(2996)

நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,

கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,

ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,

மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.

 

பதவுரை

ஒற்றை பிறை அணிந்தாலும்

-

சந்திரசேகரனாகிய சிவபெருமானும்

நான்முகனும்

-

பிரமதேவனும்

இந்திரனும்

-

தேவேந்திரனும்

மற்றை அமரரும் எல்லாம்

-

மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும்

வந்து

-

கிட்டி,

நெற்றியுள்

-

நெற்றியில் படிந்திருந்து

நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி

-

என்னையாள்கின்ற மலரொழுங் கமைந்த திருவடிகளை (த்தங்கள் தலையிலே) சூடிக்கொண்டு

கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை

-

செறிந்த திருத்துழாயாகிற வளையமணிந்த எம்பெருமானை

தொழுவார்

-

வணங்காநிற்பர்கள்; (அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான்)

எனது உச்சி உளான்

-

என் தலையின்மேலேயானான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் சிவனிந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய்த் தடுமாறும்படி யிருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்துவந்து என் தலைமீது ஏறிவிட்டானென்கிறார்.

நெற்றியுள் நின்று என்னை யாளும் என்பது: நிரைமலர்ப்பாதங்களுக்கு விசேஷணம். என்னுடைய நெற்றியிலே (ஊர்த்துவ புண்ட்ரரூபமாக) இருந்து கொண்ட என்னை ஸ்ரீவைஷ்ணவதிலகனாக ஆக்கிய திருவடிமலர்களைத் தாங்கள் சூடிக்கொண்டு ஒற்றைப் பிறையணிந்தானும் நான்முகமிந்திரனும் மற்றையமரருமெல்லாம் கண்ணபிரானைத் தொழுவார் என்கிறார். இதனால் ஆழ்வார் ஹரிபாதாகாரமான ஊர்த்துவபுண்ட்ரமே சாத்திக் கொண்டிருந்தவர் என்பதும்,அது தானும் ஏகபாதாகரமன்று, பாதத்வயாகாரம் என்பதும் ஸ்பஷ்டமாகும்.

 

English Translation

The crescent-crowned Siva, the four-faced Brahma, Indra and all the other gods place their heads of his lotus feet and worship him. The Tulasi wreathed Krishna, my lord protecting me from my forehead has risen to my head!

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain