(3491)

நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும் போர்கள் செய்து,

வாண னாயிரம் தோள்து ணித்ததும் உட்பட மற்றும்பல,

மாணி யாய்நிலம் கொண்ட மாயனென் அப்பன்றன் மாயங்களே,

காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென கலக்க முண்டே?

 

பதவுரை

நீள் நிலத்தொடுவான் வியப்ப

-

மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக

நிறைபெறும் போர்கள் செய்து

-

நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி

வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல

-

பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான

மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே

-

பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே

காணும் நெஞ்சு உடையேன் எனக்கு

-

ஸாக்ஷாத்கரிக்கவல்ல நெஞ்சுபடைத்த வெனக்கு

இனி என்ன கலக்கம் உண்டே

-

இனி ஒருவகையான கலக்கமுமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நீணலத்தொடு) இப்பாட்டில் வாணனாயிரந் தோள்துணித்த சரித்திரமொன்றே அநுபவிக்கப்படுகிறது. பலிசக்ரவர்த்தியின் ஸந்த்தியிற் பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள் ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்த்தாக கனாக்கண்டாள். அதைத் தன் உயிர்த்தோழியான சித்திரலேகை யென்பவளிடம்தெரிவித்தாள். ஆனால் அவன் இன்னானென்று அறிந்திலர். அத்தோழியானவள் உலகத்திலுள் ஸுந்தர புருஷர்கள் யாவரையும் அறிந்திருப்பதோடு ஒவ்வொரு உருவத்தையும் அப்படியே எழுதிக்காட்டவும் வல்லமை பெற்றிருந்ததனால் அங்ஙனம் பல வுருவங்களையும் எழுதிக்காட்டி இவனா? இவனா? என்று உஷையைக் கேட்டுவகையில்,! கடைசியாக அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருத்தனென்று நிஷ்கர்ஷிக்கப்பட்டது. பின்பு உஷை அவனைப் பெறுதற்கு உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினார் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து அந்தப்புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை யநுபவித்துவந்தாள். இச்செய்தியைக் காவலாளராலறிந்த அவளது தந்தையான பாணன் தன் அநுமதியின்றிக்கே இப்படி நடந்து விட்டதே என்கிற சீற்றத்தினால் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருந்தான். இப்படியிருக்கையில் த்வாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தார்கள். பின்பு நாரதமுனிவனால் நடந்த வரலாறு சொல்லப்பெற்று ஸ்ரீகிருஷ்ணபகவான்பெரிய திருவடியை நினைத்தருளினான். அவனும் உடனே வந்து நின்றான். கண்ணன் அக் கருடாழ்வானது தோளின்மேல் ஏறி கொண்டு பலராமன் முதலானாரோடுகூட பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும் போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல்காத்துக் கொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபிரானால் ஏவப்பெட்டதொ ஜ்வரதேவதை மூறு கால்களும் மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தையுண்டாக்க அதன் சக்தியினாலே அதனைத் துரத்தியாயிற்று. பின்பு சிவபிரானது அநுசரர்களாய் வாணனது கோட்டையைச் சூழ்ந்துக்கொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து பாணாஸுரனோடு போர்செய்யத் தொடங்கியாயிற்று. அப்போது அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரம்மணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்தமான் ஒன்றுஞ் செய்யாட்டாமல் கொட்டாவிவிட்டுக்ண்டு சோர்வடைந்திருந்தான். மாயிரஞ் சூரியர்க்குச் சமானமான தனது சக்ராயுதத்தை யெடுத்துப் பிரயோகித்து அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்த, அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன்பின் மீண்டு த்வாரகைக்கு எழுந்தருளலாயிற்று என்ற வரலாறு உணர்க.

 

English Translation

The Earth and sky were wonder-struck to witness the great war.  He then cut as under the thousand arms of the mighty Bana.  He came as a manikin and took the Earth, by walking three good steps.  My heart can see them all; now what can trouble me?

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain