(3074)

கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்

நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,

எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,

பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.

 

பதவுரை

தண் அம்துழாய் கண்ணிமுடி

-

குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும்

கமலம் தடம் பெரு கண்ணனை

-

தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய

புகழ் நண்ணி

-

திருக்குணங்களை அநுபவித்து

தென் குருகூர்

-

சடகோபன் மாறன் சொன்ன

எண்ணில் சோர்வு இல்

-

அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத

அந்தாதி

-

அந்தாதித்தொடையான

ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து

-

ஆயிரத்தனுள்ளே இப்பத்துப் பாட்டையும்

இசையொடும்

-

இசையோடுகூட

பண்ணில் பாட வல்லார்அவர்

-

பண்ணில் அமைத்துப் பாட வல்லவர்கள்

கேசவன் தமர்

-

எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். தம்மோடே கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த செவ்வியைச் சொல்லுகிறது முதலடி. புகழ் நண்ணி-புகழ் என்பது திருக்கல்யாண குணங்களெல்லாவற்றிற்கும் பொதுச் சொல்லாயினும், தம்பக்கலில் அவன் பண்ணின வ்யாமோஹ குணத்தை இங்குக் குறிக்கின்றதென்னலாம்.

 

English Translation

This decad of the thoughtful thousand songs by Southern city kurugur's Maran satakopan, is for the Lord of lotus eyes, Krishna who wears a fragrant Tulasi wreath.  Those who can sing it will be devotees of kesava.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain