(3068)

உய்ந்துபோந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்

தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,

ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,

சிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.


பதவுரை

பால் கடல்

-

திருப்பாற்கடலிலே

ஐந்து

-

ஐந்தாகிய

பை தலை

-

படங்களோடு கூடிய சிரங்களையுடையவனாய்

ஆடு

-

ஆடுகின்ற

அரவு

-

ஆதிசேஷனாகிற

அணை

-

சயனத்தின் மீது

யோக நித்திரை

-

யோகநித்ரையிலே

மேவி

-

பொருந்தி

சிந்தை செய்த

-

லோபரக்ஷண சிந்தனை பண்ணின

எந்தாய்

-

என் ஸ்வாமியே!

உன்னை

-

உன்னை

சித்தை செய்து செய்து

-

நிரந்தரமாகச் சிந்தித்து

உய்ந்து

-

உஜ்ஜீவனம் பெற்று

உலப்பு இலாத

-

முடிவில்லாத

வெம்

-

கொடிய

என் தீவினைகளை

-

எனது பாபங்களை

நாசம் செய்து

-

தொலைத்து

உனது

-

உன்னுடைய

அந்தம் இல்

-

முடிவில்லாத

அடிமை

-

கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை

அடைந்தேன்

-

அடைந்தவனான நான்

விடுவேனோ

-

இனிவிட்டு நீங்குவேனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு  ப்ரஸக்தி லேசமுமில்லையென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார்.

உய்ந்து போந்து என்றது ஸ்வரூபலாபம் பெற்றமை சொன்னபடி. இதற்குமுன், “அஸந்நேவ ஸ பவதி” என்னும்படி கிடந்த நான், இப்போது சேதநகோடியிற் புகுந்தேனென்றபடி. அஸந்தான நிலைமை தவிர்ந்து ஸத்தான நிலைமை யடைந்தவாறே, பாபங்கறெல்லாம் தொலையப் பெறுகையாலே என் உலப்பில்லாத வெந்தீவினைகளை நாசஞ்செய்து என்கிறார். உலப்பு-முடிவு; எத்தனை காலமனுபவித்தாலும் முடிவு பெறமாட்டாத கொடுவினைகளெல்லாம் தொலையப்பெற்று,’என்றவாறு. உனது அந்தமில் அடிமை யடைந்தேன் விடுவேனோ?-ஆத்மா வுற்றவரையில் கைங்காரியம் செய்வது தவிர வேறுவிதமர்ன போதுபோக்கைக் கொள்வதில்லை யென்று, திண்ணிய வுறுதி கொண்ட நான், எவ்விதத்திலும் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தியில்லை யென்றபடி. அந்தம் இல் அடிமை-ஆத்மஸ்வரூபத்திற்கு அந்தம் இல்லாமையாலே, ஸ்வரூபாநுபந்தியான கைங்காரியத்திற்கும் அந்தமில்லை யென்க.

அடிமையின் சுவையை யறிந்த திருவனந்தாழ்வான் உன்னை விடாதது போலவே, நானும் விடமாட்டேனென்ற கருத்துப்படப் பின்னடிகள் அருளிச்செய்கிறார். பெருவெள்ளம் பெருகப்புகுந்தால், பல வாய்க்கால்கள் உண்டாவதுவோலே, பகவதநுபவத்தால் வந்த ஆனந்த மிகுதிக்குப் போக்குவீடாக பல தலைகளiயுடையனாய், மதுபானத்தினால் மதித்தவர்கள் போல் ஆடாநிற்பவனாய், மென்மை குளிர்ச்சி நறுநாற்றம்முதலிய நலங்கடையுடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற் கடலிலே, ‘ஸகல ப்ராணிகளும் துயர்தீர்ந்து உய்யும் வகை என்னோ!’ என்று யோக நித்ரையிலே யிராநின்ற எம்பெருமானே, எங்களைப்பற்றி நீ நினைத்திருப்பதுபோலே, உன்னைப்பற்றி நான் இடைவிடாது நினைத்திருப்பவனாதலால், ஒரு நொடிப்பொழுதும் உன்னைவிட ப்ரஸக்தி யில்லைகாண், என்றாராயிற்று.

 

English Translation

My Lord reclining on the hooded snake in the Mil Ocean, engaging in Yogic thought!  Constantly I thought of you; destroying my ageless karmas, I have saved myself,  Now that I am in your service, will I ever let you go?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain