(3424)

அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே,

எரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே,

பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே,

தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.

 

பதவுரை

அரி ஏறே

-

சிறந்த சிங்கமே!

ஏன்

-

நான் அனுபவித்தற்குரிய

அம் பொன் சுடரே

-

அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!

செம் கண் கரு முகிலே

-

சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!

எரி ஏய் பவளம் குன்றே

-

நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!

நால் தோள் எந்தாய்

-

சதுர்ப்புஜ ஸ்வாமியே!

உனது அருகே

-

உனது கிருபையினாலர்

என்னை பீரியா அடிமை கொண்டாய்

-

என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே!

குடந்தை திருமாலே

-

திருக்குடந்தையில் வாழும் திருமாலே!

இனி தரியேன்

-

இனிமேல் தரித்திருக்ககில்லேன்!

உன் சரணம் தந்து

-

உனது திருவடிகளைக் கொடுத்தருளி

என் ஈன்மம்களையாய்

-

எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அரியேறே.) பிரானே! உன்னுடைய வைலக்ஷண்யத்தை நீயே காட்டித்தந்து அடிமையிலே என்னை ஊன்றவைத்தாயானபின்பு உன் திருவடிகளைத்தந்து தீரவேணுமன்றோ; தந்து பின்னை ஸம்ஸாரத்தைக் களைந்தொழியாய் என்கிறார். மேனாணிப்புத்தோற்ற விருக்குமிருப்பை அரியேறே! என்ற விளி காட்டும். அந்த மேனாணிப்புக்குத் தகுதியான வடிவுபடைத்தவ னென்கிறது அம்பொற்சுடரே! என்பது. விலக்ஷயமான பொன்போலே ஸ்ப்ருக்ஷணீணமான ஒளியையுடையவனே! என்றபடி. வடிவின் புகரைக்காட்டி என்னை யீடுபடுத்திக்கொண்டவனே! என்றவாறு. செங்கட்கருமுகிலே! - வாத்ஸல்யமாகிற அம்ருதத்தை வர்க்ஷிக்கிற திருக்கண்களையுடையவனே! என்றபடி.

எரியேபவளக்குன்றே! = எரியென்று கேட்டை நக்ஷத்திரத்திற்கு வாசகமாய் நக்ஷத்ரஸாமாந்யத்தைச் சொல்லி நிற்கும். நக்ஷத்ரமண்டலத்ளைவும் ஓங்கியிருக்கிற பவளக்குன்றபோலே (பவழமயமான மலைபோலே) விலக்ஷணமான வடிவு படைத்தவனே! உகவாதார்க்கு அபிபவிக்க வொண்ணாமையும் உகந்தார்க்குப் பரமபோய்னாயிருக்கையும் இத்தாவல் நினைக்கிறது. நால்தோளெந்தாய்! = கல்பகதரு பணைத்தாற்போலேயிருக்கிற திருத்தோள்களைக்காட்டி என்னை அநந்யார்ஹ சேஷப்படுத்திக் கொண்டவனே! என்கை. எம்பெருமானுடைய திருத்தோள்கள் நம்மாழ்வாருடைய திருவாக்கில் நுழைந்து  புறப்பட்டவாறே விலக்ஷணமான வொருபெருமைபெறும். ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில்.

“அருமறைதுணிந்த பொருள் முடிவையின் சொலமுதொழுகுகின்ற தமிழினில் விளம்பியருளிய சடகோபர் சொற்பெற்றுயர்ந்தன - அழகிய மணவாளர் கொற்றப்புயங்களே” என்று பணித்ததுகாண்க. உனதருகே பிரியாவடிமை யென்னைக் கொண்டாய் = உன்னுடைய க்ருபையாலே மாத்திரம் என்னை அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக்கொண்டவனே! குடந்தைத்திருமாலே! - என்னை மாத்திர மன்றிக்கே பிராட்டியாரோடுகூட வாழ்பவனே! இனித்தரியேன் = இந்தச் செர்த்தியழகை நான் காணப்பெற்ற பின்பு இனி ஆறியிருக்க விரகுண்டோ? மாதா பிராக்காதள் அருகேயிருக்க, அவர்கள் ஸ்ரீமான்களுமாய் உதாரமாணிருக்க, ப்ரஜை பசித்துக் தரித்திருக்க முடியுமோ? உன்சரணம்தந்து என்சன்மம் களையாய் - ப்ரஜைகளின் வாயிலே முøலையைக் கொடுத்து சிகிச்ஸை பண்ணுமாபோலே முன்னம் திருவடிகளைத் தந்து பின்னை ஜன்மஸம்பந்தத்தை யறுன்னசேணும் என்கிறார் போலும்.

 

English Translation

O King-of-lions, golden radiance, red-eyed cloud-hued Lord! O Dazzling coral-mountain, my Lord of four arms, Lord in Kudandai! Through your grace, you made me your bonded sert. Now give me your protection and rid me of my birth. No more I can bear this.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain