(3069)

உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்

முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,

உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்

முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?

 

பதவுரை

உன்னை

-

உன்னை

சிந்தையினால்

-

நெஞ்சாலே

இகழ்ந்த

-

அநாதாரித்த

இரணியன்

-

ஹிரண்யகசிபுவினுடைய

அகல் மார்வம் கீண்ட

-

அகன்ற மார்வைக் கிழித்தவனும்

என்

-

எனக்கு அநுபவிக்க வுரியவனும்

முன்னை

-

அநாதி ஸித்தனுமான

கோள் அரியே

-

மிடுக்குடைய நரசிங்க மூர்த்தியே!

உன்னை சிந்தை செய்து செய்து

-

உன்னை இடையறாது சிந்தித்து

நெடு

-

உயர்ந்த

உன் மா மொழி

-

உன்னைப்பற்றின திருவாய் மொழியை

இசை பாடி

-

இசையுடனே பாடி

ஆடி

-

(ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக) ஆடி

என் முன்னை தீ வினைகள்

-

எனது தொல்லைப் பாபங்களை

யான்

-

நான்

முழுவேர் அரிந்தனன்

-

முழுதும் வேரோடு அறுத்தொழித்தேன்;

எனக்கு

-

அடியேனுக்கு

முடியாதது என்

-

(இனி) அஸாத்தியமான துண்டோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வாரே! உமக்கு நான் இனிச் செய்யவேண்டுவதென்ன?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேனே; இனிச் செய்யவேண்டுவதொன்றுமில்லை காண்’ என்கிறார். ஆச்ரிதன் ப்ரதிஜ்ஞை பண்ணின ஸமயத்திலே வந்து தோன்றுமியல்வினனாக நீ யிருக்கும்போது, எனக்கு என்ன குறையென்கிறார். ஆபத்துக்கு உதவுமவனாய் ப்ராப்த சேஷியாய்ப் பரம போக்யனாயிருக்கின்ற வுன்னை, அநவரதமும் ஹ்ருதயத்திலே பாவநை பண்ணி, உன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளுக்கு வாசகமான இத்திருவாய்மொழியை இசையோடே பாடி, அப்பாட்டுக்கு ஈடான அபிநயம் தோற்றும்வடி ஆடி, இப்படி மனமொழி மெய்கள் மூன்றினாலும் உண்டான போகத்தாலே என்னுடைய அநாதி பாபங்களை, ஒன்றொழியாமல் வேரோடே அறுத்தொழித்தேன், என்பது முன்னடிகளின் கருத்து.

ப்ரஹ்லா தாழ்வானுக்காக நரஸிம்ஹாவதாரம் செய்தருளினவடியை பின்னடிகளில் பேசுகிறார், சிந்தையினாலிகழ்ந்த என்றவிடத்து ஒரு விசேஷார்த்தமுண்டு ஒருவன் எம்பெருமானைத் துதி செய்கிறான், ஒருவன் நிந்தனை செய்கிறான், என்று வைத்துக்கொள்வோம் துதி செய்பவன் நாபியிலிருந்தெழுந்த அன்போடே துதி செய்கிறானே? கபடமாக மேலெழத் துதி செய்கிறானோ, என்று ஆராய்ந்து பார்ப்பதில் எம்பெருமான் ப்ரவர்த்திப்பதில்லை; பக்தனென்று கைக்கொள்வதற்கு, ஸஹ்ருதயமாகவோ அஹ்ரூதயமாகவோ துதிசெய்தாலும், ‘துதிசெய்பவனிவன்’ என்று கணக்கிட சிறிது வியாஜம் கிடைத்தாலும் போதும். நிந்தனை செய்பவனிடத்திலோ வென்னில், இவனுக்குப் பகை உள்ளுற இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்து, அப்படி யிருப்பதாகத் தெரிந்தாலொழியத் தண்டிப்பதில்லை. ஆகவே தான், இரணியனை நெஞ்சு தொட்டுப் பிளந்து உள்ளிலும் ஆராய்ந்து பார்த்தானாம். பகவத் விஷயத்தில் அவனுக்கு இருந்து பகை மேலெழவன்று, உள்ளுறவே யிருந்ததாம். அது தெரிந்த பின்பே, அவனைத் தண்டிக்கலானான். இது தோன்ற, சிந்தையினால் என்று ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தாரென்க. எம்பெருமானுக்கு அநுக்ரஹத்திலேயே அதிக நோக்கு என்பது இதனால் பெறப்படும்.

 

English Translation

O My springing man-lion fore apart the hefty chest of the evil-thinking Hiranya!  Thinking of you constantly, I have sung and danced my great exalted songs in praise of you.  Now my age-old karmas are destroyed by the root. What can I not do?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain