nalaeram_logo.jpg
(205)

கொண்டல்வண் ணாஇங்கே போத ராயே கோயிற்பிள் ளாய்இங்கே போத ராயே

தெண்திரை சூழ்திருப் பேர்க்கி டந்த திருநார ணாஇங்கே போத ராயே

உண்டுவந் தேன்அம்ம னென்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்

கண்டெதி ரேசென் றெடுத்துக் கொள்ளக் கண்ணபி ரான்கற்ற கல்வி தானே.

பதவுரை

கொண்டல்

-

காளமேகம் போன்ற

வண்ணா

-

வடிவையுடையவனே!

இங்கே போதராய்

-

இங்கே வாராய்;

கோயில்

-

திருவரங்கத்தில் வஸிக்குமவனான

பிள்ளாய்

-

பிள்ளையே!

இங்கே போதராய் ;

தென்திரை சூழ்

-

தெளிவான அலையையுடைய ஜலத்தால் சூழப்பட்ட

திருப்பேர்

-

திருப்பேர் நகரிலே

கிடந்த

-

பள்ளிகொண்டிராநின்ற

திருநாரணா

-

ஸ்ரீமந்நாராயணனே!

இங்கே போதராய்

-

இங்கே வாராய்;

(இப்படி அம்ம முண்கைக்காகப் புகழ்ந்தழைத்த யசோதையினருகிற் கண்ணபிரான் வந்து)

அம்மம்

-

‘உணவை

உண்டு வந்தேன்

-

(நான்) உண்டுவந்தேன்’

என்று சொல்லி

-

என்று சொல்லி

ஓடி

-

ஓடிவந்து

அகம்புக

-

அகத்தினுள்ளே புகும்

ஆய்ச்சி தானும்

-

தாயான யசோதையும்

கண்டு

-

(கண்ணன் வந்த வரவையும் இவன் முகமலர்ச்சியையும்) கண்டு (மகிழ்ந்து)

எதிரே சென்று

-

எதிர்கொண்டு போய்

எடுத்துக் கொள்ள

-

(அவனைத் தன் இடுப்பில்) எடுத்துக் கொள்ளும்படி

கண்ணபிரான்

-

(அந்த) ஸ்ரீகிருஷ்ணன்

கற்ற

-

(தானாகவே) கற்றுக்கொண்ட

கல்வி தானே

-

கல்வியின் பெருமையிருந்தவாறு என்னே!

(என்று ஆழ்வார் இனியராகிறார்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “வருகவென்றுன் மகன்றன்னைக் கூவாய்” என்று சில ஆய்ச்சிகள் முறையிட்டவாறே யசோதைப்பிராட்டி கண்ணபிரானைப் பலபடியாகப் புகழ்ந்து ‘கண்ணா! முலையுண்ணவா’ என்றழைக்க, அவன் தன் மகிழ்ச்சி தோற்ற “யான் அம்மமுண்டு வந்தேன்காண்! “ என்று சொல்லி ஓடிவந்து அகத்தினுள்ளே புகுர, அவ்யசோதை அவன் வந்த அழகையும் முகமலர்த்தியையுங் கண்டு மகிழ்ந்து அக்கண்ணபிரானை எதிர்கொண்டு சென்று அவனைத்தன் இடுப்பிலேற்றி அணைத்துக் கொண்டவாற்றை ஆழ்வார் அநுஸந்தித்து ‘இவ்வகையான பரிமாற்றத்தைப் பெறும்படி கண்ணன் கற்ற கல்வியுமொன்றே! என்று வியக்கின்றனர்.  அன்றிக்கே, முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நன்கு பொருந்துமாறு தாயான யசோதைதானே வியக்கின்றாளென்று உரைத்தலும் உரித்தென்க;  அப்போது “ஆய்ச்சிதானுங் கண்டெதிரே சென்றெடுத்துக்கொள்ள” என்றது தன் செயலைப் பிறர் சொல்லுமாபோலே தானே சொன்னபடியெனக் கொள்க.  கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான் மறந்துவிட்டு அவனை யெதிர் சென்றெடுத்துக் கொள்ளும்படி அவன் பண்ணின விசித்திரத்தில் ஈடுபட்டு ‘இப்பருவத்திலே  இவள் இவ்வளவு விரகனானதே!’ என்று தன்னில்தான் புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாளென்க.  கோயில் -இத்திருநாமம் திருவரங்கத்தின் மேல் வழங்குவது ஸம்ப்ரதாயம்.  திருப்பேர் - இது சோழநாட்டுத் திருப்பதிகள்  நாற்பதில் ஒன்று.  நன்னூலில் “ஒருபொருள்மேற்பல பெயர்வரினிறுதி, ஒருவினை கொடுப்ப தனியுமொரோ வழி” என்றபடி இப்பாட்டில் ‘கொண்டல்வண்ணன்’ ‘கோயிற்பிள்ளை’ ‘திருநாரணன்’ என்பன கண்ணனென்னும் ஒரு பொருளேயென்பது தெளிய நின்றதனால், பெயர்தோறும் ‘போதராய்’ என ஒருவினை கொடுக்கப்பட்டது.

English Translation

“O Cloud hued Lord! Come here! O Divine Child! Come here! O Tirunarayana reclining in Tirupper surrounded by pure flowing water, come here!” He runs into the house saying he has already sucked; Dame Yasoda intercepts him and picks him up thinking “so, these too are part of the tricks he has learnt!”

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain