(3426)

இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே!

அசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி!

திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை,

அசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.

 

பதவுரை

என்னை

-

நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை

இசைவித்து

-

அடிமைக்கு இசையும்படி செய்து

உன் தாள் இணை கீழ்

-

உனது உபயபாதங்களின் கீழே

இருந்தும் அம்மானே

-

தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே!

அசைவு இல் அமரர் தலைவர்

-

நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும்

தலைவா

-

முதல்வனே!

ஆதி பெரு மூர்த்தி

-

ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!

திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்

-

எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான

திரு குடந்தை

-

திக்குடந்தையிலே

அசைவு இல்

-

ஓய்வில்லாதபடி (அவதாரம்)

உலகம் பரவ

-

உலகமெல்லாம் துதிக்கும் படி

கிடந்தாய்

-

சயனித்தருள்பவனே!

காண வாராய்

-

நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இசைவித்தென்னை.) கண்ணாலே காணலாம்படி வரவேணு மென்கிறார். இதில் முதலடியில் ஸத்ஸம்ப்ரதாயாத்த்தஸாரம் பொதிந்து கிடக்கிறது. ஆசார்ய ஹ்ருதயத்தில் “மதியாலிசைந்தோ மென்னும் அநுமதிச்சைகள் இருத்துவ மென்னாதவென்னை யிசைவித்த வென்னிசைவினது” என்ற சூர்ணிகை இங்கே அநுஸந்தேயம். இதன் கருத்தாவது -ஆழ்வார்க்கு எம்பெருமான் திறத்திலே யுண்டான ஆபிமுக்க்யம் எம்பெருமானடைய க்ருஷியினாலேயே உண்டானதத்தனை. * வைத்தேன் மதியாலெனதுள்ளத்தகத்தே * என்று நமக்க அநுமதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே ஆழ்வார்; * யானுமென்னஞ்ச மிசைந்தொழிந்தோம்* என்று தமக்க இசைவும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே; அந்த அநுமதியும் இச்சையும் பகவத் விஷயீகாரத்தைக்குறித்து ஹேதுவானாலோ வென்னில்; ஆகாது. அவையும் எம்பெருமானுடைய க்ருஷிபலமென்னுமிடம் *யானொட்டியென்னுளிருத்துவ மென்றிலன்* இசைவித்தென்னையுன் தாளிணைக்கீழிருத்து மம்மானே * என்னிசைசினை  * என்பது முதலான தம்முடைய அருளிச் செயல்களினாலேயே விளங்க மென்றபடி.

இசைவித்து என்னை என்கையாலே நெடுநாள் திருவடிஸேவைக்கு இசையாதிருந்த தம்மை எம்பெருமான்தானே வரந்தி யிசைவித்தமை ஸ்பஷ்டமாகவிளங்கும். திசைவில்வீசும் செழுமாமணிகள் என்று திருமழிசை யாழ்வார்போல் வரரைச் சொல்லுகிறதென்று ஸம்ப்ரதாயம். திசைகள்தோறும் பரந்த புகழையுடைய மஹாஜ்ஞாதாக்கள் சேருமிடமான திருக்குடந்தை யென்கை. இங்கே ஈட்டுஸ்ரீஸூக்தி :- ஆராவமுதாழ்வார் திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்தனங்கள் சேரும் திருக்குடந்தை யென்று நிர்வக்ஷிப்பர்கள்” என்று.

 

English Translation

O Lord sweetly binding me to your feet! O Kind of the motionless gods! O Lord reclining in kudandai armid sparkling gems! O Great first cause! O Lord praised by all the worlds! Pray come, that I may see you.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain