம், அதாவது அவதாரந்தரங்களிற் போகாதே க்ருஷ்ண வ்ருத்தாந்தத்திலே கால்தாழ்வர்“ என்பதாம். தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கம் பெரிய கோயிலல்லது வேறொரு திருப்பதி யறியாமே யிருந்த்து போல க்ருஷ்ணாவதார மல்லது மற்றொன்ற்றியாத பரமைகாந்திகளாவர் என்றதாயிற்று.

 

English Translation

This decad of the thousand song by kurugur Satakopan on the feet of Kesava, Lord of the seven worlds, who lifted them and strode them, became them and not them, -those who can sing and dance to it will become blameless devotees.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain