(3065)

சிக்கெனச்சிறுதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்

ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,

மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமர்ய், எங்கும்

பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே.

 

பதவுரை

சிறிது ஓர்இடமும்

-

மிக அற்பமான இடமும்

புறப்படா

-

வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி)

உலகுகள்

-

உலகங்களை

தன் உள்

-

தனக்குள்ளே

ஒக்க

-

சமமாக

விழுங்கி

-

அமுது செய்து (அந்தத் திருக்கோலத்துடனே)

சிக்கென

-

உறுதியாக

புகுந்தான்

-

என்னுள் பிரவேசித்தான்

புகுந்ததன்பின்

-

பிரவேசித்தபின்

மிக்க

-

மிகுந்த

ஞானம் வெள்ளம்

-

ஞானப்பிரவாஹமாகிற

சுடர்

-

ஒளியுள்ள

விளக்கு ஆய்

-

தீபமாகி

துளக்கு அற்று

-

(நான் ஒருகால் விட்டுவிடுவேனோ என்கிற) ஸந்தேஹம் தீர்ந்து

அமுதம் ஆய்

-

அம்ருதமர்கி

என்

-

எனக்கு விதேயனான

பைந் தாமரை கண்ணன்

-

அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய பெருமான்

எங்கும்

-

எவ்விடத்திலும்

பக்கம் நோக்க அறியான்

-

திரும்பிப் பார்ப்பது மின்றியேயிராநின்றான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார்.

“உலகுகளொக்கவே விழுங்கிப் புகுந்தான்” என்ற சொல்நயத்தை நோக்கி ஆறாயிரப்படியில் பிள்ளானருளிச் செய்கிறார்-“ஜகத் ஸ்ருஷ்ட்யாதி அந்ய பரதையைப் போக்கிக் கொண்டு என்னுள்ளே புகுந்தான்” என்று. அதை அடியொற்றி ஈடு முப்பத்தாறாயிரத்திலும்- “நாம் ஆழ்வாரை யநுபவிக்கும்போது செருப்புவைத்துத் திருவடிதொழப்புக்காப்போலே யாகவொண்ணாது என்றுபார்த்து ஜகத்ரக்ஷணத்துக்கு வேண்டும் ஸம்விதாநமெல்லாம் பண்ணி அநந்யபரனாய் அநுபவித்து, போகமாட்டாதேயிருந்தான்; ராஜாக்கள் அந்த; புரத்திலே புகுவது நாட்டுக்கணக்கு அற்ற பின்பிறே” என்றருளிச் செய்தார். பாசுரத்தில் உலகுகளை விழுங்கினது மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும், ஜகத்ரக்ஷணார்த்தமர்க எம்பெருமான் செய்யும் ஸகல காரியங்களுக்கும் அது உபலக்ஷணமாக இங்குக் கொள்ளத்தக்கது. உலகுக்குச் செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் ஒருவாறு செய்து முடித்துக்கொண்டு க்ருதக்ருத்யனாய், ஆழ்வாரை யநுபவிக்கப் புகுந்தானாம்.

அங்ஙனம் புகுந்தபின்பு, எம்பெருமானுக்குண்டான வைலக்ஷண்யம் பின்னடிகளில் கூறப்படுகின்றது. அவன்தான் இயற்கையிலேயே ஸர்வஜ்ஞனயிருக்கச் செய்தேயும் ஆழ்வாரோடு கலப்பதற்கு முன்பு அந்த ஸர்வஜ்ஞத்வம் சிறிது சுருங்கியிருந்து பிறகு விரிந்ததுபோலும் பெரிய பிராட்டியர் வந்து திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் புரிந்து பார்க்கவறியாதபடி இங்கே அத்யந்தம் ஆழங்காற்பட்டான்.

எங்கும் பக்கநோக்கறியான் என்றவிடத்து ஈட்டில் ஒரு ஜதிஹ்ய ஸம்வாதம் காட்டப்படுகிறது அதாவது-மணக்கால்நம்பி ஆளவந்தாரை விசேஷகடாக்ஷம் செய்தருளின பின்பு ஒருநாள் “குருகை காவலப் பனிடத்திலே யோகரஹஸ்ய முண்டு” என்று ஆளவந்தார்க்குச் சொல்ல, அவரும் அப்பன் ஸ்ரீபாதத்திலே சென்று அதைப் பெறவேணுமென்று விரும்பி அவரெழுந்தருளியிருக்குமிடமான கங்கைகொண்ட சோழபுரத்தேறச்செல்ல, அப்பனும் அங்கே ஒரு குட்டிச்சுவாரிலே யோகநிரதராய் எழுந்தருளியிருக்க, அப்போது அவர்க்கு ஸமாதிபங்கம் பண்ணவொண்ணாதென்றெண்ணிய ஆளவந்தார் அந்தச் சுவர்க்கு இப்பால் நிற்க, யோகநிஷ்டரான அப்பனும் திரும்பிப் பார்த்து ‘இங்குச் சொட்டைக் குலத்தார் ஆரேனும் வந்தாருண்டோ?’ என்று கேட்க, உடனே ஆளவந்தார், அடியேன் என்று எதிரே சென்று தண்டன் ஸமாப்பித்து, ‘அடியேன் இங்கு விடைகொண்டது தேவரீருக்குத் தெரியாதபடி பின்னை நிற்க, தேவரீர் அறிந்தது எங்ஙனே?’ என்று கேட்க, அதற்குக் குருகை காவலப்பனருளிச் செய்த வார்த்தை-“எம்பெருமானும் நானுமாக அநுபவித்துக் கொண்டிருந்தால் பெரிய பிராட்டியார் திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் அவளது முகத்தையுங்கூடப் பாராத ஸர்வேச்வரன் என் கழுத்தை யமுக்கி நாலுமூன்றுதரம் நீரிருந்த பக்கமாக எட்டிப்பார்த்தான்; அப்படி அவன் பார்க்கும்போது சொட்டைக் குலத்திலே சிலர் வந்திருக்கவேணும் என்றிருந்தேனகாணும்” என்றார். ஸ்ரீமந்நாத முனிகளின் குலம் சொட்டைக்குல மெனப்படும். ஆழ்லார்பக்கலில் எம்பெருமான் பண்ணியிருந்த விசேஷ கடாக்ஷம் அவர்க்குப் பிறகு ஸ்ரீமந்நாதமுனிகளின் திருவம்சத்தில் பெருகத் தொடங்கிற்றென்பது இங்கு அறியத்கக்கது. “எங்கும் பக்க நோக்கறியான்” என்ற விடத்திற்கு இது மிகப்பொருத்தமர்ன ஸம்வாதம்

 

English Translation

My Lord of lotus eyes, swallower all within a trice, container of all the worlds in himself, has entered me. An un-quivering flame of effulgent knowledge, he is my ambrosia bottled inside me!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain