(3489)

இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில் ஏறுகள் செற்றதுவும்,

உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும் உட்பட மற்றும்பல,

அகல்கொள் வையம் அளந்த மாயனென் அப்பன்றன் மாயங்களே,

பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்ப ரிப்பே?

 

பதவுரை

இகல் கொள் புள்ளை பிளந்ததும்

-

விரோதபுத்தியுடன் வந்த பகாசுரனை வாய்பிறந்து முடித்ததென்ன

இமில் ஏறுக்ள் செற்றதுவும்

-

பிசலையுடைய எருதுகளை (நப்பின்னைக்காகக்) கொன்றதென்ன

உயர் கொள் சோலைகுருத்து ஒசித்ததும்

-

உயர்ச்சியைக் கொண்ட சோலையிலுள்ள குருந்த மரத்தை முறித்ததென்ன

உட்பட மற்றும்

-

இவை முதலாக மற்றும் பலவான

அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே

-

பூமிப்பரப்பை யெல்லாம் அளந்துகொண்ட மாயனான எம்பெருமானுடைய அற்புதச் செயல்களையே

பகல் இரா பரவ பெற்றேன்

-

பகலும் இரவும் துதிக்கப்பெற்றேன்

எனக்கு என்ன மனம் பரிப்பு

-

இன எனக்கென்ன மனத்துயரமுளது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இகல்கொள்புள்ளை) கம்ஸனால ஏவப்பட்ட ஓர் அஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில் கண்ணன் அவனது வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக்கிழித்திட்டனன் என்ற வரலாறுகாண்க. இந்த வரலாற்றை யாதவாப்யுதய காவ்யத்தில் வருணிக்கின்ற வேதாந்தவாசிரியன் •••    ஸபக்ஷகைலாஸநிபஸ்ய கோபா, பகஸ்ப பக்ஷாந் அபிதோப்பந்து, வநே த்தந்யாநபி கோரவ்ருத்தீந க்ஷேப்தும் ப்ரவ்ருத்தா இவ கேதுமாலா * என்றார் அந்த பகாசுரன் வந்தது இறகு முளைத்த கைலாஸமலையே ஊர்ந்துவருவது போன்றிருந்ததாம், அங்கு எங்கும் கட்டிவைத்தார்களாம், இனி யாரேனும் கண்ணனுக்குத் தீங்கு செய்யவந்தால் அவர்களுக்கும் இதுவேகதி என்று காட்டுதற்காக என்கை.

இமிலேறுகள் செற்றது – வில்லை வளைத்தவர்களுக்கே ஸீதாபிராட்டியை விவாஹம்செய்து கொடுப்பது என்று சுல்கம் வைத்திருந்ததுபோல, யாவர்க்கும் அடங்காத ஏழு எருதுகளை வலியடக்கினவர்களுக்கே நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்வித்துக்கொடுப்பதென்று நிபந்தனை வைத்திருந்ததனால் கண்ணபிரான் அங்ஙனமே செய்து பின்னை தோள் புணர்ந்தானென்பது வரலாறு.

குருந்தொசித்தது – யமுனைக்கரையில் கண்ணன் மலர் கொய்தற்பொருட்டு விரும்பியேறுவதொரு பூத்த குருந்தமரமுண்டு, கம்ஸனால் ஏவப்பட்ட அசுரர்களில் ஒருவன் அந்த மரத்தில்வந்து பிரவேசித்து கண்ணன் தன்மீதுவந்து ஏறும்போது தான் முறிந்து வீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதி யிருந்தபோது  மாயவனான கண்ணபிரான் அம்மாத்தைக்கைகளாற் பிடித்துக் தன் வலிமை கொண்டு முறித்து அழித்தன்னென்பது வரலாறு.

கண்ணபிரானுடைய சரித்திரங்களை மாத்திரமே அநுபவிப்பதாகக் கொண்ட இத் திருவாய்மொழியில் இப்பாசுரத்தில் * அகல்கொள் வையமளந்தமாயன் * என்றும், மேலே எட்டாம் பாட்டில் * மாணியாய்நிலங்கொண்டமாயன் * என்றும் வேறு அவதார சரித்திரத்தையுங் கூறினது குறையன்று, “இகல்கொள்புள்ளைப்பிளந்தது“ “இமிலேறுகள்செற்றது“ “குருந்தொசித்தது“ என்றவைபோலே “அகல்கொள் வையமளந்ததும்“ என்று இதனையும் ஒரு சரித்திரமாகக்கூறி அநுபவித்தமை காட்டப்படவில்லையே எம்பெருமானுக்கு விசேஷணமொன்று இட்டதத்தனையே.

 

English Translation

Ripping the beak of the Baka-bird, killing the seven bulls, destroying the tall kurundu trees, -night and day I am blest to sing these and other wonders that my Lord performed, when he came and strode the wide Earth. I have no despair.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain