(3128)

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,

மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,

மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,

மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே?

 

பதவுரை

மாசு! உணா

-

அவத்யம் சிறுதுமில்லாமல்

சுடர்

-

சோதிமயமான

உடம்பு ஆய்

-

திருமேனியை யுடையனாய்

மலராது குவியாது

-

ஸங்கோச விகாஸங்களற்று

மாசு உணா

-

(ஸம்சயம் விபரீதம் முதலான) அவத்யமில்லாத

ஞானம் ஆய்

-

ஞானத்தையுடையையாய்

முழுதும் ஆய்

-

ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்

முழுது இயன்றாய்

-

அவையெல்லாம் உன் பக்கலிலே வர்த்திருக்கும்படி அவற்றுக்கு ஆச்ரயமானவனே!

மாசு உணாவான் கோலத்து அமரர்கோன்

-

குற்றமற்ற அம்ராக்ருதமான ஜ்ஞரகாதி பூஷணாங்களையுடையனாய் தேவர்களுக்குக் கோமானாகிய பிரமன்

வழிபட்டால்

-

(உன்னைத்) தோத்திரம் பண்ணினால்

மாசு உணா உனபாதம் மலர் சோதி

-

குற்றமற்ற உனது பாதாரவிந்தத்தின் தேஜஸ்ஸானது

மழுங்காதே

-

குறையுற்றதாகாதோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கீழ்ப்பாட்டில் சொல்லப்படாத அர்த்தம் இப்பாட்டில் என்ன சொல்லப்படுகிறதென்று விமர்சிக்கவேணும். அரன் முதலான அமரர்கள் ஏத்தினாலும் அவத்யம் என்றது கீழ்ப்பாட்டில்; அமரர்கோன் ஏத்துவம் அவத்யம் என்கிறது இப்பாட்டில், அமரர்கோனென்று இந்திரனுக்குப் பெயராகப் பலரும் நினைக்கக் கூடும். சிவபிரானைச் சொன்னபிறகு அவனிலும் கீழ்ப்பட்டவனான இந்திரனை யெடுத்துரைக்க ப்ரஸக்தி யில்லாமையாலே இந்திரனென்கிற பொருள் ஏலாது. அமரர்களனைவர்க்கும் நான்முகன் கோனாதலால் அந்த நான்முகனை இங்கு விவக்ஷிப்பதாக நிர்வஹிப்பாருண்டு. கீழ்ப்பாட்டில் “அரன்முதலா” என்றிருப்பதனாலே நான்முகனும் அவ்விடத்திலேயே ஸங்கரஹிக்கப்பட்டவனாகக் கூடுமென்று திருவுள்ளம் பற்றிய பட்டர் இங்கு அமரர்கோன் என்பதற்கு விலக்ஷணனாய் உத்ப்ரேக்ஷாஸித்தனான ஒருபிரமனைப் பொருளாகப் பணிப்பராம். ப்ரஸித்தனான பிரமன், ப்ரஹ்ர பாவகைகர்ம பாவகை என்ற இரண்டு பாவகைகளையுடைனாயிருப்பன்; இப்படியல்லாமல் ப்ரஹ்ம பாவநை யொன்றையேயுடையனான வொரு பிரமன் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; அவன் ஏத்தினாலும் அவத்யமேயாகும் என்கிறார். இப்பாட்டால்- என்பது பட்டருடைய திருவுள்ளம்.

(மாசூணாச்சுடருடம்பாய்) எம்பெருமானுடைய திவ்யமங்களவிக்ரஹம் எப்போதும் எவ்விதத்திலும் மாசு ஏறப்பெறுவதில்லை யென்க. ஸ்ரீராமக்ருஷ்ணாதி அவதாரங்களில் பரிக்ரஹிக்கப்பட்ட திருமேனிகளில் மாசு ஏறினதுபோல் தோற்றினாலும் அது அபிநயமாத்திரமேயென்ப: மநுஷ்ய ஸஜாதீயமாகக்கொண்ட  திருமேனியாகையாலே மநுஷ்ய சரீர தர்மமான மாசு ஏறப்பெறுவது குற்றமன்று. அப்படியே அர்ச்சாவதாரங்களில் பரிக்ரஹிக்கப்படுகிற திருமேனிகளில் திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப் பெறாத காலங்களில் தென்படுகின்ற மாசும் ஆக்ஷேபிக்கவுரியதன்று.

“மலராது குவியாது” என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி:-

“அரும்பினையலரை என்னும்படியாயிருக்கும்; (யுவாகுமாரா) என்கிறபடியே ஏக காலத்திலே இரண்டவஸ்தையும் சொல்லாயிருக்கை” என்றுள்ளது. இத்தால்,யௌவநமும் கௌமாரமும் எம்பெருமானிடத்தில் குடிகொண்டிருப்பதாகக் கூறினமை விளங்கும். நம்பிள்ளை உதாஹரித்த பெரிய திருமொழிப் பாசுரத்தில் அரும்பு என்றது கௌமார நிலைமையைக் கூறினபடி; அலர் என்றது யௌவன நிலையைக் கூறினபடி என்றும் கூறுவர். இங்கு உதாஹரிக்கப்பட்ட யுவாகுமார என்ற பிரமாணம் ருக்வேதத்தில் (அஷ்ட 2-8-25) அத்யயநம் பண்ணப்பட்டு வரும் வாக்கியம். வைதிக பதபாடத்தில் “யுவ அகுமாரா” என்று பதவிபாகமுள்ளது. தேசிகன் பரமபத ஸோபானத்தில் ஒன்பதாவது பர்வதத்தின் தொடக்கத்தில் “அகுமாரயுவாவாய்” என்றும், பாதுகாஸஹஸ்ரத்தில் (1) அகுமாரயூநா என்றும் (இங்ஙனமே யாதவாப்யுதயாதிகளிலும்) அருளிச்செய்யக் காண்கிறோம். வைதிக பதபாடம் பிரபலமாகவுள்ளது. இவற்றை யெல்லாம்மடியொற்றி யுவா அகுமரா: என்றே கொள்ளத்தகும். நம்பிள்ளை திருவுள்ளமும் இதனில் வேறுபட்டதன்று. இங்ஙனே பதவிபாகமாயின் ‘கௌமாரமின்றியே யௌவனமாத்திரமே யுள்ளவன்’ என்று பொருளாகுமே; நம்பிள்ளை திருவுள்ளம் அப்படியில்லையே என்று சங்கிக்கவேண்டா; அகுமார: என்பதற்கு ஈஷத்குமாரா (ஸ்வல்பம் கௌமாரமுள்ளவன்) என்று பொருள்: (“அநுதரா கத்யா” என்பதுபோல.) குமார பருவம் கழியத்தக்கதாய் யௌவன பருவம் வந்து குடிபுகத்தக்கதான நடுப்பருவத்தைச் சொன்னவாறு. இனி, (*யுவாகுமார**) என்றெடுத்த பிரமாணத்தில் யுவா குமார: என்றே பதவிபாகம் விவக்ஷிதமென்னில், அந்தப் பிரமாணம் ருக்வேதத்திலுள்ளதன்றியே வேறிடத்ததாயிருத்தல் வேண்டும். இவ்விஷயத்தில் ப்ராமாணிக ப்ராஜ்ஞர்கள் பரிசீலனை செலுத்துக.

 

English Translation

O Constant Lord with a frame of pure radiance!  O Lord of perfect knowledge, O whole Being ! Even if the king of celestials were to sing your praise, the radiance of your lotus feet will never diminish.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain