(3485)

கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த தும்,கெண்டை யொண்கண்

வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல,

மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,

நேயத் தோடு கழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே?

 

பதவுரை

கேயம் தீம் குழல் ஊதிற்றும்

-

சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன.

நிரை மேய்த்ததும்

-

பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன

கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும்

-

கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும்

மற்றும் பல

-

மற்றும் பலவுமான

மாயம் கோலம் பிரான்தன் செய்கை

-

திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை

நினைத்து

-

சிந்த்னைசெய்து

மனம் குழைந்து

-

நெஞ்சு நீர்ப்பண்டமாக

கேயத்தோடு எனக்கு கழிந்த போது

-

அன்போடு எனக்குக் கழிகின்ற காலத்தின்

எவ்வுலகம் நிகர்

-

உபயவிபூதியும் ஒவ்வாது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கேயத்தீங்குழல்) கண்ணபிரானுடைய வேணுகானத்தின் சிறப்பு பெரியாழ்வார் திருமொழியில் * நாவலம் பெரியதீவினில்வாழும் * என்கிற திருமொழியிலே பத்துப் பாசுரங்களினால் பரக்கப் பேசப்பட்டது. அவற்றின் பொருளையெல்லாம் சுருக்கி பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவ உத்தர சதகத்தில் ஒரு ச்லோகத்தினால் அருளிச்செய்தார், ••••  இத்யாதி. அதில் ••••  த்வம் தேஷு அந்யதமாம்ப்பூவித பவத்வேணுக்வணோந்மாதநே * என்கிற ஈற்றடி பரமரஸம். வேணுகானத்தைக் கேட்டு விகாரப்பட்டவர்களில் கண்ணபிரான் தானும் ஒருவனானான் என்கிறது.

••••   என்கிற வடசொல் கேய மெனத் திரிந்தது. தீம் – இனிமை.

நிரைமேய்த்தும் – பரமபதத்திலே நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் ஓலக்கம் கொடுத்துக் கொண்டு பராத்பரனாக விளங்கும் பெருமான் அவ்விருப்பிலே விருப்பற்றவனாய், பூலோகத்திலே வந்து பிறக்கவேணுமென்றும் அதிலும் * அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் * என்கிறபடியே அறியாதர்க்குள்ளே அறிவுகேட்டுக்கு எல்லைநிலமான இடைச்சாதியிலே வந்து தோன்ற வேணுமென்றும் திருவுள்ளம்பற்றி வந்து சேர்ந்து சாதியின் மெய்ப்பாட்டுக்காகத் தானே மாடுகளையுங் கன்றுகளையும் மேய்த்தவிது என்ன நீர்மை! என்று உருகுகிறபடி. திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவை * என்கிறார் இவ்வாழ்வார் தாமே மேலே. இதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம், (1) திவத்திலும் என்பதை ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு பரமபதத்திலிருப்பைக் காட்டிலும் பசுக்கூட்டங்களை மேய்ப்பது தன்னையே உகக்கின்றாய், (2) ஏழாம் வேற்றுமையாகக் கொண்டு, பரமபதத்திலிருக்கச் செய்தேயும் பசுநிரை மேய்ப்பதையே உகக்கின்றாய், (அதாவது) அவதார ஸமாப்தியாகித் தன்னடிச் சோதிக் எழுந்தருளியான பின்பும் அங்கும் பசுக்களை மேய்க்கிற வாஸநையே அனுவர்த்தித்து “டீயோ! டீயோ!“ என்றே வாய்வெருவிக் கொண்டிருக்கிறபடி.

பின்னை தோள்கள் மணந்தது – கும்பனென்றும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்துகொள்ளக் கருதி, அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்துகொண்ட வரலாறு அறிக. * ஒருத்திமகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் ஒளித்துவளர்ந்த கண்ணபிரானுக்கு இரண்டு குலத்திலும் இரண்டு திவ்ய மஹிஷிகள் பிரதானர்களாக வாய்ந்தனர், இடைக்குலத்திற்கு நப்பின்னைப்பிராட்டியும், யதுகுலத்திற்கு ருக்மிணிப்பிராட்டியும். இவ்வர்த்தத்தைக் கூரத்தாழ்வான் ஸுந்தரபாஹுஸ்தவத்தில்  அழகாக அருளிச்செய்தபடி –•••• பாரீர். ஹேஸுந்தரைகதரஜந்மநி க்ருஷ்ணபாவே த்வே மாதரௌ ச பிதரௌ ச ருகே அபித் வே, ஏக்க்ஷணாதநுக்ருஹீதவத, பலம் தே நீலா குலேநஸத்ருசீ கில ருக்மிணீ ச.

மாயக்கோலப்பிரான – மாயா என்கிற வடசொல் மாயமெனத் திரிந்தது. மாயா – ஸங்கல்ப ஜ்ஞானம், ஆச்சரியம், க்ருத்ரிமம் எனப் பலபொருள்படும். கருமத்தாலன்றிக்கே தன்னுடைய ஸங்கல்பத்தாலே ஏற்றுக்கொண்ட திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய பெருமான் என்றபடி. அவனது திவ்ய சேஷ்டிதங்களைச் சிந்தனைசெய்து நெஞ்சு நீர்ப்பண்டமாகி பக்தி மயமாக எனக்குக் காலம் கழிவதுபோல மற்று ஆர்க்கேனுமுண்டோ? என்கிறார். விபூதியில் மாத்திரமன்று, அந்த விபூதியிலும் இல்லை என்கைக்காக “எவ்வுலகம் நிகரே“ என்கிறார். ஏன்? திருநாட்டிலுள்ளார்க்கு இடையறாத அநுபவமில்லையோ வென்னில், இல்லையென்பதில்லை, அங்குப் பரத்வகுணாநுபவம் செல்லுமே யல்லது நீர்மைக்கு நிலமன்றே.

 

English Translation

My Krishna went grazing his cows, playing sweet melodies on his flute; he locked himself in the embrace of the well-coiffured Nappinnai.  My heart melts when I recall these and many wonders of his.  My time is spent lovingly, now who in the world can match me?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain