(3276)

மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,

செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை

மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,

வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே.

 

பதவுரை

மைய கண்ணான்

-

மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய்

மலர்மேல் உறைவாள்

-

தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி

உறை

-

நித்யவாஸம் பண்ணப்பெற்ற

மார்பினன்

-

மார்பையுடையனாய்

செய்ய கோலம் தட கண்ணன்

-

சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய்

விண்ணோர் பெருமான் தன்னை

-

நித்யஸூரி நாதனை எம் பெருமானை

மொய்ய சொல்லால்

-

செறிந்த சொற்களாலே சமைந்ததாய்

இசை

-

இசையை யுடைத்தான

மாலைகள்

-

மாலைகளாலே

வியல் ஞாலத்து

-

அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே

இசை

-

இசையை யுடைத்தான

மாலைகள்

-

மாலைகளாலே

வியல் ஞாலத்து

-

அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே

வெய்ய நோய்கள் முழுதும்

-

கொடிய க்லேசங்கள் அனைத்தும்

வீய

-

நசிக்கும்படியாக

ஏத்தி

-

துதித்து

உள்ள பெற்றேன்

-

என்னெஞ்சாலே அநுபவிக்கப் பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தையுடையவனை   ஸகலபாதங்களும் தீரும்படி புகழப்பெற்றனென்கிறார். மையகண்ணாள்-கறுத்த கண்ணையுழடையவள் என்றபடி. ஸ்த்ரீகளுக்கு இது லக்ஷணம். வடநூலார் அஸிதேக்ஷணா என்று பிரயோகிப்பர்கள். பிராட்டி எம்பெருமானுடைய கரிய திருமேனியை இடைவிடாது கண்டுகொண்டிருப்பதனால் கருமை மிக்க கண்ணையுடையளாயினன்போலும் என்று ரஸோக்தியாகவும் நம் முதலிகள் அருளிச்செய்வர்கள்.  “பெரிய பிராட்டியர் திருக்கண்களாலே ஒருகால் கடாகூஷித்தால் ஒருபாட்டம் மழை பொழிந்தாப்போலே ஸர்வேச்ரன் திருமேனி குளிரும்படியாயிற்றிருப்பது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் நோக்குக.

மலர்மேலுறைவாளுறை மார்பினன்=பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வாழப்பெற்ற திருமார்பை யுடையவன். ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலாபுரியை நினையாதாப்போலே ஸ்ரீமஹாலெக்ஷ்மியும் இவன் மார்பில் சுவடு அறிந்தபின்பு தாமரைப் பூவும் நினைக்கமாட்டாளாம்.

செய்யகோலத் தடங்கண்ணன்=பிராட்டியானவள் எம்பெருமானுடைய கரியகோலந் திருவுருவைக் கண்டுகொண்டேயிருந்த கருங் கண்ணியானதுபோலே, எம்பெருமானும் அப்பிராட்டியினுடைய செய்ய திருமேனியையே கடாகூஷித்துக்கொண்டிருக்கையாலே அத்திருமேனியிற் சிவப்பு ஊறி இவன் செய்யகோலத்தடங்கண்ணனாயிருக்கும்.  இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டிலெறிந்த நிலாவாகாமே அநுபவிக்கைக்கு ஒரு நாடாகவுண்டு என்கிறது விண்ணோர்பெருமான் தன்னை என்று.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைத் தொடையழகு பொருந்திய சொல்மாலைகளைக் கொண்டு துதிக்கவே, அநுபவித்தே அறவேண்டும்படியான கருமபந்தங்கடங்கலும் தொலைந்தொழிந்தன வென்கிறார் பின்னடிகளில். இன்னருடைய கருமபந்தங்கள் என்று பிரித்துச்சொல்லாமையாலே, உலகத்திலேயே கருமபந்தங்கள் இல்லையாம்படி செய்துவிட்டமை தோன்றுகின்றது. நம்பிள்ளையீடு:-“பனை நிழல்போலே என்னையொருவனையும் நோக்கிக் கொள்ளுகையன்றிக்கே* ஊரும்நாடு முலகமும் தன்னைப்போலேயாம்படி நானிருந்த விபூதியிலுண்டான கருமங்களுடைய நசித்ததென்கை.

 

English Translation

He bears on his chest the dark-eyes lotus-dame Lakshmi. He is the Lord of the celestials, he has beautiful large red eyes.  I have the fortune of singing his praise with soft articulated words, thereby destroying the strange world's deathly miseries

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain