(3070)

முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான் * உகந்துவந்து

அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி *

செடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும் *

விடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே.

 

பதவுரை

முழு ஏழ் உலகும் உண்டான்

-

ஏழுலகங்களையும் முற்ற அமுது செய்து (பிரளயங்கொள்ளாதபடி காத்தருளின பெருமான்

உகந்து

-

விரும்பி

அடியேன் உள் வந்து புகுந்தான்

-

அடியேனுள்ளத்தில் வந்து புகுந்தான்;

இனி அகல்வானும் அல்லன்

-

இனிமேல் (அப்பெருமான் அகன்று போகவும் மாட்டான்;

கீழ் மேல் எழு பிறப்பும் எமர்

-

கீழும் மேலும் ஏழ் பிறப்புக்களிலும் எம்மவர்கள்

செடி ஆர்நோய்கள் எல்லாம் துரந்து

-

பெருங்காடாகப் பரம்பின நோய்களெல்லாம் தொலையப் பெற்று

என்றும்

-

ஒரு நாளும்

விடியா

-

ஓய்வில்லாத

வெம் நரகத்து

-

கொடிய ஸம்ஸார நரகத்தில்

சேர்தல் மாறினர்

-

சேராமலிருக்கும்படி பெற்றார்கள்;

இனி

-

இப்படியான பின்பு

எனக்கு

-

எனக்கு

முடியாதது ஏன;

-

அடையப்படாதது உண்டோ, எல்லாம் ஸித்தமே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “முடியாததென் எனக்கே” என்றார்; எல்லாம் பெற்றுவிட்டீரோ? என்று அன்பர் கேட்க, என்னிடத்து எம்பெருமான் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளானவர்களுங்கூட உஜ்ஜ்விக்கப் பெற்றார்களே! இன்னமும் நான் பெறவேண்டியது என்ன இருக்கிறது என்கிறார்.

பிரளய காலத்தில் இந்த ஜதத்தையெல்லாம் தன் திருவயிற்றிலே வைத்துக் கொண்டவன். ஜகத்துத்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே, என்னை யொழியத் தனக்குச் செல்லாமை தோன்ற, மிக்க அபிநிவேகத்தோடே என்னுள்ளே வந்து புகுந்தான், ஒரு நீராகக் கலந்தான். அந்த ஜகத்து ப்ரளயங் கழிந்தவாறே அகன்ற போயிற்றே, இங்கு அப்படியன்று; இனி அகல்வானுமல்லனிவன். இதனால் எனக்குண்டான பேறு, பனை நிழல்போலே உன்னொருவனளவிலேயே விச்ரமித்துப் போவதன்று; (கீழ்மேல் எழு பிறப்பும் எமர், செடியார்நோய்களெல்லாம் துரந்து விடியாவெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்.) எம்பெருமானுக்கு என்பக்கல் அபிநிவேசம், என்னொருத்தனளவில் பர்யவஸியாதே, என்னோடு ஸம்பந்தித்தவர்கள் மீதும் வென்னங்கோத்தது என்கிறார். விடியா வெந்நரக மென்கிறது ஸம்ஸாரத்தை. அந்த நரகம் ஒருநாள் வரையிலே விடியும் இது விடியாத வெந்நரகம்.

 

English Translation

What is beyond me now, when the Lord who swallowed the seven worlds has happily entered my lowly heart and does not leave?   All my kin through seven generations before and after have been saved from the torment of endless hell.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain