(3423)

சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும்

ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்

? வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!

யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!

 

பதவுரை

வாழ் தொல் புகழார் குடந்தை

-

விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே

கிடந்தாய்

-

சயனித்தருள்பவனே!

வானோர் கோமானே

-

நித்யஸூரிகாதனே!

யாழின் இசையே

-

வீணாகானம்போலே பரம் போக்யனானவனே!

அமுதே

-

அமிருதம் போன்றவனே!

அறிவின் பயனே

-

அறிவுக்கும் பலனானவனே!

அரி ஏறே

-

சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே!

உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே

-

நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும்

தூரா குழி தூர்த்து

-

ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு

எனை நாள்

-

எத்தனை காலம்

அகன்று இருப்பன்

-

உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்!

எளன் தொல்லை வினையை அறுத்து

-

(இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து

சூழ் கண்டாய்

-

என்னை ஸ்வீகரித்தருள வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - (சூழ்கண்டாய்.) பிரானே! உன்னுடைய போக்யதையிலே அகப்பட்டிருந்துள்ள வெனக்கு ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்விரகு பார்த்தருள வேணும் என்கிறார்.

நீ எழுந்தருளியிருக்கு மிடமான திருக்குடந்தையானது சிறந்த கீர்த்தியையுடையவர்களான மஹான்கள் வர்த்திக்கும்படியானது; அவர்களுடைய கீர்த்தியாதென்னில்; உன்னைப் பெறுதற்கு விரோதியான கரும் பந்தங்களெல்லாம் கழியப்பெற்றவர்கள் உன்னுங் கீர்த்தியாம்; அத்தகைய கீர்த்தி வாய்ந்தவர்கள் வாழுமிடத்தே நீயிருந்துவைத்து எனக்கு அந்தக் கீர்த்தியை விளைக்காதொழியத்தகுமோ? (வானோர்கோமானே!) நித்யர்களையும் முக்தர்களையும் போலே எம்மை அடிமைகொள்ள வேண்டாவோ? (யாழினிசையே அமுதே) உன்னடைய போக்யதையை நான் அறியப் பெறாதிருந்தேனாகில் இங்ஙனே கிடந்து துடிப்போனோ! யாழின் இசைதானே வடிவொடுத்தாற்போலேயன்றோ உன்னுடைய இனிமைதான் இருப்பது; அமுதமும் எனக்க நீயேயன்றோ. (அறிவின் பயனே) * ந போதாந் அபரம் ஸுகம்* என்கிறபடியே அறிவுக்குப்பலன் ஸுஸுகமாகையாலே என்னுடைய ஸுகமே வடிவெடுத்திருப்பவனே! என்றபடி. (அரியேறே) அரி - சிங்கம்; ஏறு ரிஷபம். இவ்விரண்டும் சிறப்புக்க வாசகங்கள்; ‘புருஷஸிம்ஹம்’ ‘புருஷர்ஷபம்’ என்பர்களன்ளோ? மிகச்சிறந்தவனே! என்றபடி.

 

English Translation

O Lord of celestials reclining in kudandai surrounded by men of evertasting glory! O Music of the Yal-harp! Ambrosial delight, fruit-of-knowledge ! O King-of-lions1 Rid me of my Karmas and find a way, you must, I long to reach you, how long must I remain here filling a bottomless pit?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain