(3422)

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்,

தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்,

செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!

தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

 

பதவுரை

செழு ஒண் பழனம்

-

செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய

குடந்தை கிடந்தாய்

-

திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!

செம் தாமரை கண்ணா

-

செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே!

அழுவன் தொழுவன்

-

அழுவேன் தொழுவேன்;

ஆடி காண் பன்

-

கடனம் செய்து பார்ப்பேன்;

பாடி அலற்றுவன்

-

வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்;

தழு வல்வினையால்

-

என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே

பக்கம் நோக்கி

-

(எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே)

காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை

-

வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்;

உன தாள் சேரும் வகையே

-

உன் திருவடியடையமாறு

சூழ் கண்டாய்

-

உபாயசிந்தை பண்ணவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அழுவன் தொழுவன்.) பிராவே! உன் கண்ணழகிலே யீடுபட்டுப் பலவகை ப்ரவ்ருத்திகளும் பண்ணின விடத்திலும் பயன் பெற்றிலேன்; உன் திருவடிகளைச் சேரும்படி நீயே பார்த்தருள வேணுமென்கிறார்.

அழுவன் தொழுவன் - சிறுவர் அழுகையினாலேயே எதையும் ஸாதிப்பர்கள்; அறிவுடையார் தொழுகையினாலேயே எதையும் ஸாதிப்பர்கள்; இருவர் படியையும் நான் ஏறிட்டுக்கொண்டு அழுவதும்  தொழுவதும் செய்தாயிற்று. ஆடிக்காண்பன் - “இத்தனை சோறிடுகிறோம்; ஆடுகிறாயா?” என்றால், பெரும் பசியாளர் ஆடுவதுண்டே; அப்படி ஆடியும் பார்ப்பேன். பாடியலற்றுவன் = சித்தப்பரமம். கொண்டவன் பாடுவதும் அலற்றுவதும் செய்யுமாபோலே அவையும் செய்யா நின்றேன்.

தழுவல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் = இங்கே வல்வினையென்று காதலைச் சொல்லுகிறது; வல்வினையின் பயனாக வுண்டான காதல் என்றபடி. அபேக்ஷித்தபடி ஸித்தயாமையாலே காதலை வல்வினையாகக் கருதினாராயிற்று. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற ப்ரபல பாபத்தாலே, நீ வருவதாக நினைத்துப் பக்கங்களிலே பார்த்து, வந்து காட்கிரதரக் காணாமையாலே லஜ்ஜையோடே கவிழ்தலையிட்டிருப்பே. தலைகவிழ்ந்து நிற்பேன்.

தமக்கு ஆகவேண்டிய காரியத்தைப் பின்னடிகளால் விண்ணபஞ்செய்கிறார். (செழுவொண்பழன மித்யாதி.) செழுமைதங்கி அழகிய நீர் நிலைகளையுடைய திருக்குடந்தையிலே திருக்கண் வளர்ந்தருவ்பவனே! எனக்கு ஜீவன்மான திருக்கண்களையுடைய வனே! புறம்பு! புகலற்று உன்னாலல்லது செல்லாதபடி க்ருபண்னான நான் உன் திருவடிகளைக் கிட்டுவதொரு விரகு நீயே ஆலோசித்தருள வேணுமென்றராயிற்று.

 

English Translation

I weep and pray, I dance and sing, and praise you forever, I look away and hang my head in shame for my deeds.  O Lotus-eyes Lord reclining in fertile kudandai fields, pray show this repentent self the way to your lotus feet.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain