(3486)

நிகரில்மல்ல ரைச்செற்ற தும்நிரை மேய்த்ததும் நீணெடுங்கைச்,

சிகரமாகளி றட்டதும் இவை போல்வனவும் பிறவும்,

புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி, என்றும்

நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு என்இனி நோவதுவே.

 

பதவுரை

நிகர் இல் மல்லரை செற்றதும்

-

(மிடுக்கில்) ஒப்பில்லாத மல்லர்களை முடிந்த்தென்ன

நிரை மேய்த்ததம்

-

ப்சுக்களை மேய்த்ததென்ன

நீள் நெடு கை

-

உயர்ந்த நெடி துதிக்கையை யுடையதாய்

சிகரம் மா

-

மலைசிகரம்போன்று (பெரிதான

களிறு

-

(கஞ்சனது) யானையை

அட்டதும்

-

கொன்றொழித்ததென்ன (இவை போல்வனவும் பிறவும்)

புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை

-

மிகவும் ஜ்வலிக்கின்ற ஒளியுருவனான கண்ணபிரானுடைய செயல்களை

நினைந்து புலம்பி

-

நினைத்தும் வாய்விட்டுக் கதறியும்

என்றும் நுகர

-

நித்தியமும் அநுபவிக்கும் படியாக

வைகல் வைக பெற்றேன்

-

காலம் மிகவும் நீளும்படிபெற்றேன்,

இனி

-

இப்படியானபின்பு

எனக்கு என் நோவது

-

எனக்கு க்லேசப்படவேண்டுவதுண்டோ,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நிகரில்மல்லரை) கண்ணபிரான் மல்லர்களைச் செற்றது இரண்டு பிரகணங்களில் கம்ஸன் தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீ புத்திரன் திருவாய்ப்பாடியில் ஒளித்து வளர்தலயறிந்து கோவங்கொண்டு எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல நிச்சயித்து அசுரவர்க்கங்கள் பலவற்றையும் பூதனை முதலிய வேஷங்களுடன் திருவாய்ப்பாட்டிக்குச் செல்ல ஏவியும் வைத்து கண்ணனையும் பழுதுபட்டவனாக, பிறகு வில்விழா (தநுர்யாகம்) என்கிற வியாஜம் வைத்து பிரார்த்தனைக்கிணங்க ஸ்ரீ க்ருஷ்ண பலராமர்களிருவரும் புறப்பட்டு மதுரையிற் புகுந்து வீதிவாயில் வழியில் மதயானையை முடித்து உள்ளே கம்ஸ ஸபையிற் செல்லுகையில் அவர்களை எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணுரன் முஷ்டிகர் என்னும் மல்வாயில் வழியில் மதயானையைமுடித்து உள்ளே கம்ஸ ஸபையிற் செல்லுகையில் அவர்களை எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணுரன் முஷ்டிகர் என்னும் மல்லர்கள் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும் போர் செய்ய, அவர்களை மற்போரினாலேயே கொன்று வென்றிட்ட வரலாறு ஒன்று. (2) கண்ணபிரான் பாண்டவர்கட்குத் தூதனாய்த் தன்னிடம் வரப்போகிறா னென்பதையறிந்த துரியோதனன் எவ்வகையினாலேனும் க்ருஷ்ணனை முடித்துவிடுவதே கருமமன்று துணிந்து ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப் பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற் பிளப்புகளால் மேலே மூடி அதன்மேலே சிறந்த ரத்நாஸன மொன்றை அமைத்து அவ்வாஸனத்தின் மீது கண்ணபிரானை வீற்றிருக்கச் சொல்ல, கண்ணன் அங்ஙனமே அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில மல்லர்கள் எதிர்த்துவர, பெருமான் மிகப் பெரிதாக விச்வரூப மெடுத்து எதிர்த்து அந்த மல்லர்களை மடிவித்தானென்ற வரலாறு மற்றொன்று. ஸ்ரீகாஞ்சீபுரியில் “திருப்பாடகம்” என்று ப்ரஸித்தமான பாணடவதூதர் வந்நிதியில் இவ்விதிஹாஸத்துக்குத் தகுதியாக மிகப்பெரிய திருக்கோலங்கொண்டு எழுந்தருளியிருக்கின்றமை அறியத்தக்கது. (பாடகம் – பாடு அகம், பாடு – பெருமை, அதுதோன்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்க.

நீள்நெடுங்கைச் சிகரமாகளிறட்டது – கம்ஸனது அரண்மனைவாயிற் புகும்போது மல்லவதத்திற்கு முன்னே செய்த்து குவலயாபீடவதம். * வார்கடாவருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி ஊர்கொள் திண்பாகனுயிர்செகுத்து * என்ற பாசுரம் நோக்குக.

புகர்கொள் சோதிப்பிரான் – மல்லர்களை மடித்து மதயானையை முடித்தபின்பு வடிவிற்புகர் எழுந்தபடி. அப்போதைய அழகிய நிலைமை மதுரையிற் பெண்கள் அனுபவித்துப்பேசினார்கள் ••••   ஸக்ய பச்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம், கஜயுத்தக்ருதாயாஸ ஸ்வேதாம்புகணிகாசிதம். * என்று அவ்வூர்ப்பெண்கள் ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்ட வார்த்தை காணீர்.

என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் – இப்படிப்பட்ட சேஷ்டிதங்களை நாடோறும் புஜித்துக்கொண்டு காலம் கழியப்பெற்றேன், (அல்லது) அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப்பெற்றேன் என்னவுமாம்.

 

English Translation

The Lord killed the heavy wrestlers, and the mountain-like rut-elephant, I recall the stories of his grazing cows in the forest, and weep to hear the exploits of my effulgent gem.  My time is spent enjoyably, now what on Earth can hurt me?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain