nalaeram_logo.jpg
(2992)

மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அஃதே,

காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,

சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,

தூயன் துயக் கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.

பதவுரை

மாயன்

-

ஆச்சரியனான எம்பெருமான்

என் நெஞ்சில் உள்ளான்

-

எனது நெஞ்சில் இருக்கின்றான்;

மற்றும் யவர்க்கும்

-

வேறு யாருக்கேனும்

அஃதே

-

அப்படியிருப்பதுண்டோ? (இல்லை;)

காயமும்

-

உடம்பும்

சீவனும்

-

உயிரும்

தானே

-

தானேயாய்

காலும்

-

காற்றும்

எரியும்

-

நெருப்பும்

அவனே

-

அவன்தானேயாய்,

சேயன்

-

(சிலர்க்கு) தூரஸ்தனாய்

அணியன்

-

(சிலர்க்கு) ஸமீபஸ்தனாய்

யவர்க்கும்

-

எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்

சிந்தைக்கும் கோசரம் அல்லன்

-

மனத்திற்கும் எட்டாதவனாய்

தூயன்

-

பரிசுத்தனாய்

தூயக்கன் மயக்கன்

-

(அநுக்ரஹபாத்திரமாகாதவர்களுக்கு) ஸந்தேஹரூபமாயும் விபரீத ரூபமாயுமிருக்கும் ஞானங்களைப் பிறப்பிப்பவனான எம்பெருமான்

என்னுடைய தோள் இணையான்

-

எனது இரண்டு தோள்களிலுமுளனானான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநுகூலர்க்கு எளியனாய், பிரதிகூலர்க்கு அரியவனான எம்பெருமான் எனது மார்பிலிருந்து தோளிணைக்கு ஏறிவிட்டானென்கிறார். கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மறுபடியும் “மாயனென்னெஞ்சினுள்ளான்” என்று அநுபாஷணஞ் செய்தது ஈடுபாட்டின் மிகுதியைக் காட்டும். இது என்ன பெறாப்பேறு! என்று தலைசீய்த்துச் சொல்லுகிறபடி. (மற்றும் யவர்க்குமஃதே) என்னைத் தவிர வேறு யார்க்காவது இப்படிப்பட்ட பேறு கிடைத்ததுண்டோ? எனக்கே இப்பேறு அஸாதாரணம் என்றவாறு.

காயமும் என்று தொடங்கி மயக்கன் என்னுமளவும் எம்பெருமானுடைய படிகளைப் பேசி யநுபவிக்கிறார். தேவ மநுஷ்யாதி சரீரங்களும் அந்தந்த சரீரங்களிலுள்ள ஆத்மாக்களும் தாளிட்ட வழக்கமாம்படியிருக்கப் பெற்றவனாய், வாயு தேஜஸ்ஸு முதலிய பஞ்சபூதங்களும் அப்படியே தானிட்ட வழக்காம் படியிருக்கப்பெற்றவனாய், தம் முயற்சியாலே காண நினைப்பார்க்கு எட்டாதவனாய், நிர்ஹேதுக விஷயீகார பாத்திர பூதர்களுக்குக் கைச்சரக்காக எளியனாயிருப்பவன்.

சேயன் என்றதற்கு விவரணம் “யாவர்க்குங் சிந்தைக்குங் கோசரமல்லன்” என்பது; அணியன் என்றதற்கு விவரணம் “தூயவன்” என்பது. தம் முயற்சியாலே காணவிருப்பார் எத்தனையேனும் மஹான்களாயினும் அவர்களது கண்ணுக்குமாத்திரமே யன்றியே மநோரதத்திற்கும் விஷயமாகான். (தூயன்) இங்குத் தூய்மையாவது யசோதைப் பிராட்டிபோல்வார்க்குக் கட்டவுமடிக்கவும் எளியனாந்தன்மை.

துயக்கன் மயக்கன் = துயக்கு என்று ஸந்தேஹத்திற்குப் பெயர்; மயக்கு என்று விபரீதஜ்ஞானத்திற்குப் பெயர்; ஸந்தேஹரூப ஜ்ஞானத்திற்கும் விபரீத ஜ்ஞானத்திற்கும் விஷயாமயிருப்பவன் என்றபடி. எம்பெருமானார் தரிசனத்திலுள்ளவர்கள் எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளை உள்ளது உள்ளபடியாகவும் ஸந்தேஹமில்லாமலும் நன்கு அறிந்துகொண்டிருக்க, இதர பாஹ்ய குத்ருஷ்டி தர்சனங்களிலுள்ளார் பலர் ஸந்தேஹமேபட்டுக்கொண்டும் விபரீதமாகவேயுணர்ந்து கொண்டும் இருக்கின்றார்களன்றோ; இங்ஙனம் சிலரை வாழ்வித்துச் சிலரை ஸம்சய விபர்யய ஞானங்களாலே மாய்ப்பவன் எமபெருமான் என்றபடி. இங்ஙனஞ் செய்வதும் அவரவர்களது கருமாதீனமாதலால் எம்பெருமானுக்கு குறையொன்றுமில்லையென்க.

இவ்விடத்து அரும்பதவுரையில் ஓர் ஐதிஹ்யம் எழுதப்பட்டுள்ளது; அது வருமாறு:- முற்காலத்தில் பட்டருடைய காலக்ஷேப கோஷ்டியில் சாஸ்த்ஜ்ஞனான ஒரு பிராமணன் பலகாலும் வந்து போவதுண்டு; அவனைக் கண்டால் பட்டர் ஆதரவு காட்டாமல் ‘வந்தாயோ, போனாயோ’ என்று ஸாமாந்யமாக வியவஹரித்தருளிச்செய்வர். சாஸ்த்ரஜ்ஞானம் முதலியன இல்லாத ஒரு ஸ்ரீவைஷ்ணவரும் வந்து போவதுண்டு; அவரைக் கண்டால் மிகவும் அருள்காட்டி ஆதரித்துக் கொண்டெழுந்தருளியிருப்பர். இவ்விரண்டையும் பாகாலுங் கண்டிருப்பாரொருவர் ஒருநாள் பட்டரைவந்து ஸேவித்து, ஸ்வாமிந்! தேவரீருடைய கோஷ்டிக்குப் பல காலும் வந்து போகிற சாஸ்திரி மஹாவித்வான், மிகவும் ப்ரஸித்தர்; அவர் வந்தால் ஸாமாந்யமாக வ்யவஹரித்தருளுகிறது; மற்றொரு ஸாது ஸ்ரீவைஷ்ணவர் வரக்கண்டால் மிகவும் பிரதிபத்திபண்ணியருளுகிறது; பஹுமானிக்க வேண்டுமிடத்தில் ஸாமாந்ய வ்யவஹாரமும், உதாஸித்திருக்க வேண்டுமிடத்தில் பஹுரமாநாதிசமும் செய்தருள்வதற்குக் காரணமருளிச் செய்யவேணும்’ என்று கைகூப்பி நின்று கேட்க; அதற்கு பட்டர், ‘அவர்களிருவரும் எப்போதும்போலே நாளையும் வருவர்களே; அப்போது நீரும் பார்த்திரும்; வாசியை நீரே அறிந்துகொள்வீர்” என்ன, அவரும் அப்படியே பார்த்திருக்க, மறுநாள் காலை அந்த அந்தணன் முதலில் வந்து ஸேவிக்க, பட்டார் அவனை எப்போதும்போலே வினவியருளி ‘நீர் ஆரைத்தான் பரதத்வமாக அறுதியிட்டிப்பது?’ என்று கேட்க, அவன்; சில ப்ரமாணங்கள் ப்ரஹ்மாவைப் பரதத்வமாகப் பேசுகின்றன; சில ப்ரமாணங்கள் ருத்ரனைப் பேசுகின்றன; சில ப்ரமாணங்கள் விஷ்ணுவைப் பேசுகின்றன; ஆகவே ப்ரமாணங்களெல்லாம்  இப்படி வியாகுலங்களாயிருக்க, நம்மால் தத்வநிர்ணம்பண்ணிப்போமோ? அவர்களுடைய அபிõமனத்தின்படியே சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்’ என்று விடையளிக்க, அவனைப் போகவிட்டு, பிறகு அந்த ஸாது ஸ்ரீவைஷ்ணவர் வந்தவாறே அவரை நோக்கி, ‘தேவரீர் ஆரைத்தான் பரதத்வமென்றிருப்பது?’ என்று பட்டர் கேட்க, ‘தேவரீர் ச்ரிய; பதி நாராயணனே பரதத்வமென்றும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றும் பலகாலும் அருளிச்செய்யுமே, அது தவிர அடியேன் வேறொன்றறியேன்’ என்ன, அவரையும் அனுப்பிவிட்டு, கேள்விகேட்ட ஸ்வாமியை நோக்கி, ‘இவருடைய வாசியையுங் கண்டீரா? ஆரை பஹுமாநிக்க ப்ராப்தம்? என்ன, அவரும் விஸ்வமயப்பட்டுப்போனார்- என்பதாம். “தூயன் துயக்கன் மயக்கன்’ என்ற விடத்திற்கு இது ஏற்ற ஸம்வாதம்.

English Translation

The Lord in my bosom is the body and spirit of all, pure enhanting and deceitful; wind and fire too are him. Lord afar and Lord near, whom none can reach through, he has ascended my shoulders; who can know this wonder?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain