(3425)

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்,

வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!

தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது,

இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.

 

பதவுரை

வளைவாய் நேமிபடையாய்

-

வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே!

குடந்தை கிடந்த

-

திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற

மா மாயா

-

மஹாச்சர்யரூபனே!

துன்பம் களைவாய்

-

எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி

களைமா தொழிவாய்

-

களையாவிட்டாலும் சரி

களைகண் மற்று இலேன்

-

வேறு சரணமுடையேனல்லேன்;

உடலும் தளரா

-

உடல் தளர்ந்து

எனது ஆவி

-

என் உயிரானது

சரிந்து பொம் போது

-

நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது

இளையாது

-

மெலியாமல்

உன் தான்

-

உன் திருவடிகளையே

ஒருங்க பிடிந்து போது

-

ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி

நீயே இசை

-

நீயே திருவுள்ளம்பற்ற வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (களைவாய் துன்பம்.) ப்ரபந்நர்கட்கு ஆகிஞ்சல்பம், அநந்யகதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கவேணும். உபாயாந்தரங்களில் அந்வயலேசமும் அற்றிருக்கை ஆகிஞ்சந்ய மெனப்படும். எம்பெருமான்பக்கலில் முகம் பெறாதொழியினும் பிறர்மனைதேடி யோடப்பாராதே. “ரக்ஷித்தபோதோடு ரக்ஷியாதபோதோடு வசியற இவ்விடமொழிய வேறுயுகமல்லை” என்கிற திண்ணிய அத்யவஸாயந்து டனிருக்கை அநந்யகதித்வமெனப்படும். அது இப்பாட்டின் முதலடியில் தெளிவாகிறது. எனக்கு உன்னுடைய அனுபவம் கிடையாமற்போனாலும் உன் திருவடியே தஞ்சமென்று பிறந்த விச்வாஸம் பார்த்தருளவேணுமென்கிறார். துன்பம் களைவா, துன்பம் களையாதொழிவாய், களைகண்மற்றிலேன் = நீ சரமச்லோகத்தில் * ஸர்வபாபோப்யோ மோக்ஷயிஷ்யாமி * என்று ப்ரதிஜ்ஜை பண்ணினபடி செய்தாலும் செய், தவிர்த்தாலும் தவிர் ; உன்காரியத்தில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் நிஷ்டை குலையமாட்டேன். வளைவாய் நேமிப்படையாய் - *நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் * என்றந்றே எம் போல்வாருடைய உறுதியிருப்பது. உன் கையிலே ஆயுதமிருந்தும் துன்பம் களையாதிருத்தல் தகுதியோ? குடந்தைகிடந்த மாமாயா திருக்குடந்தையிலேவந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண்வளர்ந்தருளுகிறது எதற்காக?

தளராவுடலம் = ‘உடலம் தளரா’ என்று அந்வயிப்பது. தளரா வென்பது செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்தகாலவினையெச்சம்; தளர்ந்து என்றபடி. எனது சரீரமானது கட்டுக்குலைந்து என் பிரானன் முடிந்து போமளவு இதுவாயிற்று. (இளையாது இத்யாதி) அபேக்ஷிதம் பெறுகிறேன்,  இல்லை, அது தனிப் பட்ட விஷயம். நான் உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணியருளவேணும். அநுபவம் பெறாமையாலே அதுக்கடியான உபாயாத்யவஸாயமும் குலைகிறதோவென்று அஞ்சி குலையாதபடி பார்த்தருள வேணுமென்றாராயிற்று ஒருங்க - நிரந்தரமாக என்றபடி.

 

English Translation

O Great wonder-Lord reclining in Kudandai armed with a sharp discus, whether you end my despair or not, you are my sole refuge, When my body languishers and this life comes to an end, grant that I may hold on to your feet relentlessly.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain